முதுகுத் தண்டு-மூளை வீக்கம்

Meningitis [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

முதுகுத் தண்டு-மூளை வீக்கம் என்பது ஒருவரின் முதுகுத்தண்டு மற்றும் மூளையைச் சுற்றியுள்ள திரவத்தில் ஏற்படும் தொற்று நோயாகும்.

முதுகுத் தண்டு-மூளை வீக்கம் (மெனின்ஜைடிஸ்) என்பது என்ன?

முதுகுத் தண்டு-மூளை வீக்கம் (உச்சரிப்பு: மெனின் ஜைடிஸ்) என்பது ஒருவரின் முதுகுத்தண்டு மற்றும் மூளையை சுற்றியுள்ள திரவத்தில் ஏற்படும் தொற்று நோயாகும். இது மூளை-முதுகுத்தண்டுத் திரவம் அதாவது செரிபரமுள்ளிய திரவம் அல்லது CSF என்று அழைக்கப்படும்.

முதுகுத் தண்டு-மூளை வீக்கம் (மெனின்ஜைடிஸ்), சிலவேளைகளில் முதுகுத்தண்டு வீக்கம் (ஸ்பைனல் மெனின்ஜைடிஸ்) என்றும் அழைக்கப்படுகிறது.

மூளை உறையழற்சி (மெனஞ்சைடிஸ்) மூளைக்கும் மண்டை ஓட்டுக்கும் இடையில் உள்ள மென்சவ்வையும் தொற்றுதலுக்கு உட்பட்ட வீக்கமடைந்த மென்சவ்வையும் கிட்டவாகக் காட்டும் படம்
மூளை உறையழற்சி என்பது மூளையையும் முள்ளந்தண்டு வடத்தையும் மூடியிருக்கும் மெல்லிய திசுக்களாலான உறையைத் தாக்கும் நோயாகும்.

பிள்ளைகளைவிட குழந்தைகளில் முதுகுத் தண்டு-மூளை வீக்கம் நோய் வித்தியாசமானதாக காட்சிதரும்

2 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகள்

வழக்கமாக, 2 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தண்டு-மூளை வீக்கம் நோயின் பின்வரும் அறிகுறிகள் காணப்படும்:

 • கடும் காய்ச்சல்
 • தலைவலி
 • கழுத்து விறைப்பு

இந்த அறிகுறிகள் உண்டாகி, அதிகரிப்பதற்கு, சில மணி நேரங்கள் அல்லது 1 முதல் 2 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.

முதுகுத் தண்டு-மூளை வீக்கம் நோயின் வேறு அறிகுறிகள் பின்வருவனவற்றைக் கொண்டிருக்கலாம்:

 • வயிற்றில் அசௌகரியம்(குமட்டல்)
 • வாந்தியெடுத்த்ல்
 • பிரகாசமான வெளிச்சத்தைப் பார்க்கும் போது அசௌகரியமாக உணர்தல்
 • குழப்பம்
 • நித்திரை தன்மை

நோய் அதிகரித்துக்கொண்டு போகும்போது, நோயாளிகள் எந்த வயதிலிருந்தாலும் வலிப்பு வரலாம்.

குழந்தைகள் மற்றும் 2 வயது வரையுள்ள பிள்ளைகள்

குழந்தைகளில் நோய் வித்தியாசமாக இருக்கும். முதுகுத் தண்டு-மூளை வீக்க நோயுள்ள குழந்தைகளுக்கு பின்வரும் அறிகுறிகள் இருக்கலாம்:

 • அதிகமாக அசையவில்லை அல்லது அதிகமானதைச் செய்யவில்லை
 • எரிச்சல் அல்லது விபரீதமாக நடந்து கொள்ளுதல்
 • வாந்தி எடுத்தல்
 • சரியாக தாய்ப்பால் குடிப்பதில்லை

காய்ச்சல், தலைவலி, மற்றும் கழுத்து விறைப்பு போன்ற, குழந்தைகளுக்கு இல்லாத அறிகுறிகள் வளர்ந்த பிள்ளைகளுக்கு இருக்கலாம். அவர்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால், சாதாரணமான நடத்தையிலிருந்து அவற்றை வித்தியாசப்படுத்திப் பார்ப்பது கடினமாக இருக்கலாம்.

தொற்றுநோய் அதிகரித்துக் கொண்டே போகும்போது, எந்த வயது நோயாளியாளிக்கும் வலிப்பு வரலாம்.

உங்கள் பிள்ளைக்கு முதுகுத் தண்டு-மூளை வீக்க நோய் இருக்கலாம் என்பதாக நீங்கள் நினைத்தால், உடனே அவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்

உங்கள் பிள்ளைக்கு மேலே விபரிக்கப்பட்ட அறிகுறிகள் இருந்தால், உடனே அவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். கூடிய விரைவில் நோயைக் கண்டுபிடித்துச் சிகிச்சை செய்வது மிகவும் முக்கியம்.

கீழ்முதுகுக் குத்துமூளை முண்ணான் பாயத்தின் (CSF) மாதிரி எடுப்பதற்காக செலுத்தப்பட்ட ஊசியுடன் முள்ளந்தண்டு, முண்ணான் மற்றும் மூளை முண்ணான் பாயம்
இரண்டு
முதுகெலும்புகளுக்கிடையில் கீழ் முதுகுப் பகுதியில் ஒரு சிறிய ஊசி ஏற்றப்படும்.  இது முதுகுத் தண்டுவடம் முடியும் இடத்திற்குக் கீழுள்ள பகுதி.  செரிபரமுள்ளிய திரவம் பரிசோதனைக்காக  எடுக்கப்பட்டு ஆய்வுகூடத்திற்கு அனுப்பப்படும்.

மருத்துவர், ஒரு பிள்ளையின் மூளை மற்றும் முதுகுத்தண்டைச் சுற்றியுள்ள திரவத்தைப் (CSF) பரிசோதிப்பதன் மூலம் அவனுக்கு முதுகுத் தண்டு-மூளை வீக்கம் நோய் இருக்கிறதா என்று கண்டுபிடிப்பார். உங்கள் பிள்ளையின் CSF யின் ஒரு மாதிரியை எடுப்பதற்காக மருத்துவர் உங்கள் பிள்ளையின் முதுகுப் பகுதியில் ஓட்டை போடுவார். மருத்துவர் உங்கள் பிள்ளையின் முதுகுத்தண்டில் ஊசியைக் குத்தி, CSF இலகுவாகக் கிடைக்கக் கூடிய முதுகுப்பகுதியில் அதைத் தாழ்த்துவார்.இது முதுகுத்தண்டில் தட்டுதல் (ஸ்பைனல் டப்) என்றும் அழைக்கப்படுகிறது.

எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரி, பரிசோதனைக்கூடதில் பரிசோதனை செய்யப்படும். இது முதுகுத் தண்டு-மூளை வீக்க நோயின் வகையையும் காட்டும். மருத்துவர், உங்கள் பிள்ளைக்கு எந்த வகையான முதுகுத் தண்டு-மூளை வீக்க நோய் இருக்கிறது என்று அறிந்து கொள்ளும்போது, அவர் சரியான சிகிச்சையை உங்கள் பிள்ளைக்கு கொடுப்பார்.

பெரும்பாலும் முதுகுத் தண்டு-மூளை வீக்க நோய் ஒரு வைரஸ் அல்லது பக்டீரியாவினால் உண்டாகிறது

உங்கள் பிள்ளை எப்படி சிகிச்சையளிக்கப்படும் என்பது முதுகுத் தண்டு-மூளை வீக்க நோயின் காரணத்தைப் பொறுத்தது.

வைரசால் உண்டாகும் முதுகுத் தண்டு-மூளை வீக்கம்

வைரஸால் உண்டாகும் முதுகுத் தண்டு-மூளை வீக்க நோய் வைரல் முதுகுத் தண்டு-மூளை வீக்க நோய் என்றழைக்கப்படும். வைரல் முதுகுத் தண்டு-மூளை வீக்க நோய் பொதுவாக, மிகவும் ஆபத்தானதல்ல. பெரும்பாலும் இது குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் செய்யாமலேயே நிவாரணமடையும்

பக்டீரியாவால் உண்டாகும் முதுகுத் தண்டு-மூளை வீக்கம்

முதுகுத் தண்டு-மூளை வீக்கம் நோய் பக்ரீரியாவினால் உண்டானால் அது பக்ரீரியல் முதுகுத் தண்டு-மூளை வீக்கம் நோய் என்றழைக்கப்படும். பக்ரீரியல் முதுகுத் தண்டு-மூளை வீக்கம் நோய் மிகவும் ஆபத்தானது. அது மூளைசேதமடைதல், காது கேளாமை, அல்லது படிப்பில் திறமைக்குறைவு போன்றவற்றை ஏற்படுத்த்க்கூடும்.

நரம்பூடாக(IV) ஊசி மூலம் அன்டிபையோடிக் மருந்தைஉங்கள் பிள்ளையின் இரத்ததில் நேரடியாகச் செலுத்துவதன் மூலம், பக்ரீரியல் முதுகுத் தண்டு-மூளை வீக்க நோய்க்கான சிகிச்சை செய்யப்படுகிறது. வழக்கமாக, இந்த அன்டிபையோடிக் மருந்து பக்ரீரியல் முதுகுத் தண்டு-மூளை வீக்க நோயை நிவாரண்மடையச் செய்யலாம். முடிந்தளவு விரைவாக சிகிச்சையைத் தொடங்கவேண்டியது முக்கியம்.

பல வகையான பக்ரீரியல் முதுகுத் தண்டு-மூளை வீக்க நோய்கள் இருக்கின்றன. அன்டிபையோடிக் மருந்துகள், சிலவகையான நோய்கள் பரவாமலும் மற்றவர்களுக்கு தொற்றாமலும் தடுக்கலாம். இதன் காரணமாக, முதுகுத் தண்டு-மூளை வீக்க நோய்க்கு எந்த வகையான பக்ரீரியா காரணம் என்பதை தெரிந்து கொள்வது முக்கியம்.

முதுகுத் தண்டு-மூளை வீக்க நோய் மற்றவர்களுக்கும் பரவலாம்

சில வகையான பக்ரீரியல் முதுகுத் தண்டு-மூளை வீக்க நோய் தொற்றிக்கொள்ளும் தன்மையுடயவை. “தொற்றிக்கொள்ளும் தன்மையுடயவை” என்றால் அது மற்றவர்களுக்கும் பரவலாம். தொற்றுநோயுள்ள ஒருவரின் வாய் அல்லது மூக்கிலிருந்து வரும் சளியை மற்றவர் தொடும்போது பக்ரீரியா பரவும். முதுகுத் தண்டு-மூளை வீக்க நோய் பரவும் வழிகளுள் சில பின்வருமாறு:

 • இருமல்
 • முத்தமிடுதல்
 • ஒரே கிண்ணத்தில் குடித்தல்

முதுகுத் தண்டு-மூளை வீக்க நோய், சாதாரண தடிமல் அல்லது காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் போல் எளிதாகப் பரவாது. அதவது, முதுகுத் தண்டு-மூளை வீக்க நோயுள்ள ஒருவரின் சுவாசத்திலிருந்து உங்களுக்கு முதுகுத் தண்டு-மூளை வீக்கம் நோய் பரவாது.

முதுகுத் தண்டு-மூளை வீக்க நோய் என்பது பொதுசன உடல்நல பிரிவினருக்கு அறிவிக்க வேண்டிய ஒரு தொற்றுநோயாகும். உங்கள் பிரதேசத்திலிருக்கும் பொதுசன உடல்நல பிரிவுத் துறையினர், உங்கள் பிள்ளையைப் பற்றியும் எப்படி முதுகுத் தண்டு-மூளை வீக்க நோய் எப்படி உண்டானது என்பது பற்றியும் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக உங்களைத் தொடர்பு கொள்வர்கள்.

முதுகுத் தண்டு-மூளை வீக்க நோயாளிகளுடன் நெருங்கியிருப்பதைத் தவிருங்கள்

முதுகுத் தண்டு-மூளை வீக்க நோயுள்ள ஒருவரிடமிருந்து நோய் தொற்றிக்கொள்ளக் கூடியவர்கள் பின்வருமாறு:

 • ஒரு ஆண் நண்பன் அல்லது பெண் நண்பி
 • ஒரே வீட்டிலிருக்கும் குடும்ப அங்கத்தினர்கள்
 • முதுகுத் தண்டு-மூளை வீக்க நோயுள்ள ஒருவருடன் பாடசாலையில் அல்லது பகல் நேர பராமரிப்பு நிலையத்தில் உள்ளவர்கள்

இவர்கள், முதுகுத் தண்டு-மூளை வீக்க நோயாளிகளுடன் “நெருங்கிய தொடர்புள்ளவர்கள்” எனப்படுவர்.

நீங்களோ அல்லது உங்கள் குடும்பதினரோ, முதுகுத் தண்டு-மூளை வீக்க நோயாளியுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாகவிருந்தால் உங்கள் மருத்துவரை சந்தியுங்கள். உங்களுக்கு நோய் தொற்றிக்கொள்ளாதிருக்க, நீங்கள் அன்டிபையோடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கலாம்.

உங்கள் பிள்ளை முதுகுத் தண்டு-மூளை வீக்க நோயுடன் மருத்துவமனையில் இருந்தால்

உங்கள் பிள்ளை முதுகுத் தண்டு-மூளை வீக்க நோயுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், உங்கள் பிள்ளையைப் பராமரிக்கும் மருத்துவமனை பணியாளர்கள், நோய் மற்றவர்களுக்கும் பரவாமல் தடுப்பதில் உறுதியாக இருப்பார்கள். முதுகுத் தண்டு-மூளை வீக்க நோய் பரவாமல் தடுக்க சில வழிகள்:

 • உங்கள் பிள்ளை தனியாக ஒரு அறையில் வைக்கப்படலாம். அவன் விளையாட்டு அறைக்கு செல்ல முடியாமலிருக்கலாம். பிள்ளை நிபுணரிடம், விளையாட்டுப் பொருட்களையும் மற்றப் பொருட்களையும் உங்கள் அறைக்குக் கொண்டு வரும்படி கேளுங்கள்.
 • உங்கள் பிள்ளைக்கு அன்டிபையோடிக் மருந்து கொடுக்கத் தொடங்கிய, குறைந்தது முதல் 24 மணி நேரத்துக்காவது, மருத்துவ பணியாளர் முகமூடி, கண்பாதுகாப்பு மூடி, கையுறை, மற்றும் மேலங்கி ஆகியவற்றை அணிவார்கள்.
 • உங்கள் பிள்ளையைத் தொட முன்பும் பின்பும் மற்றும் உங்கள் பிள்ளையின் அறையை விட்டு வெளியே போவதற்குமுன்பும் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவுங்கள். மருத்துவ பணியாளர்களும் இதை கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.
 • நீங்களும் மற்ற குடும்ப அங்கத்தினர்களும் நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர்களும் அன்டிபயோட்டிக் எடுக்க வேண்டிவரலாம்.

நீங்கள் அல்லது நோயாளியைச் சந்தித்த வேறு எவராவது முதுகுத் தண்டு-மூளை வீக்க நோய்குரிய அறிகுறிகளைக் கொண்டிருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடமோ அல்லது தாதியிடமோ முடிந்தளவு விரைவாகத் தெரிவியுங்கள்.

தடுப்பூசிகள் சில வகையான முதுகுத் தண்டு-மூளை வீக்க நோய்களைத் தடுக்கலாம்

சில வகையான பக்ரீரியல் முதுகுத் தண்டு-மூளை வீக்கம் நோய்களைத் தடுக்கக்கூடிய தடுப்பூசிகள் (ஊசிபோடுதல்) இருக்கின்றன. அவற்றுள் சில பின்வருமாறு:

 • ஹ்யூமொஃபிலஸ் இன்ஃபுளுவென்ஸா (ஹிப்)மெனின்ஜைடிஸ்
 • நீஸ்ஸெறியா மெனின்ஜைடிஸ் சில வகைகள்
 • ஸ்ட்ரெப்டோகோக்கஸ் நியூமோன்னை இன் பல வகைகள்

இந்த தடுப்பூசிகள் மற்றவர்களுக்கு நோய் பரவுவதைத் தடுக்க உதவலாம். இந்த தடுப்பூசிகள் நீங்கள் வசிக்குமிடங்களில் இலவசமாக கிடைக்கக்கூடும். உங்கள் மருத்துவரிடம் கேட்கவும்.

முக்கிய குறிப்புகள்

 • முதுகுத் தண்டு-மூளை வீக்கம் என்பது மூளையில் மற்றும் முதுகுத் தண்டுப் பகுதியிலுள்ள திரவத்தில் ஏற்படும் தொற்று நோயாகும்.
 • முதுகுத் தண்டு-மூளை வீக்க நோயில் அநேக வகைகள் உண்டு.
 • பெரும்பாலும் பக்ரீரியல் முதுகுத் தண்டு-மூளை வீக்க நோய்க்கு அன்டிபையோடிக் மருந்து கொடுக்கபடுகிறது.
 • சிலவகையான முதுகுத் தண்டு-மூளை வீக்க நோய்கள் மற்றவர்களுக்குப் பரவக்கூடும்
 • முதுகுத் தண்டு-மூளை வீக்க நோயுள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர்களும் அன்டிபயோட்டிக் சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும்
 • சிலவகையான முதுகுத் தண்டு-மூளை வீக்க நோய்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் தடுக்கப்படலாம்
Last updated: அக்டோபர் 16 2009