கண் ஒட்டுப்போடுதல்

Eye patching for amblyopia [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead.

பலவீனமான கண்ணின் பார்வை முன்னேற்றமடைவதற்காக, அதனை கண் ஒட்டு எப்படிக் கடினமாக வேலை செய்ய வைக்கிறது என்பதுபற்றிக் கற்றுக்கொள்ளவும்.

அம்லியோபியா (தெளிவற்ற பார்வை) அல்லது "சோம்பற்கண்" நோய்குறிய சிகிச்சையின் பாகமாக உங்கள் பிள்ளை கண் ஒட்டு அணியவேண்டும் என்று உங்கள் மருத்துவர் சிபாரிசு செய்யலாம். மேலதிக தகவல்களுக்குத் தயவுசெய்து, "தெளிவற்ற பார்வை" (அம்லியோபியா) ஐப் பார்க்கவும்.

கண் ஒட்டுப்போடுதல் பற்றிய தகவல்கள்

கீழ்வரும் விபரங்கள் உங்கள் பிள்ளையின் மருத்துவரால் நிரப்பப்பட வேண்டும்:

பிள்ளையின் பெயர்: ________________

ஒட்டுப்போடப்படுவதற்காக கண்: இடது கண்___ வலது கண்____

ஒரு நாளைக்கு ____ மணிநேரங்கள், ஒரு வாரத்தில் ____ நாட்கள், ____ வாரங்களுக்கு ஒட்டுப்போடப்படவேண்டும்.

கையொப்பம்: ____________________

பெயரை அச்செழுத்தில் எழுதவும்: ______________________

உங்கள் பிள்ளையின் சந்திப்புத்திட்ட நேரம்: _______________________

கண் ஒட்டுப்போடுவதால் கிடைக்கும் அதிக பட்ச நன்மைகளைப் பெற்றுக்கொள்ள, பின்வரும் அறிவுரைகளைக் கவனமாகப் பின்பற்றவும்.

கண் ஒட்டுப்போடுதல் எப்படி வேலை செய்கிறது

உங்கள் பிள்ளையின் வலிமையான கண்ணின் பார்வையைத் தடை செய்வதன்மூலம் கண் ஒட்டுப்போடுதல் வேலை செய்கிறது. இது பலவீனமான கண் அல்லது "சோம்பற் கண்" ணின் பார்வையை முன்னேற்றுவிப்பதற்காக அதனைக் கடினமாக வேலை செய்யக் கட்டாயப்படுத்துகிறது. ஒட்டுப்போடப்பட்ட கண் முழுமையாக மூடப்பட்டிருப்பதை நிச்சயப்ப்படுத்திக்கொள்ளுங்கள்.

மங்கிய பார்வையுள்ள கண்ணின் பார்வையை நல்ல கண்ணை மூடிக் கட்டியதால் திருத்தப்பட்ட பார்வையுடன் ஒப்பிடல்
கண் ஒட்டு அணிந்திருத்தல் ஒரு கண்ணை மூடிக் கட்டியபடி சிறுவன் நிறம்தீட்டல்
நல்ல பார்வையுள்ள கண்ணை மறைத்து, வருணம் தீட்டுதல் போன்ற அருகிலிருந்து செய்யும் வேலைகளை செய்வதன் மூலம் "சோம்பல் கண்ணின்" பார்வையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம்.

ஒட்டுப்போடப்பட்ட கண்ணை உபயோகிக்கப் பழகிக் கொள்ளுதல்

கூர்மையான பார்வையுள்ள கண்ணில் ஒட்டுப்போடப்பட்டிருப்பதால், தொடக்கத்தில் நன்றாகப் பார்ப்பதில் உங்கள் பிள்ளைக்கு பிரச்சினை இருக்கலாம். உங்கள் பிள்ளை ஒரு நாளில் எவ்வளவு நேரம் கண்ணில் ஒட்டுப் போட்டிருக்கவேண்டும் என்பது அவனின் வயது மற்றும் பலவீனமான கண்ணிண் பார்வை எவ்வளவு பலவீனமானது என்பதைப் பொறுத்திருக்கிறது. அநேக பிள்ளைகள் ஒட்டை எடுத்துப்போட முயற்சிப்பார்கள். உங்கள் பிள்ளை கண் ஒட்டை அணிந்துகொள்ளவது பழக்கத்துக்கு வந்தவுடன் இது நின்றுவிடும்.

உங்கள பிள்ளைக்கு அதை இலகுவாக்குதல்

கண் ஒட்டு சலிப்படையச் செய்யலாம், எனவே பொறுமை மிகவும் முக்கியம். உறுதியாக இருங்கள். இந்தச் சவாலில் உறவினர்கள் அல்லது நண்பர்களை உங்களுக்கு உதவி செய்யவையுங்கள். முதற்சில நாட்களில் உடனே கண் ஓட்டுப்போடப்பட்டால் பிள்ளைகள் அதற்குப் பழக்கப்படுத்திக் கொள்வார்கள்.

 • கண் ஒட்டுப்போடப்படுவதற்கான காரணங்களை உங்கள் பிள்ளை புரிந்துகொள்ளும் பதங்களில் விளக்கவும்.
 • நீங்கள் வேலை செய்யும் பெற்றோராக இருந்தால், மாலை நேரம் அல்லது வாரயிறுதி போன்ற உங்கள் பிள்ளையுடன் நீங்கள் நேரம் செலவு செய்யக்கூடிய சமயங்களில் கண் ஒட்டைப்போட முயற்சிக்கவும்.
 • முதலில் குறுகிய நேரத்துக்கு கண் ஒட்டுப்போட முயற்சிக்கவும். உங்கள் பிள்ளை அதற்குப் பழக்கப்படுத்தப்பட்டபின்னர், மருத்துவர் உத்தரவிட்டபடி நேரத்தை அதிகரிக்கவும்.
 • உங்கள் பிள்ளை கண் ஒட்டுடன் இலகுவாக நடமாட முடியுமா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள அவளைக் கூர்ந்து அவதானிக்கவும்.
 • ஒட்டுப்போடப்படாத கண்ணை உபயோகிக்கக்கூடிய வேடிக்கை விளையாட்டுக்களில் உங்கள் பிள்ளையை உட்படுத்தவும். டீவி பார்த்தல், வீடியோ அல்லது கம்பியூட்டர் விளையாட்டுகள் விளையாடுதல், போர்ட் கேம் விளையாடுதல், புத்தகங்களில் வர்ணம் தீட்டுதல், வாசித்தல் அல்லது உலாவச் செல்லுதல் போன்றவை சில உதாரணங்கள்.
 • மிகவும் சிறிய குழந்தைகளுக்கு, தாய்ப்பாலூட்டுதல், குளிப்பாட்டுதல், அல்லது உடை மாற்றுதல் போன்ற வழக்கமாகச் செய்யும் வேலைகளின்போது கண் ஒட்டுப் போடவும்.

கண் ஒட்டுப்பற்றி உதவக்கூடிய குறிப்புகள்

 • கண் ஒட்டுக்களை நீங்கள் மருந்துக்கடைகள் அல்லது பார்வை(கண்) நிலையங்கள் அல்லது அலுவலகங்களில் வாங்கலாம்.
 • ஒட்டும் பசை பூசப்பட்ட கண் ஒட்டுக்கள் உபயோகிப்பதற்கு இலகுவானவை. அவற்றைக் கண்ணுக்குமேலே ஒட்டுவதற்கு நீங்கள் வார்ப்பட்டை உபயோகிக்க வேண்டிய தேவையில்லை.
 • உங்கள் பிள்ளை மூக்குக் கண்ணாடி அணிபவனாக இருந்தால், அவனது கண்ணில் மேல் நேரடியாக ஒட்டைப் போட்டுவிடவும். ஒட்டுக்கு மேலாக மூக்குக் கண்ணாடி அணியவேண்டும்.

மருத்துவ சந்திப்புத் திட்டங்கள்

உங்கள் பிள்ளையின் மருத்துவ சந்திப்புத் திட்டத்திற்கு நீங்கள் வரவேண்டியது முக்கியம். மருத்துவ சந்திப்புத்திட்டத்தின்போது மருத்துவர் பின்வருவனவற்றைச் செய்வார்:

 • தெளிவற்ற பார்வையுள்ள கண்ணின் முன்னேற்றத்தைப் பரிசோதிப்பார்.
 • ஒட்டுப் போடப்பட்ட கண்ணின் பார்வை மோசமாகிக்கொண்டு போகாதிருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்வார்.

உங்கள் மருத்துவ சந்திப்புத்திட்டம் ரத்து செய்யப்பட்டால், இன்னொரு மருத்துவ சந்திப்புத் திட்டத்தைப் போடுவதற்காக, தயவுசெய்து உங்கள் பிள்ளை தொடர்ந்து கண் ஒட்டுப்போட்டிருக்கிறானா என்பதை தெளிவுபடுத்தவும்.

முக்கிய குறிப்புகள்

 • உங்கள் பிள்ளையின் பலமான கண்ணின் பார்வையைத் தடை செய்வதன்மூலம் கண் ஒட்டு வேலை செய்கிறது. இது பலவீனாமன் கண்ணை கடினமாக வேலை செய்யத் தூண்டுவதன்மூலம் பார்வையை முன்னேற்றுவிக்கிறது.
 • கண் ஒட்டு சலிப்படையச் செய்யலாம். எனவே பொறுமையாக இருப்பது மிகவும் முக்கியம்.
 • தெளிவற்ற பார்வையுள்ள கண்ணின் முன்னேற்றத்தை பரிசோதிப்பதற்காக மருத்துவத் தொடர் சந்திப்புக்கள் தேவைப்படுகின்றன.
Last updated: ஜூன் 11 2009