முதல் வருடத்தில் வளர்ச்சி

Growth in the first year [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

ஒரு குழந்தையின் வாழ்க்கையின் முதல் வருட சாதாரண வளர்ச்சி மற்றும் எடை அதிகரிப்பு பற்றி வாசிக்கவும்.

வளர்ச்சி மற்றும் எடை அதிகரித்தல்

ஒவ்வொரு குழந்தை நலச் சந்திப்பின்போதும் உங்கள் குழந்தையின் எடை மற்றும் உயரம் அளக்கப்பட்டு அதே வயதுள்ள சாதாரண குழந்தைகளின் வரிசையில் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். அதே வயதையுடைய மற்றக் குழந்தைகளுடன் ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் எடை மற்றும் உயரம் எத்தனை சதவீதம் இருக்கிறது என உங்களுக்குத் தெரிவிக்கப்படும். உதாரணமாக, உங்கள் குழந்தை எடையில் 90% இல் இருக்கிறான் என உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவனது சமவயதுக்குழந்தைகளில் 90% குழந்தைகளைவிட அதிகமான எடையை உடையவனாயிருக்கிறான் என்பதை அது அர்த்தப்படுத்தும்.

பெரும்பாலான, நிறை மாதத்தில் பிறந்த ஆரோக்கியமான குழந்தைகள் பின்வரும் அட்டவணைப்படியான எடையைக் கொண்டவர்களாயிருப்பார்கள்:

வயதுஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் எடை
ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கும் எடை
ஒன்று முதல் மூன்று மாதங்கள்30 கி (ஏறக்குறைய 1 அவு)900 கி (ஏறக்குறைய 2 இராத்தல்கள்)
நான்கு முதல் 12 மாதங்கள்20 கி (ஏறக்குறைய 0.7 அவு)600 கி (ஏறக்குறைய 1 இரா. 5 அவு)

ஒரு உபயோகமான அனுபவ வழி என்னவென்றால், மிகவும் அதிக ஆரோக்கியமான, நிறைப் பிரசவத்தில் புதிதாகப் பிறந்த பிள்ளைகள், பிறப்பிலிருந்த தங்கள் எடையை நான்கு மாதங்களில் இரட்டிப்பாகவும், தங்கள் முதலாவது பிறந்த நாள் வரும்போது மும்மடங்காகவும் அதிகரிக்கிறார்கள்.

ஆயினும், எல்லாக் குழந்தைகளும் தங்கள் சொந்த வேகத்தில்தான் வளருவார்கள் என்பதை நினைவில் வைக்கவும். மேலே குறிப்பிடப்பட்ட வேகத்தைவிட விரைவாகவோ அல்லது தாமதமாகவோ உங்கள் குழந்தையின் எடை அதிகரிக்கலாம். ஒரு சிறிய அல்லது பெரிய குழந்தை பரிபூரண ஆரோக்கியமானதாக இருக்கலாம். அத்துடன், குழந்தைகள் அதிக விரைவாகவும் வளருவார்கள். எடை அதிகரிக்கும் வேகத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். ஆகவே, உங்கள் குழந்தையை ஒவ்வொரு குழந்தை நல சந்திப்புக்காக மருத்துவரிடம் கொண்டுவரும்போதும் அவனுடைய எடை அல்லது உயரம் அதே சதவீதத்தில் தொடர்ந்து இருக்காது.

உங்கள் குழந்தை பிறப்பின்போது மிகவும் பெரியவனாக இருந்திருந்தால், முதற் சில மாதங்களுக்கு மெதுவாக வளர்வதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. பெரும்பாலும், ஆறு முதல் எட்டு மாதங்களாகும்போது அவனது சமவயதுக் குழந்தைகளின் எடைக்கு ஏறக்குறையச் சமமான எடையில் இருப்பான். உங்கள் குழந்தை குறைமாதத்தில் பிறந்ததினால் சிறியவனாக இருந்தால், அவனது வாழ்க்கையின் முதல் வருடத்தில் வழக்கமான எடையை எட்டக்கூடும்.

உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் எடை அதிகரிப்பின் தடத்தை வைத்திருப்பதற்கான மிகச் சிறந்த வழி ,ஒழுங்காக குழந்தை நல சந்திப்புத் திட்டத்துக்கு அவனைக் கொண்டுவருதல் ஆகும். அவனது உடல்நலப் பராமரிபளிப்பவர் ஒவ்வொரு முறையும் அவனது எடை, உயரம், மற்றும் தலைச் சுற்றளவை கவனமாக அளந்து வரைபடம் வரைந்து, தரப்படுத்தப்பட்ட வளர்ச்சி அட்டவணையுடன் ஒப்பிடுவார்.

உலக சுகாதார சங்கத்திலிருந்து, பெண்பிள்ளைகளுக்கான சில பெறப்பட்ட எடை மற்றும் வளர்ச்சிக்கான அட்டவணைகளில் சில பின்வருமாறு (ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும்):

உலக சுகாதார சங்கத்திலிருந்து, ஆண்பிள்ளைகளுக்கான சில பெறப்பட்ட எடை மற்றும் வளர்ச்சிக்கான அட்டவணைகளில் சில பின்வருமாறு (ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும்):

உங்கள் பிரதேசத்தில் உபயோகிப்பதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட அட்டவணையை உங்கள் குழந்தையின் மருத்துவர் உபயோகிப்பார்.

வளர்ச்சி மற்றும் எடை அதிகரிக்கும் வேகத்தில் ஏற்றம் இறக்கம் இருந்தாலும், காலப்போக்கில், தரப்படுத்தப்பட்ட வளர்ச்சி அட்டவணையை உபயோகிக்கும்போது, உங்கள் குழந்தை போதியளவு வளர்ச்சி வேகத்தைக் காண்பிக்காவிட்டால், அவன் வளர்ச்சியில் பின்னடைவு போன்ற பிரச்சினையைக் கொண்டிருக்கிறான் என்பதை அது அர்த்தப்படுத்தலாம்.

வளர்ச்சியில் பின்னடைவு என்றால் என்ன?

வளர்ச்சியில் பின்னடைவு என்பது பின்வருவனவற்றுள் ஏதாவது ஒன்று சம்பவிக்கும் போது:

  • தரப்படுத்தப்பட்ட வளர்ச்சி அட்டவணையின்படி மூன்றாவது சதவீதத்துக்கும் குறைவான எடை
  • உயரத்துக்கான சிறந்த எடையை விட 20% குறைவான எடை
  • முன்பு நிலைநாட்டப்பட்ட வளர்ச்சிக்கான வளைகோட்டிலிருந்து குறைவுபடுதல்

வளர்ச்சியில் பின்னடைவுள்ள குழந்தைகளில், வளர்ச்சி குறைவுபடுவதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதற்காக, கவனமாக மதிப்பீடு செய்யப்படவேண்டும். வளர்ச்சியை எட்டுவதற்காக அவர்களுக்கு மேலதிக கலோரிகள் தேவைப்படலாம். இந்தக் குழந்தைகளும் கூட அவர்களது குழந்தை மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவரால் நெருக்கமாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.

தலையின் சுற்றளவு

ஒவ்வொரு குழந்தை நல சந்திப்புத் திட்டத்தின்போதும் உங்கள் குழந்தையின் எடை மற்றும் உயரத்துடன் அவனது தலையின் சுற்றளவும் அளக்கப்படும். உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவர் உங்கள் குழந்தையின் தலையைச் சுற்றி, மிகப் பெரிய பகுதியில் அளவெடுப்பார்: கண் இமை மற்றும் காதுகள், மற்றும் தலையின் பின் பக்கத்தைச் சுற்றி அளவெடுப்பார். இந்த அளவீடுகள் பதிவு செய்யப்பட்டு முந்தய அளவீடுகளுடனும் சம வயதையுடைய குழந்தைகளின் வழக்கமான வரிசைகளுடனும் ஒப்பிடப்படும். தலை வளர்ச்சி பெரும்பாலும் மூளை வளர்ச்சியுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளது.

உங்கள் குழந்தையின் தலை வளர்ச்சியில் ஒரு பிரச்சினையிருந்தால், உங்கள் மருத்துவர் ஒரு சாத்தியமாகக்கூடிய பிரச்சினை பற்றிக் கவலையடைவார். உதாரணமாக, ஒரு அசாதாரணமான பெரிய தலை, அல்லது சாதாரண தலையைவிட வேகமாக வளரும் ஒரு தலை, மண்டையோட்டினுள் திரவ அதிகரிப்பு இருப்பதை அர்த்தப்படுத்தலாம். விதிவிலக்கான ஒரு சிறிய அளவு தலை, அல்லது வழக்கத்தைவிட மெதுவாக வளரும் ஒரு தலை, மூளை சரியானபடி விருத்தியடையவில்லை என்பதை அர்த்தப்படுத்தலாம்.

Last updated: அக்டோபர் 18 2008