வீட்டில் கீமோத்தெரபி(வேதிச்சிகிச்சை) சிகிச்சை: உங்களுடைய பிள்ளைக்குப் பாதுகாப்பாகக் கூட்டுக்குளிகைகள் கொடுத்தல்

Safe handling of hazardous medicines at home: Giving whole tablets or capsules [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்களுடைய பிள்ளைக்கு வீட்டில் கீமோத்தெரபி சிகிச்சைக்கான கூட்டுக்குளிகைகளைப் பாதுகாப்பாகக் கொடுத்தலைப் பற்றி வாசிக்க இலகுவான ஒரு வழிகாட்டி நூல்

உங்கள் பிள்ளையால் கீமோத்தெரபி சிகிச்சைக்கான கூட்டுக்குளிகைகளை முழுமையாக விழுங்க முடியாதிருந்தால், அவற்றை நீங்கள் பிரிக்கவேண்டிதாயிருக்கும்.

உங்களுடைய பிள்ளை கீழே பட்டியலிடப்பட்டுள்ள கீமோத்தெரபி சிகிச்சைக்கான மருந்துகளில் ஏதாவதொன்றை உட்கொள்வதாக இருந்தால் பின்வரும் அறிவுரைகள் பொருத்தமாக இருக்கும்.

  • லொமுஸ்டைன், சிசிஎன்யூ, சீஎன்யூ®
  • டெமொஸோலோமைட், டெமொடல்®
  • புரோக்கார்பஸைன், மட்டுலேன்®
  • ஹைட்ரோக்ஸியூரியா, ஹைட்ரியா®

கீமோத்தெரபி சிகிச்சைக்கான கூட்டுக்குளிகைகளை உங்களுடைய பிள்ளைக்குக் கொடுப்பதற்கு முன்னர் பின்வருவனவற்றைச் செய்யவும்:

கையுறைகள், மேலாடை மற்றும் மூக்கையும் வாயையும் மூடிய மறைப்புப் போட்ட ஒருவர்
கை உறைகள் மற்றும் முகமூடி அணிவதன் மூலம் கீமோதெரபி மருந்துடன் தொடர்பைத் தவிர்க்கவும் .ஒருமுறை பாவித்த பின் வீசக்கூடிய அங்கி, ஏப்ரன், பழைய பெரிய மேலாடை அணிவதன் மூலம் உங்களுடைய ஆடைகளை மூடவும்.
  • கையுறைகள், ஒரு நீளமான மேலாடை, ஒரு முகமூடி என்பனவற்றை அணிந்து கொள்ள வும்.
  • அப்புறப்படுத்துவதற்குத் தேவையான உபகரணங்கள் தயாராக இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவும்.

கூட்டுக் குளிகையை முழுமையாக உபயோகிக்கும் வேளைமருந்துகளைக் கொடுத்தல்

உங்களுக்குப் பின்வருவன தேவைப்படும்:

விரிப்பொன்றின் மேல் கூட்டுக்குளிசைகள், உட்செலுத்தி, குவளை, கரண்டி மற்றும் தெளிவான பை
  • ஒரு பெரிய, தெளிவான பிளாஸ்டிக் பை
  • கூட்டுக் குளிகை(கள்)
  • சிறிய மருந்துக் கோப்பை
  • கரண்டி அல்லது வாய்வழி மருந்தூசிக் குழாய்
  • மருந்துடன் கலப்பதற்காக உணவு அல்லது பழரசம்
  1. கூட்டுக் குளிகைகளின் உள்ளேயிருக்கும் மருந்துத்தூளை வெளியே எடுக்கவும். வேளைமருந்து கொடுப்பதற்கு முன்பாக, மருந்துத்தூளை உடனே உணவு அல்லது பானத்துடன் கலக்கவும்.
    • லொமுஸ்டைன் மருந்து அப்பிள்சோஸ், யோகேட் அல்லது ஜாம் போன்ற உணவுடன் கலக்கப்படலாம். மருந்துத்தூளை பானத்துடன் கலக்கவேண்டாம்.
    • டெமொஸோலோமைட் மருந்து அப்பிள்சோஸ் அல்லது அப்பிள் ஜூஸுடன் கலக்கப்படலாம்.
    • மருந்து முழுமையாகக் கரையாதிருக்கலாம். கோப்பையில் மீந்திருக்கும் மருந்துத்தூளுடன் கலப்பதற்காக மேலதிக அப்பிள் ஜூஸைக் கைவசம் வைத்திருக்கவும்.
    • புரோக்கார்பஸைன் மருந்தைப் பொருத்தமான ஒரு உணவு அல்லது பழரசத்துடன் கலக்கலாம்.
    • தகுந்த உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதற்கு நிச்சயமாக இருக்கவும். (புரோக்கார்பஸைன் உணவுக் கட்டுப்பாடு என்ற சிறு புத்தகத்தைப் பரிசீலிக்கவும்)
    • ஹைட்ரோக்ஸியூரியா மருந்தைப் பொருத்தமான ஒரு உணவு அல்லது (அப்பிள் சோஸ், யோகேட் அல்லது அப்பிள் ஜூஸ் போன்ற) பழரசத்துடன் கலக்கலாம்.
  2. மருந்துடன் கலக்க நீங்கள் உபயோகிக்கும் உணவு அல்லது பழரசத்தை ஒரு சிறிய மருந்துக் கோப்பைக்குள் எடுக்கவும்.
  3. கூட்டுக் குளிகை(கள்), மருந்துக் கோப்பை, கரண்டி மற்றும்/அல்லது மருந்தூசிக் குழலை தெளிவான பிளாஸ்டிக் பையினுள் வைக்கவும்.

கீமோத்தெரபி சிகிச்சைக்கான மருந்துத் தூள் காற்றுடன் கலப்பதைத் தவிர்ப்பதற்காக, வேளைமருந்தைப் பிளாஸ்டிக் பையினுள் வைத்துப் பின்வரும் அறிவுரைகளை உபயோகித்துத் தயாரிக்கவும்:

  1. மருந்துத் தூளை, கூட்டுக்குளிகையின் கீழ் முனை நோக்கித் தட்டவும்.
  2. கூட்டுக் குளிகையின் மேல் முனையை அகற்றிவிடவும்
  3. தெளிவான பிளாஸ்ரிக் பையினுள், கூட்டுக்குளிசையின் உள்ளடக்கத்தை திரவமுள்ள ஒரு குவளையினுள் கையுறை போட்ட கைகள் சேர்க்கின்றன

    மருந்துத்தூளை மருந்துக் கோப்பைக்குள் போடவும். ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுக் குளிகைகள் உபயோகிப்பதாக இருந்தால் இந்தச் செயற்பாட்டைத் திரும்பவும் செய்யவும்.

  4. திரவமுள்ள ஒரு குவளையினுள் கூட்டுக்குளிசையின் உள்ளடக்கத்தைச் சேர்ப்பதைக் கிட்டவாகக் காட்டும் படம்

    கோப்பையினுள் இருக்கும் உணவு அல்லது பழரசத்துடன் மருந்துத்தூளைக் கலக்கவும்.

  5. கலவையை(உணவுடன் சேர்த்துக் கலந்திருந்தால்) ஒரு கரண்டியில் எடுத்து, அல்லது (அப்பிள் ஜூஸுக்கு) ஒரு மருந்தூசிக் குழலில் இழுத்து எடுத்து அதை உங்களுடைய பிள்ளைக்கு வாய்வழியாகக் கொடுக்கவும். முழுக் கலவையும் உங்களுடைய பிள்ளைக்குக் கொடுக்கப்படுவதை உறுதி செய்துகொள்ளவும்.

கூட்டுக்குளிகை முழுமையாகத் தேவைப்படாத வேளைமருந்துகளைக் கொடுத்தல்

கூட்டுக்குளிகை முழுமையாகத் தேவைப்படாத வேளைமருந்துகளுக்கு, புரோக்கார்பஸைன் மருந்தும் ஹைட்ரொக்ஸியூரியா மருந்தும் கரைசலாக்கப்படலாம்

உங்களுக்குப் பின்வருவன தேவைப்படும்:

  • ஒரு பெரிய, தெளிவான பிளாஸ்டிக் பை
  • கூட்டுக்குளிகை
  • டிசோல்வன் டோஸ்® உபகரணம்
  • 10மிலி தண்ணீர் கொண்ட ஒரு சிறிய மருந்துக் கோப்பையும் ஒரு வாய்வழி ஊசிமருந்துக் குழலும்
பிளாஸ்ரிக் பையினுள், கூட்டுக்குளிசையின் உள்ளடக்கத்தை மருந்தளவைக் கரைக்கும் கருவினுள் சேர்த்தல்

மருந்துத் தூள் காற்றுடன் கலப்பதைத் தவிர்ப்பதற்காக, வேளைமருந்தைப் பிளாஸ்டிக் பையினுள் வைத்துப் பின்வரும் அறிவுரைகளை உபயோகித்துத் தயாரிக்கவும்:

  1. மருந்துத் தூளை, கூட்டுக்குளிகையின் கீழ் முனை நோக்கித் தட்டவும்.
  2. கூட்டுக் குளிகையின் மேல் முனையை அகற்றிவிடவும்
  3. கூட்டுக்குளிசையின் உள்ளடக்கத்தை மருந்தளவைக் கரைக்கும் கருவினுள் சேர்ப்பதைக் கிட்டவாகக் காட்டும் படம்

    மருந்துத்தூளை டிசோல்வன் டோஸ் உபகரணத்துக்குள் கொட்டிவிடவும்.

  4. 10மிலி குழாய்த் தண்ணீரை(வெந்நீர் அல்ல) அந்த உபகரணத்துக்குள் சேர்க்கவும்.
  5. டிசோல்வன் டோஸ் உபகரணத்தை மூடியால் மூடவும். உபகரணத்தை முன்னும் பின்னுமாக மென்மையாக அசைத்து, பின்னர் இரண்டு நிமிடங்களுக்கு அசையாமல் வைக்கவும். 20 நிமிடங்களுக்குள் கலவையை உபயோகிக்கவும்.

உபயோகப்படுத்தப்படாத பாகத்தை அப்புறப்படுத்திய பின்னர், டிசோல்வ் ‘என்’ டோஸ் உபகரணத்தை ஒவ்வொரு முறை உபயோகித்த பின்னரும் கீமோத்தெரபி(வேதிச்சிகிச்சை) சிகிச்சை: பாதுகாப்பாகக் கையாளுதலும் மருந்துகள் கொடுத்தலும் என்பதில் அகற்றுதலும் சுத்தம் செய்தலும் என்ற பகுதிகளில் விபரிக்கப்பட்ட படி சுத்தம் செய்யவும்.

புரோக்கார்பஸைன், மட்டுலேன்® 50 மிகி கூட்டுக்குளிகைகள்

  • டிசோல்வன் டோஸ்® உபகரணத்தை உபயோகிக்கும்போது ஒரு 5மிகி/மிலி கரைசல் தயாரிக்கப்படும்.
  • உங்களுடைய மருந்தாளர், தாதி, அல்லது மருத்துவர் அறிவுறுத்தியபடி, வாய்வழி ஊசிமருந்துக் குழலை உபயோகித்துப் பொருத்தமான வேளைமருந்தை (5மிகி =1மிலி) அளக்கவும்.

ஹைட்ரொக்ஸியூரியா (ஹைட்ரியா®) 500 மிகி கூட்டுக்குளிகைகளுக்குப் பின்வருமாறு தயாரிக்கவும்:

  • டிசோல்வன் டோஸ்® உபகரணத்தை உபயோகிக்கும்போது ஒரு 5மிகி/மிலி கரைசல் தயாரிக்கப்படும்.
  • உங்களுடைய மருந்தாளர், தாதி, அல்லது மருத்துவர் அறிவுறுத்தியபடி, வாய்வழி ஊசிமருந்துக் குழலை உபயோகித்துப் பொருத்தமான வேளைமருந்தை (5மிகி =1மிலி) அளக்கவும்.

முக்கிய குறிப்புகள்

  • உங்கள் பிள்ளையால் கீமோத்தெரபி சிகிச்சைக்கான கூட்டுக்குளிகைகளை முழுமையாக விழுங்க முடியாதிருந்தால், அவற்றை நீங்கள் பிரிக்கவேண்டியதாயிருக்கும்.
  • உங்களுடைய பிள்ளைக்கு கூட்டுக்குளிகைகள் கொடுப்பதற்கு முன்னர் ஒரு முகமூடி, ஒரு நீளமான மேலாடை, கையுறைகள் என்பனவற்றை அணிந்து கொள்ள வும்.
  • வேளைமருந்து கொடுப்பதற்கு முன்னர் மருந்துத்தூளை உணவு அல்லது பானங்களுடன் உடனடியாகக் கலக்கவும்.
  • புரோக்காபஸைன், ஹைட்ரோக்ஸியூரியா என்பனவற்றின் கரைசல்களை 20 நிமிடங்களுக்குள் உபயோகித்துவிடவும்.
​​
Last updated: டிசம்பர் 23 2010