மெத்திசிலின் எதிர்ப்பு ஸ்டெஃபிலோகோக்கஸ் ஓறியஸ் (MRSA)

Methicillin-resistant Staphylococcus aureus (MRSA) [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead.

MRSA என்பது தொற்றுநோயை உண்டாக்கக்கூடிய மேலும் எளிதில் பரவக்கூடிய ஒரு பக்டீரியாவாகும்.

MRSA என்பது என்ன?

MRSA என்பது ஒரு வகை பக்டீரியாவாகும்(கிருமி). MRSA என்பது மெத்திசிலின் எதிர்ப்பு ஸ்டெஃபிலோகோக்கஸ் ஓறியஸ் என்பதை அர்த்தப்படுத்துகிறது. ஸ்டெஃபிலோகோக்கஸ் ஓறியஸ் என்பது ஸ்டெஃப். ஓறியஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும்.

ஸ்டெஃப். ஓறியஸ் என்பது பெரும்பாலும் தோலில் காணப்படும் ஒரு கிருமியாகும். இது பெரும்பாலும் மக்களை நோயாளியாக்காது. ஸ்டெஃப். ஓறியஸ் கிருமி தொற்றுநோயை உண்டாக்கும்போது, அது பெரும்பாலும் தோலைப் பாதிக்கும். இது கொப்புளங்கள், தொற்றுநோய்ப் பிளவுகள், மற்றும் வேறு தோல் தொற்றுநோய்களை உண்டாக்கலாம்.

MRSA என்பது ஒரு விசேஷ வகையான ஸ்டெஃப். ஓறியஸ் ஆகும். இது மெத்திசிலின் உட்பட, பல அன்டிபையோடிக் மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தியுடையது. அதாவது நீங்கள் மெத்திசிலின் மற்றும் வேறு சில அன்டிபையோடிக் மருந்துகளை எடுத்தால் அவை MRSA பக்டீரியாவை அழிக்காது.

MRSA ஐ கண்டுபிடித்தல்

நோயின் மாதிரியை பஞ்சுக் குச்சியில் எடுத்துப் பரிசோதிப்பதன் மூலம் நோயாளிகள் MRSA க்காகப் பரிசோதிக்கப்படுகிறார்கள். மூக்கு, ஆசன வாயில், மற்றும் வெட்டுக்காயம் அல்லது தோலரிப்பு போன்ற வேறு பிளவுபட்ட தோலுள்ள பகுதிகளிலிருந்து நோயின் மாதிரி எடுக்கப்படுகிறது. நோயின் மாதிரி பின்னர் MRSA பரிசோதனைக்காக ஆய்வுகூடத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

பின்வரும் நிலைமைகளின்போது, உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவர் உங்கள் பிள்ளையிலிருந்து நோயின் மாதிரியை எடுப்பார்:

  • உங்கள் பிள்ளை ஒரு தொற்றுநோய்க்கான அறிகுறிகளைக் காண்பிக்கிறது.
  • உங்கள் பிள்ளை கடந்த ஒரு வருடத்துக்குள் கனடாவுக்கு வெளியே வசித்தான் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். உங்கள் பிள்ளை வசித்து வந்த நாட்டிலிருந்து அல்லது வேறு மருத்துவமனையிலிருந்து அவனுக்கு MRSA வந்திருக்கிறது.

சிலவேளைகளில், MRSA போய்விடும். MRSA ஏற்கனவே இருக்கும் பிள்ளைகளுக்கு, MRSA இன்னும் இருக்கிறதா என்பதை பரிசோதனைகள் எங்களுக்கு காண்பிக்கும். இதைக் கண்டுபிடிப்பதற்கு, மூன்று தொகுதிகளாக நோயின் மாதிரியை எடுக்கவேண்டும். உங்கள் பிள்ளை அன்டிபையோடிக் மருந்துகள் எடுக்காதிருக்கும் போது, ஒரு வார இடைவெளியில் ஒவ்வொன்றும் எடுக்கப்படும். இந்தப் பரிசோதனைகள் MRSA யைக் காண்பிக்காவிட்டால், உங்கள் பிள்ளைக்கு இனிமேலும் இதைக் கொண்டிருக்க மாட்டான்.

கழுவப்படாத கைகளின்மூலமாக MRSA பரவலாம்

மக்கள் ஒருவரை ஒருவர் தொடுவதன்மூலம் MRSA பரவலாம். அதாவதும் கழுவப்படாத கைகளால் தொடுவதன்மூலம் இந்நோய் பரவலாம்.

மருத்துவமனையில் அல்லது நீண்ட காலப் பராமரிப்பு நிலையங்களில் இருப்பவர்கள் MRSA யைப் பெற்றுக்கொள்ளும் சாத்தியம் அதிகம் இருக்கிறது

மருத்துவமனைகளில் இருப்பவர்கள், புனர்வாழ்வு வசதிகள், அல்லது நீண்ட காலப் பராமரிப்பு வசதிகளில் வாழ்பவர்களுக்கு MRSA வரும் ஆபத்துக்கள் அதிகமாக உள்ளது. மருத்துவமனைக்கு வெளியே இருப்பவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மற்றும் MRSA நோய் தொற்றும் ஆபத்து இல்லாமலுமிருக்கிறார்கள்.

ஆயினும், மருத்துவமனைக்கு வெளியே MRSA தொற்றும் ஆபத்துக்குக்கான சாத்தியம் இருக்கிறது. இது சமுதாயத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் MRSA என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில், அநேகர் சமுதாயத்திலிருந்து MRSA யைப் பெற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

MRSA தொற்றுநோயை உண்டாக்கினால் அதற்கு அன்டிபையோடிக் மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது

உங்கள் பிள்ளைக்கு MRSA இருந்து அது தொற்றுநோயை உருவாக்கினால் அவனுக்கு அன்டிபையோடிக் மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படும். உங்கள் பிள்ளைக்கு MRSA இருந்தால், ஆனால் அது எந்தத் தீங்கையும் விளைவிக்காதிருந்தால், அவனுக்கு சிகிக்சை தேவைப்படாது. உங்கள் பிள்ளை மருத்துவமனையை விட்டுச் செல்லும்போது MRSA ஒழிந்துவிடும்.

MRSA பரவுவதைத் தடுப்பதில் நீங்கள் உதவலாம்

மருத்துவமனையிலேயே MRSA தடுக்கப்படலாம். பின்வரும் வழிகளில் நீங்கள் மற்றும் பிள்ளையைப் பராமரிக்கும் மருத்துவப் பணியாளர்கள் இருவருமே MRSA பரவுவதைத் தடுப்பதில் உதவி செய்யலாம்:

  • உங்கள் பிள்ளையைப் பராமரிக்கும் எல்லா மருத்துவமனை பணியாளர்களும் கையுறைகள், ஒரு மேலாடை, மற்றும் ஒரு முகமூடி அணிய வேண்டும்.
  • உங்கள் பிள்ளை மருத்துவமனையில் இருக்கும்போது, நீங்கள் உங்கள் பிள்ளையின் அறைக்குள் போவதற்கு முன்பு, உங்கள் பிள்ளையைத் தொட்டபின்பு, மற்றும் உங்கள் பிள்ளையின் அறையை விட்டு வெளியே வருமுன்பு உங்கள் கைகளைக் கழுவுங்கள்.
  • நீங்கள் மற்ற நோயாளர்களைத் தொடப் போவதில்லை; அதனால் நீங்கள் கையுறைகள், மேலாடைகள், மற்றும் முகமூடிகள் அணிய வேண்டியதில்லை.

உங்கள் பிள்ளை மருத்துவமனையில் தங்கவில்லை; ஆனால் மருத்துவமனைக்குத் திரும்பவும் வரவேண்டும், அல்லது உங்கள் பிள்ளை தன் சொந்த மருத்துவரைச் சந்திக்கவேண்டும் என்றால், அவனுக்கு MRSA இருக்கிறது அல்லது முன்பு இருந்தது என்பதைப் பற்றி மருத்துவர்கள் மற்றும் தாதிகளிடம் சொல்லவும். இது உங்கள் பிள்ளைக்கு எந்த வகையான பராமரிப்பு தேவைப்படுகிறது என்பதைப் பற்றித் தீர்மானங்கள் எடுக்க அவர்களுக்கு உதவி செய்யும்.

உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது தாதியைக் கேட்கவும்.

MRSA மற்றும் கடுமையான நோய்கள்

MRSA கிருமிகள் மற்றக் கிருமிகளைப்போல கடுமையான தொற்றுநோய்களை உண்டாக்காமலிருக்கலாம். ஆனால் MRSA நோய்க்குச் சிகிச்சை செய்ய சரியான அன்டிபையோடிக் மருந்தைத் தெரிவுசெய்வது மிகவும் கடினமாயிருக்கலாம். சரியான அன்டிபையோடிக் மருந்தைக் கொடுப்பதற்காக ஒருவருக்கு MRSA இருக்கிறதா என்று கண்டுபிடிப்பது முக்கியம். உங்களுக்கு அல்லது வேறு எவருக்காவது MRSA இருப்பதாக நீங்கள் கவலைப்பட்டால், ஒரு மருத்துவர் அல்லது ஒரு தாதியிடம் கேட்கவும்.

உங்கள் பிள்ளைக்கு MRSA இருந்து மற்றும் அவன் மருத்துவமனையிலிருந்தால்

உங்கள் பிள்ளை மருத்துவமனையில் இருக்கும்போது, MRSA மற்றவர்களுக்குப் பரவுவதைத் தடுப்பதற்காக அவன் ஒரு தனி அறையில் வைக்கப்படுவான். உங்கள் பிள்ளையின் MRSA முற்றாக ஒழிக்கப்படும்வரை அவன் விளையாட்டறைக்குப் போகமுடியாது. குழந்தை நல்வாழ்வு நிபுணரிடம் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் வேறு தேவையான பொருட்களை உங்கள் அறையில் கொண்டுவந்து தரும்படி கேட்கவும். உங்கள் பிள்ளை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதும் நீங்கள் அவனுக்கு விசேஷமாக எதுவும் செய்யவேண்டியதில்லை.

முக்கிய குறிப்புகள்

  • MRSA என்பது அன்டிபையோடிக் மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தியைக் காண்பிக்கும் ஒரு பக்டீரியா ஆகும்.
  • MRSA தொற்றுநோய்க்கான அறிகுறிகள் தோலரிப்பு மற்றும் கொப்புளங்கள் போன்ற தோல் பிரச்சினைகளை உட்படுத்தும்.
  • MRSA பரவுவதைத் தடுப்பதற்கான படிகளை எடுக்கவேண்டும்.
  • MRSA கிருமிகளால் உண்டான தொற்றுநோய்க்கு அன்டிபையோடிக் மருந்துகளினால் சிகிச்சை செய்யப்படலாம்.
Last updated: நவம்பர் 17 2009