பூஞ்சைக்காளான் தொற்றுநோய்கள் (ஃபங்கள் இன்ஃபெக்க்ஷன்)

Fungal infections of the scalp, skin or nails [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பூஞ்சைக்காளான் தொற்றுநோய் என்றால் என்ன?

பூஞ்சைக்காளான் என்பது காளான், பாசி, மற்றும் ஈஸ்ற் போன்ற உயிரினங்கள். அவை ஒட்டுண்ணிகளாக வேறு தாவரங்கள் அல்லது விலங்குகளில் வாழும். சில பூஞ்சைக்காளான் மனிதர்களில் வாழ்ந்து தோல் வியாதியை ஏற்படுத்தும். சில பூஞ்சைக்காளான் தொற்றுநோய்கள் வளையப் படை என அழைக்கப்படும்

சில சாதாரண வகையான பூஞ்சைக்காளான் தொற்றுநோய்கள் பின்வருமாறு:

 • உடற் படர்தாமரை என்பது உடலில் ஏற்படும் ஒரு பூஞ்சைக்காளான் தொற்றுநோய்.
 • உச்சந்தலை படர்தாமரை என்பது உச்சந்தலையிலுண்டாகும் ஒரு பூஞ்சைக்காளான் தொற்றுநோய். இது மிகவும் சாதாரணமாக இளம் பிள்ளைகளுக்கு ஏற்படும்.
 • பாதப்படை என்பது பாதத்தில் ஏற்படும் ஒரு பூஞ்சைக்காளான் தொற்றுநோய். இது மிகவும் சாதாரணமாக பதின்ம வயதினர் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு உண்டாகும்.
 • நக பூஞ்சைக்காளான் பிள்ளைகளில் மிக அரிதாகவே உண்டாகும்.

வேறு சில பூஞ்சைக்காளான் நிலைமைகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, வாய் வெண்புண் ஐப் பார்க்கவும்

ஒரு பூஞ்சைக்காளான் தொற்றுநோய் பற்றிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

உடற் படர்தாமரை (உடற்படை)

 • மிக மெல்லிய சிவப்பு நிற ஓரங்களுடன் புடைப்புள்ள, வட்ட அல்லது நீள்வட்ட பொருக்குள்ள படைகள்
 • அரிப்பு
 • ஒரு வீக்கமுள்ள பகுதி, சீழ் கசியலாம்

உச்சந்தலைப் படர்தாமரை (புழு வெட்டு)

 • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தலைமுடி கொட்டும் படை
 • உச்சந்தலையில் கறுப்புப் புள்ளிகள்
 • செதில்கள் மற்றும் அரிப்புள்ள படைகள்
 • முடிகள் குட்டையாக உடைந்துபோதல்
 • மென்மையான கட்டிபோல உயர்த்தப்பட்ட பகுதி (மண்டைத் தோல் சீழ்க் கட்டி)

பாதப் படை

 • கால்விரல்களுக்கிடையில் வெடித்த, புண்ணுள்ள தோல்
 • அரிப்பு மற்றும் பச்சையான தோல்
 • நகங்கள் தடித்ததாகவும் நிறமாறியதாகவும் ஆகலாம்
 • உள்ளங்காலும் உட்படுத்தப்பட்டதாகலாம்

பூஞ்சைக்காளான் தொற்றுநோய்களுக்கான காரணங்கள்

பூஞ்சைக்காளான் உச்சந்தலை அல்லது உடல் தோலின் மேற்பரப்பைத் தாக்கும்போது பூஞ்சைக்காளான்தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன. சில பூஞ்சைக்காளான் தொற்றுநோய்கள் வளருவதற்கு, வெப்பமான, ஈரலிப்பான, சுத்தமற்ற தோல் தேவைப்படுகிறது. பூஞ்சைக்காளான் தொற்றுநோய்களைத் தடுப்பதற்கு நல்ல சுகாதரத்தைக் கைக்கொள்ளும்படி உங்கள் பிள்ளையை உற்சாகப்படுத்தவும்.

உடற்படர் தாமரை நோயைப் பிள்ளைகள் ஒரு தோற்றுநோயுள்ள நபர், ஒரு செல்லப்பிராணி, அல்லது மண்ணிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். உங்கள் பிள்ளை தொற்றுநோயை தொப்பிகள், சீப்புகள், உடைகள், அல்லது தரைவிரிப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

இளம் பருவத்தினரில் அசுத்தமான, வேர்வையுள்ள பாதங்கள் பாதப்படையை ஏற்படுத்தலாம். உடை மாற்றும் அறையில் வெறும் காலுடன் தரையில் நடத்தல் மற்றும் சமுதாய குளங்கள் மற்றும் உடற்பயிற்சிக்கூட ஷவர்களில் குளித்தல் என்பனவற்றின் மூலமும் தொற்றுநோய் பரவலாம்.

பூஞ்சைக்காளான் தொற்றுநோய்க்குச் சிகிச்சையளித்தல்

உடலை அல்லது முகத்தைப் பாதிக்கும் தொற்றுநோய்களுக்கு, உங்கள் பிள்ளையின் மருத்துவர் பூஞ்சைக் காளான் நீக்கி லோஷனைப் பரிந்துரை செய்வார். தொற்றுநோய் பரவலாக இருந்தால் அல்லது உச்சந்தலை பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் வாய் வழியாக உட்கொள்ளும் ஒரு பூஞ்சைக் காளான் நீக்கி மருந்தைப் பரிந்துரை செய்யலாம்.

பாதப் படை நோய்க்கு, விசேஷித்த ஸ்பிரே மருந்துகள், பவுடர்கள், மற்றும் கிறீம்கள் உங்கள் மருந்துக் கடையில் கிடைக்கும். மிகவும் பலனளிக்கக்கூடிய வெளிப்பூச்சு மருந்துகள் ரெர்பினஃபைன், அஸொலெஸ், மற்றும் சைக்ளோபிறொக்ஸொலமைன் என்பனவாகும்.

பூஞ்சைக்காளான் தொற்றுநோய்களைத தடுத்தல்

பூஞ்சைக்காளான் தொற்றுநோய்கள் ஒருவரோடு ஒருவர் நேரடித் தொடர்பு வைப்பதன் மூலம் பரவலாம். தொற்றுநோயுள்ள நபர் அல்லது செல்லப்பிராணிகளிடமிருந்து தூர விலகியிருக்கும்படி உங்கள் பிள்ளையை உற்சாகப்படுத்தவும். உங்கள் செல்லப்பிராணிகளுக்கு பூஞ்சைக்காளான் தொற்றுநோய்கள் இருப்பதாகச் சந்தேகித்தால் அவற்றிற்குப் பரிசோதனை செய்விக்கவும். உங்கள் பிள்ளை, சீப்புகள் அல்லது தொப்பிகள் போன்ற தனிப்பட்ட நபருக்குரிய பொருட்களைத் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதை உற்சாகப்படுத்தவேண்டாம். நல்ல சுகாதாரத்தைக் கைக்கொள்ளும்படியும் பொது இடங்களில் காலணிகளை உபயோகிக்கும்படியும் உங்கள் பிள்ளையை உற்சாகப்படுத்தவும்.

முக்கிய குறிப்புகள்

 • பாதப் படை நோய் பதின்ம வயதினரில் சாதாரணமானது.
 • நக பூஞ்சைக்காளான் தொற்றுநோய்கள் பிள்ளைகளுக்கு அரிதாகவே ஏற்படும்.
 • உங்கள் பிள்ளை, சீப்புகள் அல்லது தொப்பிகள் போன்ற தனிப்பட்ட நபருக்குரிய பொருட்களைத் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதை உற்சாகப்படுத்தவேண்டாம்.
 • மருந்துக் குறிப்பில்லாது வாங்கும், பூஞ்சைக் காளான் நீக்கி லோஷன்கள் பெரும்பாலும் அரிப்பைக் குணமாக்க உதவி செய்யும். தொற்றுநோய் கடுமையானதாக க இருந்தால் அல்லது உச்சந்தலை பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் வாய் வழியாக உட்கொள்ளும் ஒரு மருந்தைப் பரிந்துரை செய்யலாம்.
Last updated: மார்ச் 03 2010