எட்டோபோசைட்: வாய் வழியாக எப்படிக் கொடுப்பது

Safe handling of hazardous medicines at home: Giving injectable medicine by mouth [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்களுடைய பிள்ளைக்கு வாய்வழியாக எட்டோபோசைட் மருந்தைக் கொடுப்பது பற்றி வாசிக்க இலகுவான ஒரு வழிகாட்டி நூல்

எட்டோபோசைட் என்பது புற்றுநோய் உயிரணுக்களை அழிப்பதற்காகக் கொடுக்கப்படும் ஒரு மருந்து. இது புற்றுநோய் உயிரணுக்கள் பகுதிகளாகப் பிரிவடைதலையும் புதிய உயிரணுக்கள் உருவாகுவதையும் தடை செய்யும். எட்டோபோசைட் மருந்து கூட்டுக்குளிகை, ஊசிமருந்து வடிவங்களில் கிடைக்கும்.

எட்டோபோசைட் மருந்து, விபி -16 அல்லது அதன் வர்த்தகப் பெயரான வெபெஸிட் ® என அழைக்கப்படுவதையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

சில பிள்ளைகளால் எட்டோபோசைட் 50 மிகி கூட்டுக்குளிகையை முழுமையாக விழுங்க முடியாது அல்லது அவர்களுக்கு 50 மிகி க்குக் குறைவான வேளைமருந்து தேவைப்படும். எட்டோபோசைட் மருந்தின் 20 மிகி/மிலி அளவு ஊசிமூலமாகச் செலுத்தப்படக்கூடிய கரைசல் வாய்வழியாகக் கொடுக்கப்படுகிறது. பின்வரும் அறிவுரைகளைத் தயவுசெய்து கவனமாக மீளாய்வு செய்யவும்:

ஏதாவது கீமோத்தெரபி சிகிச்சை கொடுப்பதற்கு முன்பாக, வீட்டில் கீமோத்தெரபி(வேதிச்சிகிச்சை) சிகிச்சை: பாதுகாப்பாகக் கையாளுதலும் மருந்துகள் கொடுத்தலும் ஐத் தயவு செய்து பார்க்கவும்.

கையுறைகள், மேலாடை மற்றும் மூக்கையும் வாயையும் மூடிய மறைப்புப் போட்ட ஒருவர்
கை உறைகள் மற்றும் முகமூடி அணிவதன் மூலம் கீமோதெரபி மருந்துடன் தொடர்பைத் தவிர்க்கவும் .ஒருமுறை பாவித்த பின் வீசக்கூடிய அங்கி, ஏப்ரன், பழைய பெரிய மேலாடை அணிவதன் மூலம் உங்களுடைய ஆடைகளை மூடவும்.

உங்களுடைய பிள்ளைக்குக் கீமோத்தெரபி சிகிச்சை கொடுக்கும்போது பின்வருவனவற்றைச் செய்யவும்:

  • கையுறைகள், ஒரு முகமூடி, ஒரு நீளமான மேலாடை என்பனவற்றை அணிந்துகொள்ளவும்.
  • அப்புறப்படுத்துவதற்குத் தேவையான உபகரணங்கள் தயாராக இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவும்
உறிஞ்சும் பட்டை ஒன்றில் கீமோதிரபி சிறுகுப்பி, குப்பியை அணுகும் கருவி, நாளத்தின் ஊடான உட்செலுத்தி

உங்களுக்குப் பின்வருவனவும் தேவைப்படும்:

  • நரம்பு மூலமாக ஏற்றும் மருந்தூசிக் குழல்
  • குப்பியைச் சென்றடையக்கூடிய கூர்முனைகள் (ஸ்பைக்ஸ்)
  • ஒரு உறிஞ்சக்கூடிய பிளாஸ்டிக் பின்னணைவுள்ள மெத்தை அட்டை
  • எட்டோபோசைட் மருந்தைக் கொண்டிருக்கும் ஒரு சிறு குப்பி

சிறு குப்பியிலிருந்து எட்டோபோசைட் மருந்தை எடுப்பதற்கு, உங்களுக்கு ஒரு கூர்முனையும் (ஸ்பைக்ஸ்) நரம்பினூடாகச் செலுத்தப்படும் மருந்தூசிக் குழலும் தேவைப்படும்.

சிறு குப்பியிலிருந்து எட்டோபோசைட் மருந்தைப் பின்வருமாறு இழுத்தெடுக்கவும்

  • எட்டோபோசைட் மருந்துக் குப்பியிலிருந்து பிளாஸ்டிக் மூடியை அகற்றி ஒரு கடினமான மேற்பரப்பில் செங்குத்தாக வைக்கவும்.
  • குப்பிக் கூர்முனையை அதன் பொதியிலிருந்து வெளியே எடுத்து மருந்துக் குப்பிக்குட் செலுத்தவும்.
  • எட்டோபோசைட் மருந்துக் குப்பியை மேசையின் மேல் வைத்து குப்பியின் மூடியின் நடுவில் கூர்முனையை வைத்து ஒழுங்குபடுத்தவும். கூர்முனையை நேராக வைத்துக் கூர்முனை, ரப்பர் மூடியினூடாகச் சென்று, குப்பியின் பிளாஸ்டிக் "விளிம்பு", குப்பியைத் தொடும்வரை கூர்முனையை உறுதியாகக் குப்பினுள் கீழ்நோக்கித் தள்ளவும்.
  • ஊசிமருந்துக் குழலை பொதியிலிருந்து வெளியே எடுக்கவும். குப்பியின் கூர்முனையைத் தள்ளியும் முறுக்கியும் மருந்தூசிக் குழலுடன் பாதுகாப்பாக இணைக்கவும்.
  • குப்பியைத் தலைகீழாகக் கவிழ்த்து, மருந்தூசிக குழலின் தண்டை மெதுவாக வெளியே இழுத்துத் தேவையான அளவு வேளைமருந்தை இழுத்தெடுக்கவும்.
  • அமுக்கத்தைச் சமப்படுத்துவதற்காகக் குப்பிக்குள் ஒரு சிறிய பலூனில் காற்று நிரம்பும்.​ இது இயல்பானது.
  • குப்பியின் கூர்முனையிலிருந்து மருந்தூசிக் குழலை அகற்றிவிடவும்.

இப்போது, எட்டோபோசைட் வேளைமருந்தைக் கொடுப்பதற்கு நீங்கள் தயாராகிவிட்டீர்கள்.

உங்களுடைய பிள்ளைக்கு வாய்வழியாக எட்டோபோசைட் மருந்தைக் கொடுப்பதற்குப் பின்வருவனவற்றைச் செய்யவும்:

  • எட்டோபோசைட் திரவத்தின் சுவையை முன்னேற்றுவதற்காக அதனுடன் குறைந்த பட்சம் சம அளவான பழரசத்தைச் சேர்த்து அதன் செறிவைக் குறைக்கவும். அப்பிள் ஜூஸ், ஓரேஞ் ஜூஸ், கோலா, அல்லது லெமனேடை நீங்கள் உபயோகிக்கலாம். கிரேப் ஃப்ருட் ஜூஸ் உபயோகிக்கப்படக்கூடாது.
  • நீங்கள் வேளைமருந்தைக் கொடுத்து முடித்தவுடன் காலியான மருந்தூசிக் குழலை ஷார்ப்ஸ் கொள்கலனில் போட்டுவிடவும்.
  • மேலதிக வேளைமருந்துகள் தேவைப்பட்டால், ஒரு புதிய மருந்தூசிக் குழல் உபயோகிக்கப்படவேண்டும்.
  • எட்டோபோசைட் மருந்துக் குப்பியின் மீதிருக்கும் கூர்முனை, அடுத்து வரும் வேளைமருந்துகளுக்கும் 10 நாட்கள் வரை உபயோகிக்கப்படலாம். குப்பியை செங்குத்தாக, குளிர்ச்சியான, உலர்ந்த, சூரிய ஒளி படாத இடத்தில் வைக்கவும்.
  • ஒவ்வொரு புதிய எட்டோபோசைட் குப்பிக்கும் ஒரு புதிய குப்பிக் கூர்முனையை உபயோகிக்கவும்.

பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதற்கும் அப்புறப்படுத்துவதற்கும் , வீட்டில் கீமோத்தெரபி(வேதிச்சிகிச்சை)ச் சிகிச்சை: பாதுகாப்பாகக் கையாளுதலும் மருந்துகள் கொடுத்தலும் ஐத் தயவு செய்து பார்க்கவும்.

முக்கிய குறிப்புகள்

  • 20மிகி/மிலி எட்டோபோசைட் ஊசிமருந்து வாய்வழியாகக் கொடுக்கப்படுகிறது.
  • உங்களுடைய பிள்ளைக்கு எட்டோபோசைட் மருந்து கொடுக்கும்போது கையுறைகள், முகமூடி, ஒரு நீளமான மேலாடை என்பனவற்றை அணிந்து கொள்ளவும்.
  • எட்டோபோசைட் மருந்தைக் குப்பியிலிருந்து வெளியே எடுப்பதற்கு, குப்பியை எட்டக்கூடிய கூர்முனையையும் (ஸ்பைக்) நரம்பூடாகச் செலுத்தும் மருந்தூசிக் குழலையும் உபயோகிக்கவேண்டும்.
  • ஒரு பானத்தை உபயோகித்து எட்டோபோசைட் மருந்தின் செறிவைக் குறைக்கவும். கிரேப் ஃப்ருட் ஜூஸ் உபயோகிக்கப்படக்கூடாது
  • நீங்கள் உபயோகிக்கும் ஒவ்வொரு புதிய எட்டோபோசைட்க் குப்பிக்கும் ஒரு புதிய குப்பிக் கூர்முனைய உபயோகிக்கவும்.
Last updated: டிசம்பர் 23 2010