கறைப்படுத்துதல்

Soiling (encopresis) in children [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் பிள்ளையால் மலங்கழித்தலைக் கட்டுப்படுத்தமுடியாததற்கான அறிகுறிகள் மற்றும் காரணங்களை இலகுவாக விளங்கிக் கொள்ளக்கூடிய ஒரு கண்ணோட்டம். உங்கள் பிள்ளையின் எதிர்கால விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு உங்கள் பிள்ளைக்கு எப்படி உதவி செய்யலாம் என்பதற்கான குறிப்புகளும

கறைப்படுத்துதல் என்றால் என்ன?

உங்கள் பிள்ளையால் மலங்கழித்தலைக் கட்டுப்படுத்த முடியாதிருக்கும்போது கறைப்படுத்துதல் ஏற்படுகிறது. பிள்ளை தனது காற்சட்டையைக் கறைப்படுத்துகிறான், அல்லது கழிப்பறையைச் சென்றடைவதற்கு முன்னால் ஒரு மலங்கழிக்கும் "விபத்து" ஏற்படுகிறது. கறைப்படுத்துதல் மலவீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது.

கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சி கொடுக்கப்பட்ட அநேக பிள்ளைகளுக்கு எப்போதாவது மலங்கழிக்கும் விபத்து ஏற்படுகிறது. எப்போதாவது ஏற்படுகிற விபத்தைப் பற்றி, விசேஷமாக 2 முதல் 4 வயது வரை, கவலைப்படத் தேவையில்லை. கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சி கொடுக்கப்பட்ட பின்னர், உங்கள் பிள்ளை தொடர்ந்து கறைப்படுத்தும்போது அல்லது அடிக்கடி கறைப்படுத்தத் தொடங்கும்போது கவலைகள் எழும்பும்.

மேலதிக தகவல்களுக்குத் தயவுசெய்து, கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சி ஐப் பார்க்கவும்.

கறைப்படுத்துவதற்கான காரணங்கள்

கறைப்படுத்தலுக்கான மிகப் பொதுவான காரணம் மலச்சிக்கலாகும். பிள்ளைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும்போது, கடினமான மலத்தைக் கழிப்பது கஷ்டமானதாகவும் வேதனையளிப்பதாகவும் இருக்கும். கடினமான, தக்கவைக்கப்பட்ட மலத்தைச் சுற்றி, மற்றும் மலவாசலுக்கு வெளியே மலத் திரவம் கசியும்.

சில பிள்ளைகள், விசேஷமாக, நடை குழந்தைகள், கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சி பெறுவதற்குத் தயாராக இல்லாததினால், அல்லது மலச்சிக்கல் காரணமாக வேதனையுடன் மலம் கழிக்கவேண்டியிருப்பதால், மலத்தை கழிக்காது தக்க வைத்திருப்பார்கள். இது மலத்தைக் கழிக்காது தக்க வைத்தல், மலச்சிக்கல், மற்றும் கறைப்படுத்துதல் போன்ற ஒரு கடுமையான வட்டத்தை உருவாக்கும்

மற்றொரு காரணம் நோயுற்றிருப்பதாகும். வயிற்றோட்டமுள்ள பிள்ளைகள் மலம் கழிப்பதைக் கட்டுப்படுத்த மிகவும் சிரமப்படுவார்கள். பொதுவாக வயிற்றோட்டம் குணப்படும்போது இந்தச் சிரமம் மாறிவிடும்.

சில வேளைகளில், கறைப்படுத்தலானது கடுமையான உணர்ச்சி அல்லது நடத்தைக் கோளாறுகளோடு சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது.

மிகவும் அரிதாக, நரம்பு சம்பந்தமான அல்லது முதுகுத் தண்டு நாண் நோய்களும் கறைப்படுத்துதலை ஏற்படுத்தலாம். இந்தப் பிள்ளைகளுக்கு சிறுநீர் கழிக்கும் விபத்து, செயற்திறமையின்மை அல்லது கால்களில் பலவீனம் என்பனவும் இருக்கலாம்.

எப்போது மருத்துவ உதவியை நாடவேண்டும்

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால் உங்கள் பிள்ளையின் மருத்துவரைச் சந்திக்கவும்:

  • சிறுநீர் கழித்தல், நடத்தல் அல்லது சமநிலையில் நிற்றல் என்பனவற்றிலும் கஷ்டம் இருக்கிறது (இது ஒரு அவசர நிலை)
  • பொருத்தமற்ற இடங்களில் மலங்கழிக்கிறான் அல்லது கறைப்படுத்தப்பட்ட உள்ளாடையை மறைத்துவைக்கிறான்
  • மிகவும் அடிக்கடி அல்லது தொடர்ந்து கறைப்படுத்துகிறான்
  • 3 அல்லது 4 வயதுக்குப் பின்னரும் கறைப்படுத்துகிறான்
  • ஏற்கனவே கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சி கொடுத்த பின்னர் மற்றும் மலங்கழித்தலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னரும் கறைப்படுத்துதலைத் தொடங்குகிறான்

உங்கள் பிள்ளையின் மருத்துவர் உடல்ரீதியான பரிசோதனைகளைச் செய்வார் மற்றும் சில பரிசோதனைகளைச் செய்யும்படி கட்டளையிடலாம். கறைப்படுத்துதலுக்கு உடல்ரீதியான காரணம் எதுவுமில்லாவிட்டால், உங்கள் மருத்துவர் கழிப்பறை உபயோகிப்பதற்குப் பயிற்சி கொடுப்பதற்கான சில குறிப்புகளைப் பரிந்துரைப்பார். மலவீழ்ச்சியுள்ள ஒரு பிள்ளை ஒரு குழந்தை மனநோய் மருத்துவரிடம் அனுப்பிவைக்கப்படுவான்.

உங்கள் பிள்ளை மலத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நீங்கள் எப்படி உதவி செய்யலாம்

மலச்சைக்கலைத் தவிர்ப்பது மற்றும் குணப்படுத்துவது

உங்கள் பிள்ளைக்கு மலச்சிக்கல் இல்லாதிருக்க நிச்சயமாயிருக்கவும். அவனுக்கு கழிவறையை உபயோகிப்பதற்கான பயிற்சி பெறுவதில் அக்கறை இல்லாவிட்டால், பொறுமையாக இருந்து அவனுக்கு கால அவகாசம் கொடுக்கவும். உங்கள் பிள்ளையைத் தண்டிக்கும்படி, மருத்துவர்கள் பரிந்துரைக்கமாட்டார்கள். கறைப்படுத்துதலைத் தடுப்பதற்கு, அவமானப்படுத்துதல் மற்றும் கோபப்படுதல் பலன் தரும் வழிகள் அல்ல.

வேதனைப்படுத்துபவர்களாயல்ல, உதவுபவர்களாயிருக்கவும்

குடும்பத்திலுள்ள மற்ற அங்கத்தினரை ஆதரவளிப்பவர்களாயிருக்கும்படி உற்சாகப்படுத்தவும். ஆதரவளிப்பதற்கு ஒரு வழி, கவலைகளை முடிந்தளவுக்குக் குறைப்பதாகும். வேறொரு தெரிவு, உங்கள் பிள்ளையை அடிக்கடி மலம் கழிக்கும்படி உற்சாகப்படுத்துவதுதான். உங்கள் பிள்ளை டயபரில் மலங்கழிக்கவிரும்பினால், அவ்வாறே செய்யட்டும்.

ஒரு வழக்க முறையை நிலை நாட்டவும்

கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சியின் ஒரு குறிப்பு, உங்கள் பிள்ளை ஒவ்வொரு முறையும் உணவருந்திய பின்னர் கழிப்பறையில் 5 நிமிடங்களுக்கு இருக்க வைப்பது ஆகும். உங்கள் பிள்ளை நேரத்தை நல்லமுறையில் கடத்துவதற்காக ஒரு புத்தகத்தை வாசிக்கக் கொடுக்கலாம் அல்லது கழிப்பறையில் ஒரு இசையை இசைக்கச் செய்யலாம். உங்கள் பிள்ளை கழிப்பறையில் மலங்கழிக்கும் ஒவ்வொரு முறையும் நம்பிக்கையுள்ள பிரதிபலிப்பைக் காண்பிக்கவும். இந்த நடத்தைக்காக ஆதரவு காட்டவும், புகழவும் மற்றும் வெகுமதி வழங்கவும். இந்த நடைமுறையை 3 முதல் 6 வாரங்களுக்கு, அல்லது கறைப்படுத்துவதை நிறுத்தும்வரை தொடர்ந்து பின்பற்றவும்.

முக்கிய குறிப்புகள்

  • உங்கள் பிள்ளையால் மலங்கழித்தலைக் கட்டுப்படுத்த முடியாதிருக்கும்போது அல்லது அவனுக்கு மலச்சிக்கல் இருப்பதால் மலத்திரவம் கசியும்போது, கறைப்படுத்துதல் ஏற்படுகிறது.
  • கறைப்படுத்துதலுக்குப் பிரதான காரணம் மலச்சிக்கல். நோய்வாய்ப்படுதல், மன உளைச்சல் மற்றும் கழிப்பறையை உபயோகிப்பதற்கான பயிற்சியில் சிரமம் என்பன கறைப்படுத்துதலுக்கான வேறு காரணங்கள்.
  • உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது அறிகுறிகள் இருந்தால், அல்லது பொருத்தமற்ற இடங்களில் மலங்கழித்தால், அல்லது கறைப்படுத்துதல் நிவாரணமடையாவிட்டால் உங்கள் பிள்ளையின் மருத்துவரைச் சந்திக்கவும்.
​​
Last updated: மே 07 2010