தலைப் பேன்

Head lice [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

தலைப் பேன்கள் என்றால் என்ன?

வெள்ளைநிற மேற்பரப்பில் வெவ்வேறு அளவான பேன்கள் மற்றும் தனித் தலைமயிர்

பேன்கள் தலையின் மேற்பரப்பில் வாழும் சிறிய, சாம்பல் நிறமான, தட்டையான, சிறகுகளற்ற பூச்சிகள். ஒரு வளர்ந்த பேன் 2 மிமி முதல் 4 மிமி வரை நீளமானது.

பேன்கள் மண்டையிலிருந்து இரத்தத்தை உறிஞ்சுகிறது. உணவு மற்றும் வசிப்பிடத்துக்காக மண்டையில் மிக நெருக்கமான இருப்பதன்மூலம் உயிர் வாழ்கின்றன. வளர்ச்சியடைந்த பேன்கள் முட்டைகளை (ஈர்) இடும். அவை முடிக்கால்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்.

தலைப்பேன்கள்கள் உள்ள பிள்ளைகள் பெரும்பாலும், 20 க்கும் குறைவான முதிர்ந்த தலைப்பேன்கள்களைக் கொண்டிருப்பார்கள். அவற்றிற்குச் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அவை 3 முதல் 4 வாரங்கள் வரை வாழும்.

பேன்களால் பீடிக்கப்படுவது பெடிக்குலொஸிஸ் (பேன் நோய்) என்றும் அழைக்கப்படும்.

தலைப்பேன்களுக்கான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள்

 • தலை மண்டையில் தீவிரமான அரிப்பு
 • தலை மண்டையில் நுண்ணிய சிவப்பு நிறமான புடைப்பு
 • வெளிர் சாம்பல் நிறமான பேன் முட்டைகள் (ஈர்கள்) முடிக்கால்களில் ஒட்டிக்கொண்டிருத்தல்
 • கண்களால் பார்க்க முடியாவிட்டாலும், தலையில் பேன்கள் இருத்தல்
 • சில நிலைமைகளில், ஒரு அறிகுறியும் இருக்காது

உங்கள் பிள்ளையின் தலையில் தலைப்பேன்கள் இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், முதலில் அவனது தலையில் ஈர்கள் அல்லது பேன்கள் இருக்கின்றனவா எனப் பரிசோதனை செய்யவும். பேன்கள் இருக்கின்றனவா எனப் பரிசோதிப்பதற்கான ஒரு வழி, உங்கள் பிள்ளையின் தலை முடியை ஈரமாக்கிவிட்டு, ஒரு நல்ல பற்களுள்ள சீப்பினால், தலையை ஒரு வெள்ளைத் தாளுக்கு மேலாக வாரவும். பேன்கள் அல்லது ஈர்கள் தாளின் மேல் காணப்படலாம். ஆனால் அவை தலையில் நன்றாக ஒட்டிக்கொண்டிருக்ககூடியவை. அதனால் நீங்கள் மண்டையோட்டுக்கு அருகில் தலைமுடியை நன்கு பரிசோதிக்கவேண்டியிருக்கும்.

தலைப்பேன்களுக்கான காரணங்கள்

பேன்களால் பீடிக்கப்படுவது மிகவும் சாதாரணமானது. பேன்கள் உள்ள ஒருவருடன் நேரடித் தொடர்பு கொள்வதன் மூலம், அல்லது தொப்பிகள், சீப்புகள், துவாய்கள், அல்லது படுக்கைகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் பிள்ளைகள் மற்றும் பெரியவர்களுக்கும் பேன் தொற்றிக்கொள்ளக்கூடும். இரண்டு பேர் சொல்லர்த்தமாகத் “தங்கள் தலைகளை ஒன்றாக வைக்கும்போது” பேன்கள் ஒருவரின் தலையிலிருந்து மற்றவரின் தலைக்குப் பாயக்கூடும். பேன்களால் எந்த அகலத்துக்கும் பாயமுடியாது.

தலைப்பேன்களுக்கான சிகிச்சை

உங்கள் பிள்ளைக்குப் பேன் இருந்தால், உங்களுக்கு பல சிகிச்சைத் தெரிவுகள் உள்ளன. உங்கள் பிள்ளை 2 வயதுக்குட்பட்டவனாகவும் ஒவ்வாமையுள்ளவனாகவும் இருந்தால், சிகிச்சையளிப்பதற்கு முன்னர் மருத்துவரிடம் ஆலோசிக்கவும். இல்லாவிட்டால் நீங்கள் வீட்டிலேயே உங்கள் பிள்ளைக்குச் சிகிச்சையளிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட, பேன்களை அழிக்கும் மருந்திடப்பட்ட ஷம்போக்கள் அல்லது லோஷன்கள் மற்றும் விசேஷ சீப்புகள் உங்கள் உள்ளூர் மருந்துக்கடைகளில் மருந்துக்குறிப்பு இல்லாமல் கிடைக்கும். ஒவ்வொரு பொருளும் வேறுபட்ட முறைகளில் உபயோகிக்கப்படவேண்டும். எனவே, உபயோகிக்கும்முறைகளைக் கவனமாக வாசிக்கவும். எரிச்சலைத் தவிர்ப்பதற்கு உங்கள் பிள்ளையின் தலையிலிருந்து லோஷனை நன்றாக அலசிவிடுவதற்கு நிச்சயமாயிருங்கள். பெரும்பாலான பொருட்களை முதல் முறை உபயோகிக்கும்போது 100% பலனைத் தராது. எனவே, ஏறக்குறைய ஒரு வாரத்துக்குப் பின்னர் அதே செயற்பாட்டைத் திரும்பவும் செய்யவேண்டும். மேலும், பல்வேறு வகையான சிகிச்சைத் தெரிவுகள் இருக்கின்றன. அவற்றுள் சில, மற்றவற்றைவிட அதிகமாகப் பலன் தரும். உங்கள் பிள்ளைக்கான சிறந்த தெரிவுக்காக, உங்கள் மருந்தாளரிடம் ஆலோசனை கேட்க வும்.

தலைப்பேன்கள் பெருகுவதைத் தடுத்தல்

தலைப்பேனுக்காக குடும்ப அங்கத்தினர் எல்லோரையும் சோதனை செய்யவும். தலைப்பேனுள்ள ஒவ்வொருவருக்கும் சிகிச்சை தேவைப்படும்.

ஏதாவது பேன்கள் அல்லது முட்டைகளை அழிப்பதற்காக எல்லாச் சீப்புகள் மற்றும் தூரிகைகளையும் கொதி நீரிலிட்டுக் கழுவவும். எல்லாப் படுக்கைகள் மற்றும் துவாய்களைக் கொதி நீரில் கழுவவும்.

மற்றப் பெற்றோர்களுக்கும் தெரிவிப்பதற்காக உங்கள் பிள்ளையின் பாடசாலையைத் தொடர்பு கொள்ளவும்.

பாடசாலையில் அல்லது வீட்டில் தொப்பிகள், சீப்புகள், தூரிகைகள், அல்லது படுக்கைகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டாம் என உங்கள் பிள்ளையை உற்சாகப்படுத்துங்கள்.

முக்கிய குறிப்புகள்

 • தலைப்பேன் பெருகுதல் பாடசாலைப் பிள்ளைகளில் சாதாரணமானது. அது மோசமான சுகாதாரத்தைச் சுட்டிக்காட்டாது.
 • ஈரலிப்பான தலைமுடியில் ஒரு நல்ல பற்களுள்ள சீப்பை உபயோகித்து வாருவதுதான் தலைப்பேனைக் கண்டுபிடிக்க மிகச் சிறந்த வழி.
 • சில பிள்ளைகள் பல வாரங்களுக்கு பேன் இருப்பதன் அறிகுறிகளைக் காண்பிக்க மாட்டார்கள்.
 • சிகிச்சையளிப்பதற்கு, அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைப்பேன் லோஷன் அல்லது ஷம்போவை உபயோகிக்கவும். இந்தச் செயற்பாடு ஒரு வாரம் கழித்துத் திரும்பவும் செய்யப்படவேண்டும்.
 • தலைப்பேனைக் கண்டுபிடித்தவுடனேயே உங்கள் பிள்ளையின் பாடசாலைக்குத் தெரிவிக்கவும்.
 • உங்கள் பிள்ளை, தொப்பிகள் அல்லது சீப்புகளைப் பகிர்ந்துகொள்வதை உற்சாகப்படுத்தவேண்டாம்.
Last updated: மார்ச் 05 2010