முழுமையான நோய்த்தடுப்பாற்றலைப் பெற்றுக்கொள்ளாத பிள்ளைகளுக்கு காலதாமதமான நோய்த்தடுப்பாற்றலை ஈடு செய்தல்

Immunization "catch-up" for children who have not been fully immunized [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

தராதரக் காலஅட்டவணைப்படி முழுமையாக நோய்த்தடுப்பாற்றல் செய்யப்படாத பிள்ளைகளுக்கு நோய்த்தடுப்பாற்றல் பற்றி இலகுவாக விளங்கிக் கொள்ளக்கூடிய ஒரு கண்ணோட்டம்.

முக்கிய குறிப்புகள்

  • நோய்த்தடுப்பாற்றல் உங்கள் பிள்ளையை நோய்க்கு எதிராகப் பாதுகாக்கிறது.
  • கனடா நாட்டில், பிள்ளைகள் வழக்கமாக கால அட்டவணைப்படி நோய்த்தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
  • ஒரு பிள்ளை முழுமையான நோய்த் தடுப்பாற்றல் மருந்தைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு, நோய்வாய்ப்பட்டிருத்தல் அல்லது கனடா நாட்டுக்குப் புதிதாக வந்திருத்தல் உட்பட அநேக காரணங்கள் இருக்கின்றன.
  • உங்கள் பிள்ளைக்கு வழக்கமான கால அட்டவணைப்படி நோய்த்தடுப்பு மருந்து கொடுக்கப்படாதிருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவருக்குத் தெரிவிக்கவும்.
  • உங்கள் பிள்ளை நோய்த்தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதற்கான ஒரு பதிவேட்டைக் கொண்டிருக்கவேண்டும்.

நோய்த்தடுப்பாற்றல் (தடுப்பு மருந்து) உங்கள் பிள்ளையை அநேக கடுமையான, உயிரை அச்சுறுத்தும் தொற்றும் தன்மையுள்ள நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. உங்கள் மாகாணம், மாநிலம், அல்லது நாட்டுக்கு சிபாரிசு செய்யப்பட்ட கால அட்டவணைப்படி உங்கள் பிள்ளைக்கு “வேளைமருந்து” கொடுக்கப்படவேண்டும். உங்கள் பிள்ளைக்கு எந்த நோய்த்தடுப்பாற்றல் மருந்து கொடுக்கப்பட்டது மற்றும் எப்போது கொடுக்கப்பட்டது என்பது பற்றிய ஒரு பதிவேட்டையும் உங்கள் பிள்ளை கொண்டிருக்கவேண்டும்.

கனடா நாட்டுக்குப் புதிதாக வந்த பிள்ளைகள் – குடிவந்தவர்கள், அகதிகள், அல்லது தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் – கனடா நாட்டின் தராதரப்படி தடுப்புமருந்து பெற்றிருக்கமாட்டார்கள்.

நோய்த்தடுப்பாற்றலைப் பெற்றுக்கொள்வதற்கான கனடா நாட்டின் கால அட்டவணை

கனடா நாட்டில், பிள்ளைகள் வழக்கமாக பின்வரும் வயதுகளில் நோய்த்தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்வார்கள்:

  • 2 மாதங்கள்
  • 4 மாதங்கள்
  • 6 மாதங்கள்
  • 12 மாதங்கள்
  • 15 மாதங்கள்
  • 18 மாதங்கள்
  • 4 முதல் 6 வருடங்கள்
  • 9 முதல் 13 வருடங்கள்
  • 14 முதல் 16 வருடங்கள்

உங்கள் பிள்ளை முழுமையான நோய்த்தடுப்பாற்றல் மருந்தைப் பெற்றிருக்காவிட்டால்

பிள்ளைகள் முழுமையான நோய்த்தடுப்பாற்றல் மருந்தைப் பெற்றுக்கொள்ளாதிருப்பதற்குப் பின்வருவன போன்ற அநேக காரணங்கள் இருக்கின்றன:

  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சந்திப்புத் திட்டங்களைத் தவறவிடுதல்
  • ஒரு வேளைமருந்தை எடுத்துக்கொள்ளவேண்டிய சமயத்தில் நோய்வாய்ப்பட்டிருத்தல்
  • கனடா நாட்டிற்குப் புதியதாக வந்திருக்கலாம்: குடிவந்தவர்கள், அகதி, மற்றும் சர்வதேச ரீதியில் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் ஆகியோர் கனடா நாட்டின் கால அட்டவணைப்படி நோய்த்தடுப்பாற்றல் பெற்றிருக்கமாட்டார்கள் அல்லது அவர்கள் வசித்த நாட்டில் சில நோய்த்தடுப்பு மருந்துகள் கிடைக்காமல் இருக்கலாம்.

இந்தப் பிள்ளைகள் ஒரு தீங்கு விளைவிக்கும் நோய்க்கு ஆளாகும் ஆபத்திலிருக்கலாம். ஏதாவது காரணத்தினால் உங்கள் பிள்ளை முழுமையான நோய்த்தடுப்பாற்றல் பெற்றிருக்காவிட்டால், அவளின் வேளைமருந்துகள் இந்நாள் வரையாக சரி செய்யப்படுவதை நிச்சயப்படுத்துவதற்காக, உங்கள் மருத்துவர் அல்லது வேறு உடல்நலப் பராமரிப்பளிப்பவரிடம் பேசவும்.

உங்கள் பிள்ளை பிறந்ததிலிருந்து உங்கள் பராமரிப்பில் இருந்திருக்காவிட்டால், அவளின் தடுப்பு மருந்தின் வரலாறைப் பற்றித் தீர்மானிப்பது கடினமாக இருக்கலாம். உங்கள் பிள்ளையிடம் நோய்த்தடுப்பாற்றல் பெற்றுக்கொண்டது பற்றிய ஒரு பதிவேடு இருந்தால், அதை உங்கள் மருத்துவரிடம் காண்பிக்கவும்.

முழுமையான நோய்த்தடுப்பாற்றலைப் பெற்றுக்கொள்ளாத பிள்ளைகள், அல்லது ஒரு பதிவேடு இல்லாத பிள்ளைகள் நோய்த்தடுப்பாற்றல் மருந்தை ஒரு கால அட்டவணைப்படி கிரமமாகப் பெற்றுக்கொள்ளத் தொடங்க வேண்டும். இந்தக் கால அட்டவணை உங்கள் பிள்ளையின் வயதைப் பொறுத்திருக்கும். உங்கள் பிள்ளைக்கு எது தகுதியானது என்பதைப் பற்றி உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் பேசவும்.

பிள்ளையின் வரலாறு பற்றி நிச்சயமில்லாவிட்டால் ஒரு தடுப்பு மருந்து கொடுப்பது எப்போதும் விரும்பந்தக்கது. கடந்த காலத்தில் நோய்த்தடுப்பு மருந்துக்கு ஒவ்வாமை எதிர்விளைவு இருந்திருந்தால், அல்லது நோய்த்தடுப்பு மருந்துக்கான பிரதிபலிப்பைப் பாதிக்கக்கூடிய அடிப்படையான நோய் ஏதாவது இருந்தாலன்றி, ஏதாவது நோய்த்தடுப்பாற்றல் மருந்தை மீண்டும் கொடுப்பதில் தீங்கேதுமில்லை.

சில வேளைகளில், உங்கள் பிள்ளையின் இரத்தத்தில் எந்தப் பிறபொருள் எதிரி காணப்படவில்லை என்பதை கண்டுபிடிப்பதற்காக, உங்கள் மருத்துவர் ஒரு இரத்தப் பரிசோதனை செய்வார். இது, உங்கள் பிள்ளைக்கு இன்னும் எந்த நோய்த்தடுப்பு மருந்து தேவைப்படுகிறது என்பதை அவருக்குத் தெரிவிக்கும்.

எல்லா நோய்த்தடுப்பு மருந்துகளுக்கும் போலவே, உங்கள் பிள்ளைக்கு ஒரு கடுமையான நோய் அல்லது ஒரு காய்ச்சல் இருந்தால், அவளுக்கு ஒரு நோய்த்தடுப்பு மருந்து கொடுப்பதற்கு நீங்கள் காத்திருக்கவேண்டியிருக்கலாம்.

நோய்த்தடுப்பு மருந்து கொடுக்கப்படக்கூடாததற்கான காரணங்கள்

பின்வரும் நிலைமைகளில் ஏதாவது உங்கள் பிள்ளைக்குப் பொருந்தினால், உங்கள் பிள்ளைக்கு நோய்த்தடுப்பு மருந்து கொடுப்பதற்கு முன்பாக உங்கள் மருத்துவருக்குத் தெரிவிக்கவும்:

  • முந்திய ஒரு நோய்த்தடுப்பு மருந்துக்கு உங்கள் பிள்ளைக்கு ஒவ்வாமை எதிர்விளைவு இருந்தது.
  • உங்கள் பிள்ளைக்கு வலிப்பு நோய் அல்லது கடுமையான நரம்பு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது
  • உங்கள் பிள்ளைக்கு மோசமான நோய் எதிப்பு சக்தி இருக்கிறது. பலவீனமான நோய் எதிர்ப்புத் தொகுதியுள்ள பிள்ளைகளுக்கு கொப்புளிப்பான் அல்லது MMR போன்ற உயிருள்ள வைரஸ் நோய்த் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படக்கூடாது. ஏனென்றால், உயிருள்ள வைரஸ் நோய்த் தடுப்பு மருந்துகள், நோய்த் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்ட ஒருவரின் உடலில் வாழ்ந்து மற்றும் பிரிவடையும். நோய் எதிர்ப்புத் தொகுதி பலவீனமாக இருந்தால் அவை அந்த நோயை அந் நபரில் ஏற்படுத்திவிடும்.
  • உங்கள் பிள்ளைக்கு முட்டைக்கு ஒவ்வாமை இருக்கிறது. முட்டைகளுக்குக் கடுமையான ஒவ்வாமையுள்ள பிள்ளைகள் இன்ஃபுளுவென்சாவிற்க்கான நோய்த் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளக்கூடாது. ஆயினும், முட்டைகளுக்கு ஒவ்வாமையுள்ள பிள்ளைகள் வழக்கமான எல்லா நோய்த்தடுப்பு மருந்துகளையும் பெற்றுக்கொள்ளலாம். சின்னமுத்து மற்றும் கூகைக்கட்டுக்கான நோய்த்தடுப்பு மருந்து கோழிக்குஞ்சின் உயிரணுக்களில் வளர்க்கப்பட்டாலும், இந்த நோய்த்தடுப்பு மருந்துகளிலிருந்து முட்டைப் புரதங்கள் அகற்றப்படுகின்றன. உங்கள் பிள்ளையின் தோல், முட்டை ஒவ்வாமைக்கான பரிசோதனை செய்யப்படாமலேயே இந்த நோய்த்தடுப்பு மருந்து அவளுக்குக் கொடுக்கப்படலாம்.
Last updated: ஆகஸ்ட் 31 2010