டயபர்கள்

How to change a diaper [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் டயபர் மாற்றுவதில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதைப்பற்றிக் கற்றுக் கொள்ளுங்கள்.

இதற்கு முன்பாக நீங்கள் டயபர் மாற்றியதில்லையா? கவலைப்படவேண்டாம், நீங்கள் அதிகளவு பயிற்சியைப் பெற்றுக்கொள்வீர்கள். டயபர்களைப் பொறுத்தவரையில் பயிற்சி பூரணத்தைக் கொடுக்காது. நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது பொம்மையில் டயபர் மாற்றிவதில் நீங்கள் செய்த பயிற்சிகள் எல்லாம் ஒரு சுறுசுறுப்பான, செயற்திறனுள்ள புதிதாகப் பிறந்த குழந்தைக்கு நிஜத்தில் செய்வதனுடன் ஓப்பிடமுடியாது.

உங்கள் குழந்தைக்கு டயபர் மாற்றுவதற்கு முயற்சி செய்வதற்கு முன்பாக எல்லா டயபர் உபகரணங்களையும் தயாராக வைத்திருப்பது உபயோகமாக இருக்கும். நீங்களும் உங்கள் குழந்தையும் பெரும்பாலான நேரத்தைச் செலவிடும் இடத்துக்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் அத்தியாவசியமான எல்லா உபகரணங்களையும் வைத்திருக்க முயற்சிக்கவும். உங்கள் சோஃபாவுக்குப் பின்னால் ஒரு சிறிய டயபர் பையை மாட்டி வைத்திருப்பது, நீங்கள் மாடிப்படி ஏறி இறங்கும் சமயங்களைக் குறைக்கும். கைவசம் வைத்திருக்கவேண்டிய பொருட்கள், குழந்தைத் துடைப்பான்கள், ஒரு மாற்று சிறு மெத்தை, டயப்ர்கள், மற்றும் பூசு மருந்து அல்லது பெற்றோலியம் ஜெலி என்பனவற்றை உட்படுத்தும். துடைப்பான்கள் சில வேளைகளில் ஒரு புதிதாகப் பிறந்த குழந்தையின் தோலில் எரிச்சலை உண்டாக்கும் என்பதால், சில பெற்றோர்கள் குழந்தைத் துடைப்பான்களுக்குப் பதிலாக வெந்நீர் மற்றும் துடைக்கும் துண்டை உபயோகிக்க விரும்புவார்கள்.

வேறு சில குறிப்புகள் பின்வருமாறு:

  • டயபர் அரிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காக, உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் டயபரை அடிக்கடி மாற்றவும். சாதாரணமாக, ஒவ்வொரு மூன்று முதல் நான்கும் மணி நேரங்களுக்கு ஒரு முறை அல்லது உங்கள் குழந்தைக்கு பாலூட்டும் போதெல்லாம் மாற்றவும். அடிக்கடி மலங்கழிக்கும் குழந்தைகள், மற்றும் அடிக்கடி டயபர் மாற்றப்படாத குழந்தைகளுக்கு டயபர் அரிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
  • அழுக்கான டயபரை அகற்றத் தொடங்குவதற்கு முன்பாக உங்கள் குழந்தையின் புட்டத்துக்குக் கீழே புதிய டயபரை வைக்கவும். இந்த விதத்தில், உங்கள் குழந்தை டயபர் மாற்றும்போது மலம் அல்லது சிறுநீர் கழிக்கத் தீர்மானித்தால் கழிவுகளை புதிய டயபர் தாங்கிக் கொள்ளும். இது நீங்கள் எதிர்பார்ப்பதைவிட மிகவும் அடிக்கடி சம்பவிக்கும்!
  • உங்கள் குழந்தையின் அழுக்கான டயபரை அகற்றியவுடனேயே, அவனுக்கு எட்டாத இடத்தில் அதை வைக்கவும்.
  • உங்களுக்கு ஒரு ஆண்குழந்தை இருந்தால், பீச்சியடிப்பதைத் தவிர்ப்பதற்காக அவனது ஆணுறுப்பைச் சுற்றித் துடைத்துவிடவும்.
  • உங்கள் மகன் நுனித்தோல் அறுவைச் சிகிச்சை செய்யப்படாதவனானால் அவனது ஆணுறுப்பிலுள்ள நுனித்தோலின்கீழ் சுத்தம் செய்ய முயற்சிக்கவேண்டாம். இதை நீங்கள் செய்தால், உங்கள் மகனின் ஆணுறுப்பிலுள்ள மிகவும் நுண்மையான திசுக்களைச் சேதப்படுத்தும் ஆபத்திலிருப்பீர்கள்.
  • உங்களுக்கு ஒரு பெண்குழந்தை இருந்தால், அவளின் பிறப்புறுப்பில் பற்றீரியாவினால் ஏற்படும் தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக, அவளை முன்புறமிருந்து பின்புறமாகத் துடைப்பதற்கு நிச்சயமாயிருங்கள்.
  • உங்கள் குழந்தையின் புட்டத்தைத் துடைத்தபின்னர், ஒரு சில நிமிடங்களுக்குக் காற்றில் உலரவிடவும். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு டயபர் அணிவிப்பதற்கு முன்பாக பூசு மருந்து அல்லது பெற்றோலியம் ஜெலியை அவர்களது புட்டத்தில் பூச விரும்புவார்கள்; மற்றவர்கள் விரும்பமாட்டார்கள். காலப்போக்கில், உங்கள் குழந்தைக்கு எது சிறப்பாக வேலை செய்கிறது என்பதைக் கண்டுபிடிப்பீர்கள்
  • உங்களுக்கு ஆண் குழந்தை இருந்தால், டயபர் அணிவிக்கும்போது, டயபரின் முன்பக்கமாகக் கசிவதைத் தடுப்பதற்காக, அவனது ஆண்குறி கீழ் நோக்கியிருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.
  • உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி நாண் இன்னும் விழுந்துவிடாதிருந்தால், நாணில் காற்றுப் படும்படியாக டயபரின் முன் முனையை சுருட்டிவிட நிச்சயமாயிருங்கள். இது குழந்தைக்கு மேலும் சௌகரியமாயிருக்கும். மற்றும் தொப்புள் நாணை உலர்ந்து போகவைக்கும். தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கும்.

டயபர் அரிப்பு

உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு டயபர் அரிப்பு ஏற்பட்டால், அடிக்கடி டயபரை மாற்றவும். விசேஷமாக ஒவ்வொரு தடவை மலங்கழித்த பின்னரும் அவ்வாறு செய்யவும். குழந்தைத் துடைப்பான்கள் எரிச்சலையுண்டாக்குமாதலால் அவற்றை உபயோகிப்பதை நிறுத்தவும். அதற்குப் பதிலாக, உங்கள் குழந்தையின் புட்டத்தை ஒரு ஈரத் துணியால் துடைக்கவும். உங்கள் குழந்தையின் புட்டத்திற்கு முடிந்தளவு அதிகமான நேரத்திற்கு “ டயபர் இல்லாமலிருக்கும் நேரம்” கொடுக்கவும். அடுத்த டயபரை அணிவிப்பதற்கு முன்பாக உங்கள் குழந்தையின் புட்டத்தில் ஒரு தடிப்பான படை டயபர் கிறீமைப் பூசவும். அவனது புட்டத்தில் பவுடர் போடும் ஆசையைத் தவிர்க்கவும். பேபிப் பவுடர்கள் பயன் தரமாட்டா. பவுடர் உபயோகிக்கவேண்டும் என நீங்கள் உண்மையாகவே விரும்பினால், சாதாரண கோர்ன்ஸ்ரார்ச் பவுடரை உபயோகிக்கவும். மற்றும் ஒவ்வொரு முறையும் டயபர் மாற்றியவுடனேயே அவற்றை நன்றாகத் துடைத்துவிட நிச்சயமாயிருங்கள். உங்கள் குழந்தையின் புட்டத்தில் பவுடரைத் தேங்க வைப்பது, அந்தப் பகுதியில் பற்றீரியா வளர்வதற்குக் காரணமாகலாம்.

உங்கள் குழந்தைக்கு ஒரு ஈஸ்ட் தொற்றுநோய் ஏற்பட்டால், ஒரு பிடிவாதமான சிவப்பு அரிப்பு பிறப்பு உறுப்பில் தொடங்கி அடிவயிறுவரைச் சென்று தொடைவழியாகக் கீழிறங்கினால், உங்களால் முடிந்தளவு விரைவாக மருத்துவ கவனிப்பை நாடவும்.

Last updated: அக்டோபர் 18 2009