சிறுநீர்ப்பையினுள் நோக்கும் பரிசோதனை

Cystoscopy [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பிள்ளைகளுக்கான சிறுநீர்ப்பை நோக்கிப் பரிசோதனை - பிள்ளை சிறுநீர்ப்பை பிரச்சனைகள் கண்டறிதல்

சிறுநீர்ப்பை நோக்கிப் பரிசோதனை (சிஸ்டோஸ்கொப்பி) என்றால் என்ன?

சிறுநீர்ப்பையினுள் நோக்கும் பரிசோதனை என்பது சிறுநீர்ப்பையிலுள்ள பிரச்சைனைகளைக் கண்டறிவதற்காகச் செய்யப்படும் ஒரு பரிசோதனையாகும். இது முனையில் கமரா ஒன்று பொருத்திய மெல்லிய ஒரு குழாயால் செய்யப்படுகிறது. உங்கள் பிள்ளையின் சிறுநீர்ப்பையின் உட்புறத்தைப் பரிசோதிப்பதற்காக மருத்துவர் இந்தக் கருவியை உபயோகிப்பார்.

சிறுநீர்ப்பை நோக்கிப் பரிசோதனை ஒரு மணி நேரம் வரை நீடிக்கும்

உங்கள் பிள்ளைக்கு ஒரு பொதுவான மயக்க மருந்து அல்லது “நித்திரைக்கான மருந்து” கொடுக்கப்படும். அதாவது உங்கள் பிள்ளை சிறுநீர்ப்பையினுள் நோக்கும் பரிசோதனை சமயம் முழுவதும் நித்திரையாயிருப்பான். சில மருத்துவமனைகளில், ஒரு அறுவைச் சிகிச்சை பராமரிப்பு நாள் பிரிவினர், உங்கள் பிள்ளையை அறுவைச் சிகிச்சைக்கான செயல்பாடுகளுக்காகத் தயார்படுத்துவர் மற்றும் அறுவைச் சிகிச்சை முடிவடைந்தபின்னர் உங்கள் பிள்ளையைப் பராமரிப்பார்கள்.

சிறுநீர்ப்பையினுள் நோக்கும் பரிசோதனை 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நீடிக்கும்.

உங்கள் பிள்ளை நித்திரையாயிருக்கும்போது, மருத்துவர் அவனின் சிறுநீர் வடிகுழாயில் ஒரு மெல்லிய குழாயை உட்புகுத்தி வைப்பார். சிறுநீர் வடிகுழாய் என்பது உங்கள் பிள்ளையின் சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை வெளியே எடுத்து உடலின் வெளியே அனுப்பும் குழாயாகும். மருத்துவர், உங்கள் பிள்ளையின் சிறுநீர்ப்பையின் உட்பகுதியை நோக்குவதற்கு, குழாயின் நுனிப்பகுதியிலிருக்கும் புகைப்படக் கருவியை உபயோகிப்பார்

சிறுநீர்ப்பையினுள் நோக்கும் பரிசோதனைக்குப் பின்னர் உங்கள் பிள்ளை ஏறக்குறைய 1 மணி நேரத்துக்கு, மயக்க மருந்து கொடுத்த பின் பராமரிக்கும் பிரிவுக்கு அல்லது நலம் பெறும் அறைக்கு மாற்றப்படுவான். அதன் பின்னர் உங்கள் பிள்ளை அறுவைச் சிகிச்சை நாள் பராமரிப்பு பிரிவுக்கு அனுப்பிவைக்கப்படுவான். உங்கள் பிள்ளை முழுமையாக விழிப்படைந்தவுடன் மற்றும் கொஞ்சம் நீராகாரம் உட்கொள்ள முடிந்தவுடனேயே வீட்டுக்குப் போகலாம். வழக்கமாக, உங்கள் பிள்ளை அறுவைச் சிகிச்சை நாள் பராமரிப்பு பிரிவுக்குப் போய், 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரத்துக்குள் இது நடைபெறலாம்.

உங்கள் மருத்துவர் பரிசோதனை பற்றியும் அவர் தெரிந்துகொண்ட விஷயங்கள் பற்றியும் உங்களுடன் பேசுவார்.

உங்கள் பிள்ளை அதிகளவு நீராகாரங்கள் குடிக்கவேண்டும்

உங்கள் பிள்ளை மருத்துவமனையில் இருக்கும்போது அதிகளவு நீராகாரங்கள் குடிக்கவேண்டும். நீங்கள் வீடு திரும்பியதும், நீராகாராங்கள் எடுத்துக் கொள்ளும்படி உங்கள் பிள்ளையை உற்சாகப்பட்த்திக்கொண்டேயிருங்கள். இது உங்கள் பிள்ளையின் சிறுநீர்ப்பையை வெறுமையாக்கி சிறுநீர் வடிகுழாயைக் கழுவ உதவி செய்யும். அத்துடன் இது தொற்றுநோய் மற்றும் இரத்தம் கட்டிபடுதல் என்பவற்றையும் தடுக்கும்.

சிறுநீர்ப்பையினுள் நோக்கும் பரிசோதனைக்குப்பின் முதல் நாள் அல்லது சில நாட்களுக்கு உங்கள் பிள்ளையின் சிறுநீர் மெல்லிய இளம் சிவப்பு நிறமாகக் காணப்படலாம். இது சாதாரணமானது.

அதிகளவு இரத்தப் போக்கு, விசேஷமாக புதிய இரத்தம் அல்லது இரத்தக்கட்டி இருந்தால், உடனே சிறுநீரகவியல் மருத்துவமனையை அழைக்கவும்.  

தொலைபேசி எண்ணை இங்கே எழுதவும்:

உங்கள் பிள்ளையின் வலியைச் சமாளித்தல்

உங்கள் பிள்ளைக்கு, இந்தச் செயல்பாட்டுக்குப் பின் 3 நாட்கள் வரை பரிசோதனை மற்றும் மயக்க மருந்தின் விளைவாக சில பொதுவான அசெளகரியங்கள் ஏற்படலாம்.

சிறுநீர்ப்பையினுள் நோக்கும் பரிசோதனைக்குப் பின்னர் உங்கள் பிள்ளை, முதன் சில தடவைகள் சிறிநீர் கழிக்கும்போது புண் இருப்பதைப்போல் உணரலாம். பின்பு நாட்கள் செல்ல , புண் குறைந்து கொண்டே வருவதைப் போல உங்கள் பிள்ளை உணரவேண்டும். சில வேளைகளில், நீங்கள் அவர்களுக்கு வெந்நீர் குளியல் தொட்டியில் வைத்து, சிறுநீர் கழிக்க வைத்தால் அவர்கள் மேலும் சௌகரியாமாக உணரக்கூடும்.

உங்கள் பிள்ளை வலியிலிருந்து நிவாரணமடைவதற்கு, அசெட்டமினோஃபென் (டைலெனோல்) எடுத்துக்கொள்ளலாம். போத்தலில் எழுதப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். உங்கள் பிள்ளைக்கு மருந்தை எப்படிக் கொடுப்பது என்பது பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் தாதியை அல்லது மருந்தாளுனரைக் கேட்கவும்.

மருத்துவ பராமரிப்பைத் தேவைப்படுத்தும் பிரச்சினைகள்

பின்வரும் நிலைமைகளின் கீழ் உங்கள் மருத்துவரை அழையுங்கள்:

  • உங்கள் பிள்ளையின் சிறுநீர் 1 அல்லது 2 நாட்களுக்குள் தெளிவாக இல்லாவிட்டால்.
  • உங்கள் பிள்ளைக்கு இரத்தக் கசிவு இருந்தால், விசேஷமாக புதிய இரத்தம் அல்லது இரத்தக் கட்டிகள் காணப்பட்டால்
  • உங்கள் பிள்ளை சிறுநீர் கழிக்கும்போது வலி குறையாவிட்டால் அல்லது அதிகரித்துக்கொண்டே போனால்.
  • உங்கள் பிள்ளையால் சிறுநீர் கழிக்க முடியாவிட்டால்

உங்கள் பிள்ளைக்கு இவற்றுள் ஏதாவது பிரச்சினை இருந்தால் அல்லது சிறுநீர்ப்பையினுள் நோக்கும் பரிசோதனை பற்றி வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால், குழந்தை சிறுநீரகவியல் மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும் அல்லது உங்கள் மருத்துவமனையிலிருக்கும் சிறுநீரகவியல் பகுதியை அழைக்கவும்.

Last updated: நவம்பர் 05 2009