பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான கூட்டு அறிகுறி (PCOS)

Polycystic ovaries syndrome (PCOS) [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறி (PCOS) என்பது ஒரு சுரப்பு நீரின் ஒழுங்கின்மையாகும். PCOS-ன் விளைவுகள் மற்றும் சாத்தியமான சிகிச்சை வாய்ப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான கூட்டு அறிகுறி (PCOS) என்றால் என்ன?

பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறி (PCOS) என்பது ஒரு சுரப்பு நீரின் ஒழுங்கின்மையாகும். இது மூளை மற்றும் சூலகங்களில் சமநிலையற்ற சுரப்புநீரால் ஏற்படுகிறது. சமநிலையற்ற தன்மைக்கு என்ன காரணம் என்பது அறியப்படவில்லை.

வழக்கமாக, சூலகங்கள் பெண்களின் சுரப்பு நீரான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்டிரோன் என்பவற்றை உண்டாக்குகிறது. சூலகங்கள் ஆண் சுரப்பு நீரான அன்ட்ரோஜெனையும் (ஆண்மையூக்கி) சிறிதளவில் உண்டாக்குகிறது. பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறி (PCOS)யில் சூலகங்கள் அளவுக்கதிகமாக அன்ட்ரோஜெனை (ஆண்மையூக்கி) ச் சுரக்கிறது. இது சுரப்பு நீரில் சமநிலையற்றதன்மையை உருவாக்குகிறது. இது உடலில் பரந்த அளவில் பாதிப்பை உண்டாக்கலாம். இந்தப் பாதிப்புகள் கடுமையானதாக அல்லது கடுமையற்றதாக இருக்கலாம்.

பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறி (PCOS) ஒவ்வொரு 10 பெண்களுக்கு ஒருவரைத் தாக்குகிறது.

வேறு தீராத நோய்களைப் போல, பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறி (PCOS)யும் உங்கள் வாழ்க்கையை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் உடலில் அக்கறை எடுத்து மருத்துவர் சிபாரிசு செய்யும் சிகிச்சைகளைப் பின்பற்றினால், பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறி ( PCOS) மிகவும் சிறிய பிரச்சினை ஆகிவிடும். மற்றவர்கள் அதைக் கவனிக்காமல் கூட இருக்கலாம்.

"பொலிசிஸ்ரிக்" என்பது "பல பைகள்" என்பதை அர்த்தப்படுத்தும்.

பல கட்டிகளுள்ள சூலகங்கள் குறைபாடு (PCOS)கருப்பை, பலோப்பியன் குழாய் மற்றும் சூலகம்; முதிர்ச்சியடைந்த சூல்பையைக் கொண்ட ஒரு சாதாரண சூலகம்; மற்றும் கட்டிகள் (cysts) கொண்ட பல்கட்டிகள் கொண்ட ஒரு சூலகம்
சூலகங்கள், முட்டைகளைக் கொண்டிருக்கும் நுண்ணிய திரவம் நிறைந்த பைகளை உற்பத்தி செய்கிறது. இவை நுண்குமிழ் அல்லது கட்டிகள் எனப்படுகின்றன. PCOS உள்ள பெண்களில் இந்த நுண்குமிழ் சரியான முறையில் முட்டைகளை வெளியேற்றாததால் அவை பல கட்டிகளாக மாறுகின்றன.

சூலகங்கள், முட்டைகளைக் கொண்டிருக்கும் மிகவும் சிறிய திரவம் நிரப்பப்பட்ட பைகளை உற்பத்தி செய்கிறது. இந்தப் பைகள் நுண்ணறைகள் அல்லது திரவப்பை என்றழைக்கப்படும். ஒவ்வொரு மாதமும் பெண்களின் சுழற்சி சமயத்தில், ஒரு முட்டையைக் கொண்டிருக்கும் முதிர்ச்சியடைந்த ஒரு திரவப்பை உடைந்து முட்டை வெளியேறும். இந்தச் செயல்முறை முட்டை வெளிப்படுதல் என அழைக்கப்படும்.

பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறி (PCOS) உள்ள பெண்களில், மூளை, முட்டைகளை முதிர்ச்சியடையச் செய்து, விடுவிக்கும்படி ஒரு சுரப்பு நீர்ச் செய்தியை சூலகங்கள் அனுப்பாது. இதனால், முட்டை வெளிப்படுதலானது சில வேளைகளில் மாத்திரம் நடைபெறும் அல்லது நடைபெறவே மாட்டாது. வெடிப்பதற்குப் பதிலாக முட்டைகள் சூலகங்களுக்குள்ளே அநேக சிறிய திரவப் பைகளாக வளரும்.

பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறிகள் (PCOS) பெரும்பாலும் ஒரு பெண்பிள்ளை அவளது முதலாவது மாதவிடாயைக் கொண்டிருக்கும்போது தொடங்கும்.

பெரும்பாலும் பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறி (PCOS)ஒரு பெண்பிள்ளை அவளது முதல் மாதவிடாயைக் கொண்டிருக்கும்போது முதலில் அவதானிக்கப்படும். மேலதிக அன்ட்ரோஜெனால் (ஆண்மையூக்கி) பெண்கள் குறைந்தளவு மாதவிடாயைக் கொண்டிருக்கிறார்கள். அல்லது மாதவிடாய் இல்லாமலே இருக்கிறார்கள்.

வேறு சாத்தியமான பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறிகள் (PCOS) பின்வருவனவற்றை உட்படுத்தும்:

 • வழக்கத்துக்கு மாறாக முகம் மற்றும் உடலில் முடி வளர்ச்சி
 • ஒரு ஆரோக்கியமான உடல் எடையக் கொண்டிருப்பதில் சிரமம்
 • முகப்பரு
 • அநேக சிறிய திரவப்பைகளைக் கொண்டிருக்கும் சூலகங்கள் (பல பையுருக்களுள்ள சூலகங்கள்)
 • இரத்ததில் கொழுப்பினளவு (இலிப்பிட்டு) அதிகரித்தல்
 • இன்சுலின் அல்லது குளுக்கோசின் அளவு அதிகரித்தல்
 • இரத்ததில் அன்ட்ரோஜன் (ஆண்மையூக்கி) அதிகரித்தல்

எல்லாப் பெண்களிலும் இந்த எல்லா அறிகுறிகளும் காணப்படமாட்டாது.

ஒரு நோயாளியின் வரலாறு, பரிசோதனைகள், மற்றும் இரத்தப் பரிசோதனைகளால் பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்படுகிறது

பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறிக்கு (PCOS) எந்தப் பரிசோதனையும் இல்லை. மருத்துவர் பின்வருவனபற்றி உங்களிடம் கேள்விகள் கேட்பார்:

 • உங்கள் மாதவிலக்கு
 • முடி மற்றும் தோல் பிரச்சினைகள்
 • விபரிக்கமுடியாத எடை அதிகரித்தல்
 • கடந்த காலத்தில் உங்கள் ஆரோக்கியம் எப்படி இருந்தது (உங்கள் மருத்துவ வரலாறு)

மருத்துவர் அல்லது ஒரு தாதி உங்கள் எடை, உயரம், மற்றும் இரத்த அழுத்தத்தை அளவிடுவார்.

அவர்கள் ஒரு இரத்த மாதிரி எடுத்துக்கொள்வார்கள். உங்கள் இரத்தம் இன்சுலின், சுரப்புநீர், மற்றும் குளுக்கோஸ் அளவு என்பவற்றிற்காகப் பரிசோதிக்கப்படும்.

மருத்துவர் திரவப்பைகளைக் கண்டறிவதற்காக சூலகங்களை அல்ட்ராசவுண்ட் ஸ்கானும் செய்யக்கூடும்.

பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறிகளைச் சமாளிக்கமுடியும் மற்றும் உடலில் அதன் பாதிப்பையும் குறைக்கமுடியும்.

PCOS பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறிக்கு (PCOS) நிவாரணமில்லை. ஆனால் அதற்கு சிகிச்சையளிக்கப்படலாம் மற்றும் சமாளிக்கலாம். பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறி (PCOS) க்கு சிகிச்சையளிக்க வேண்டியதற்கான முக்கியமான இரண்டு காரணங்கள் பின்வருமாறு:

தோற்றம்

பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறி (PCOS) உள்ள அநேக இளம் பெண்கள் சுரப்பு நீர் சீர்குலைவின் பாதிப்பினால் அவர்கள் எப்படித் தோற்றமளிக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலையடைகிறார்கள். இது விளங்கிக் கொள்ளக்கூடியது. பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறி (PCOS) க்குச் சிகிச்சையளிப்பது உங்கள் தோற்றத்திலுள்ள பாதிப்பைக் குறைக்கும். இது உங்கள் தோற்றத்தைப் பற்றி நீங்கள் நன்கு உணர்ந்துகொள்ள உதவி செய்யும்.

நீண்ட கால ஆரோக்கியம்

பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறி (PCOS) க்குச் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், வேறு உடல்நலப் பிரச்சினைக்கான ஆபத்தை ஏற்படுத்தும். இந்த உடல்நலப் பிரச்சினைகள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

 • இருதய நோய்
 • நீரிழிவு நோய்
 • உடற்பருமன்
 • கருப்பை உட்படையில் புற்றுநோய் (கருப்பை உள்வரிச் சவ்வுப் புற்றுநோய்)
 • மலட்டுத்தன்மை ( கர்ப்பமாவதில் பிரச்சினை)

சிகிச்சையளித்தல்

பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறி (PCOS)க்கு எப்படிச் சிகிச்சையளிப்பது என்பது உங்கள் அறிகுறிகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

பெரும்பாலும் பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறி (PCOS) எடை அதிகரிக்கக் காரணமாக இருப்பதால், நீங்கள் ஆரோக்கியமான உணவை உண்ணவேண்டும். நீங்கள் ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சியும் செய்யவேண்டும்.

சுரப்பு நீருக்கு (ஹோமோமன்) சிகிச்சையளித்தல்

பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறி (PCOS) ஒரு சமநிலையற்ற சுரப்புநீர் ஆகும். அதனால் அதனைச் சமநிலைப்படுத்துவதே உங்கள் சிகிச்சையின் ஒரு பகுதியாகும். இதைச் செய்வதற்கு இரண்டு வழிகள் பின்வருமாறு:

 • பெண்கள் சுரப்பி நீரின் அளவை அதிகரித்தல்
 • அதிகரிக்கப்பட்ட ஆண் சுரப்புநீரின் பாதிப்பைக் குறைத்தல்

பெண் சுரப்பு நீரின் அளவை அதிகரிப்பதற்காக, உங்கள் மருத்துவர் கருத்தடைக் குளிகைகளை எழுதித் தரக்கூடும். கருத்தடைக் குளிகைகள் பின்வரும் பலன்களைக் கொண்டிருக்கும்:

 • அவை உங்கள் மாதவிடாயை மேலும் ஒழுங்காக்கும்.
 • முகப்பருவைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் முகம் மற்றும் உடலில் முடிவளருவதைக் குறைக்கும்
 • கருப்பை உட்சவ்வில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கும்.

ஆண் சுரப்பு நீரின் பாதிப்பைக் குறைப்பதற்கு, உங்கள் மருத்துவர் அன்ரி-அன்ட்ரோஜென்ஸ் என்னும் மருந்தை எழுதிக் கொடுக்கலாம். அன்ரி-அன்ட்ரோஜென்ஸ் மருந்துகள் பின்வரும் பலன்களைக் கொண்டிருக்கும்:

 • ஆண் சுரப்பு நீரின் செயற்பாட்டைத் தடைசெய்யும்.
 • தேவையற்ற முடி வளருவதை மற்றும் முகப்பருவைக் குறைக்கும்

ஓரு சாதாரணமான அன்ரி-அன்ட்ரொஜென் ஸ்பிரொனொலக்ரோன் என்றழைக்கப்படும். நீங்கள் இதை உட்கொள்வதாக இருந்தால் கருத்தடைக் குளிகைகளையும் உட்கொள்ளவேண்டும். சில கருத்தடைக் குளிகைகள் அன்ரி-அன்ட்ரொஜென் மற்றும் பெண் சுரப்பு நீர் இரண்டையுமே கொண்டிருக்கும்.

பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறி (PCOS) இனால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய்க்கும் சிகிச்சையளிக்கப்படவேண்டும்.

தேவையற்ற முடிகளை அகற்றுதல்

ஒரு தகுந்த சுரப்பு நீர் சமநிலை, தேவையற்ற முடிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவி செய்யும். ஏற்கனவே இருக்கும் முடிகளை அகற்ற அவை உதவி செய்யாது. ஆனால் ஏற்கனவே இருக்கும் முடிகளை அகற்ற வழிகள் உண்டு. உங்கள் மருத்துவரைக் கேட்கவும்.

பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறி (PCOS) மற்றும் கர்ப்பமடைதல்

பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறி (PCOS) உள்ள அநேக பெண்களுக்கு கர்ப்பமடைவதில் பிரச்சினைகள் உண்டு. மற்றவர்களுக்குப் பிரச்சினை இல்லை. பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான (PCOS) அறிகுறிகளுள் ஒன்று உங்கள் சூலகங்களில் திரவப் பைகள் வளருவதாகும். ஆனால் பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறி (PCOS) உள்ள பெண்களுக்கு பெரும்பாலும் ஒரு சாதாரணமான கருப்பை மற்றும் சாதாரணமான முட்டைகள் இருக்கின்றது.

நீங்கள் கர்ப்பமடைய விரும்பினால் உங்கள் மருத்துவருடன் பேசுங்கள். உங்களுக்கான சந்தர்ப்பங்களை முன்னேற்றுவிக்க சிகிச்சைகள் உண்டு.

முக்கிய குறிப்புகள்

 • பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறி (PCOS) என்பது சுரப்புநீர் சமநிலையற்றுச் சுரப்பத்தாகும். இது சில பெண்களைப் பாதிக்கும்.
 • பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறி (PCOS) ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் இல்லாதிருப்பது ஆகும்.
 • வேறு அறிகுறிகள் பருமனடைதல், தேவையற்ற முடி வளருதல், மற்றும் முகப்பரு என்பனவற்றை உட்படுத்தும்.
 • பெரும்பாலும் பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறி (PCOS) சுரப்புநீரால் சிகிச்சையளிக்கப்படுகிறது. இவை உங்கள் தோற்றம் ,மற்றும் உடலில் உள்ள சீர்குலைவின் பாதிப்பைக் குறைக்கும்.
 • சிகிச்சையளிக்கப்படாவிட்டால், பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறி (PCOS) மலட்டுத்தன்மை, இருதய நோய், மற்றும் கருப்பை உள்வரிச் சவ்வுப் புற்றுநோய் என்பனவற்றை ஏற்படுத்தலாம்.
Last updated: நவம்பர் 10 2009