ஆஸ்துமா செயல்ப்பாட்டுத் திட்டம்

Asthma Action Plan (Tamil)

யாருக்கு:

யாரால் தயாரிக்கப்பட்டது:

திகதி:

ஆஸ்துமாவை நன்கு கட்டுப்படுத்துவதென்றால்:

 • பகல் நேரத்தில் இருமல் அல்லது வேறு அறிகுறிகள் இல்லாதிருத்தல்
 • இரவிலும் அதிகாலையிலும் இருமல் அல்லது அறிகுறிகள் இல்லாதிருத்தல்
 • வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியதாக இருத்தல்
 • வாரத்தில் 3 தடவைகளுக்குக் குறைவாக நிவாரணி மருந்து தேவைப்படுதல்
 • சாதாரணமான அல்லது கிட்டத்தட்ட சாதாரணமான நுரையீரல் செயற்பாடு
 • சாதாரணமான நுரையீரல் செயற்பாடு
 • ஆஸ்துமா தாக்குதலினால் மருத்துவரிடம் அல்லது அவசரப் பிரிவிற்கு செல்லவேண்டிய தேவை இல்லாதிருத்தல்
 • ஆஸ்துமா தாக்குதலினால் அவசரப் பிரிவிற்கு செல்லவேண்டிய தேவை இல்லாதிருத்தல்

உங்கள் பிள்ளை பீக் ஃப்ளோ மீட்டரொன்றை உபயோகித்தால், ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்துவதில் பீக் ஃப்ளோ வாசிப்புகள் முக்கியமான பாகம் வகிப்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும், குறிப்பாக அவர்கள் ஆஸ்துமா அறிகுறிகளை எல்லா நேரங்களிலும் அவதானிக்காமல் இருந்தால்.

தினசரி மருந்துகள்

உங்கள் பிள்ளை நலமாக உணரும்போது தினமும் எடுக்கப்படவேண்டும்.

கட்டுப்படுத்தி:

1.                                                                         பஃப்ஸ்            தடவைகள் நாளொன்றுக்கு
2.                                                                          பஃப்ஸ்            தடவைகள் நாளொன்றுக்கு
3.                                                                          பஃப்ஸ்            தடவைகள் நாளொன்றுக்கு

உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா மோசமடையும்போது

உங்கள் பிள்ளைக்கு தடிமலிருக்கும்போது அல்லது ஆஸ்துமா தீவிரமடையும்போது (இருமல், மூச்சிரைப்பு, சுவாசிப்பதில் சிரமம்), மருந்து மேலும் அதிக தடவைகள் எடுக்கப்படவேண்டும். இந்த அறிவுரைகளைப் பின்பற்றவும்.

கட்டுப்படுத்தியை அதிகரிக்கவும்:

இந்த மருந்திற்கு:___________________________

____ நாட்களுக்கு ____ தடவைகள் நாளொன்றிற்கு ____ பஃப்களை எடுக்கவும்.

நிவாரணி:

அறிகுறிகளுக்கு ஒவ்வொரு 4 மணி நேரங்களுக்கு வரை ____ பஃப் எடுக்கவும்.

உடற்பயிற்சிக்கு முன் நிவாரணி மருந்து பாவனை: ஆம் / இல்லை

வாய்வழி ஸ்டேரொய்டுகள்:

வகை:

டோஸ்:

எப்போது:

அவசர நிலையின்போது

கீழ்க்காணும் நிலைகளில் ஒன்று தென்படும்போது உடனடியாக மருத்துவரிடம் செல்லவும்:

 • நிவாரணி மருந்து வேலை செய்யவில்லை அல்லது 4 மணி நேரங்கள் வரை உதவவில்லை.
 • 2 நாட்களுக்குப் பின்பு பிள்ளையின் நிலை முன்னேறவில்லை.
 • 2 அல்லது 3 நாட்களுக்குப் பின்பு பிள்ளையின் நிலை முன்னேறவில்லை.
 • உங்கள் பிள்ளையின் நிலைமை மோசமடைகிறது.

கீழ்க்காணும் நிலைமைகளில் ஒன்று தென்படும்போது அருகிலுள்ள அவசர மருத்துவப் பிரிவிற்குச் செல்லவும்.

 • அறிகுறிகள் காரணமாக உங்கள் பிள்ளையால் உண்ண, உறங்க அல்லது பேச முடியவில்லை.
 • உங்கள் பிள்ளையின் சுவாசிக்கும்போது குலுங்குவதுபோல் தெரிகிறது, தொண்டையில் அல்லது விலா எலும்பிற்குக் கீழ் உள்வாங்குகிறது.
 • மேலதிக நிவாரண மருந்து உதவவில்லை.

Sharon Dell, BEng, MD, FRCPC

Bonnie Fleming-Carroll, MN, ACNP, CAE

Jennifer Leaist, RN, BScN

Rishita Peterson, RN, BScN, MN

Gurjit Sangha, RN, MN

James Tjon, BScPhm, PharmD, RPh

1/29/2009


Notes: