உறங்கும் நேரம்

Sleep time for newborns [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு உறங்கும் நேரத்தை இலகுவாக்குதல் பற்றிக் கற்றுக்கொள்ளவும். உறங்கும் நிலை மற்றும் சிசுக்களின் திடீர் மரண நோய்க்கூட்டறிகுறிகள் பற்றிய ஆழமான தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிதாகப் பிறந்த குழந்தைகள் அதிக நேரம் உறங்குவார்கள். உண்மையில், இந்த சமயத்தில் உங்களுக்கு அதிகளவு உறக்கம் கிடைக்காவிட்டாலும், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை ஒவ்வொரு நாளும் 18 மணி நேரங்களை உறக்கத்தில் செலவிடுவான். ஆயினும், ஒரு புதிதாகப் பிறந்த குழந்தையின் உறங்கும்பாணி பெரியவர்களின் உறங்கும் பாணியைவிட வித்தியாசமானது. புதிதாகப் பிறந்த குழந்தைகள், தங்கள் உறங்கும் நேரத்தில் 20% மாத்திரம் ஒரு ஆழ்ந்த உறக்கத்தைக் கொண்டிருப்பார்கள். மீதி நேரங்களில் அங்கும் இங்குமாக உறங்குவார்கள். அதாவது அந்த சமயத்தில் உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையைப் படுக்கவைத்துவிட்டு நீங்கள் குட்டித் தூக்கம் போட முயற்சித்தால், அவன் விழித்தெழுந்து அழத் தொடங்குவான்.

சில புதிதாகப் பிறந்த குழந்தைகள் தங்கள் பகல் நேரங்கள் மற்றும் இரவு நேரங்களை ஒன்றாகக் கலப்பார்கள். அவர்கள் பகல் நேரத்தில் உறங்குவார்கள் மற்றும் இரவு நேரங்களில் விளையாட விரும்புவார்கள். இது தாங்கள் கருப்பையில் இருந்த நாட்களிலிருந்து கடத்தப்பட்டவை. கர்ப்ப காலங்களில், பிறவாத குழந்தை தாய் ஓய்வெடுக்கும்போது, பெரும்பாலும் இரவு நேரங்களில், மிக அதிக சுறுசுறுப்பாக இருப்பான்; தாய் எழுந்து நடமாடும்போது, பெரும்பாலும் பகல் நேரங்களில், அவன் சுறுசுறுப்பை மந்தமாக்குவான். ஒரு தாயின் சுறுசுறுப்பான இயக்கம் பிறவாத குழந்தையைச் சாந்தப்படுத்தி அவன் ஓய்வெடுப்பதற்கு உதவி செய்யும். பிறந்த பின்னர், சில புதிதாகப் பிறந்த குழந்தைகள் , அவர்களின் அளவுக்கதிகமாகக் களைப்படைந்த பெற்றோர் திகைப்படையும்வண்ணம் இந்தப் பாணியைத் தொடருவார்கள்.

உறக்கப் பிரச்சினையில், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் சரியான கண்ணோட்டத்தை விளங்கிக் கொள்ள முயற்சி செய்யவும். புதிதாகப் பிறந்த குழந்தைகள், வளர்ந்த குழந்தைகளை விட, குறுகிய நேர உறக்க சுழற்சி மற்றும் மிகவும் அடிக்கடி இலேசான உறக்க காலப்பகுதியைக் கொண்டிருப்பார்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை விழித்தெழ விரும்புவார்கள். ஒரு முறை விழிந்தெழுந்தால், திரும்பவும் உறங்குவதற்குச் சில சமயங்களில் அவர்களுக்குப் பிரச்சினை இருக்கும். அத்துடன், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு நாளில் 24 மணி நேரங்களில் தாய்ப்பாலூட்டுதல், ஏப்பம் விடுதல், டயப்ர் மாற்றுதல், மற்றும் விளையாடுதல் போன்ற தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். எனவே, அவர்கள் நீண்ட நேரம் உறங்குவது என்பது அர்த்தமற்றது.

உறங்கும் நேரத்தைச் சுலபமாக்குவதற்கான குறிப்புகள்

உறங்கும் நேரத்தைச் சுலபமாக்குவதற்கான குறிப்புகள் பின்வருமாறு:

 • பொருட்களை சௌகரியமாக வைக்கவும்: அநேக புதிதாகப் பிறந்த குழந்தைகள் பெரிய, அதிக விசாலமான தொட்டிலை விரும்புவதில்லை. ஆரம்ப வாரங்களில், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையைக் கதகதப்பாக உணரும்படி செய்வதற்காக, ஒரு தொட்டில் அல்லது பேசினெட்டை உபயோகிக்க முயற்சி செய்யவும். மெத்தை உறுதியானது மற்றும் உங்கள் குழந்தையை மூச்சுத் திணறடிக்க வைக்கக்கூடியதாக, தலையணைகள் அல்லது தளர்ந்த கம்பளிப் போர்வைகள் அங்கு இல்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவும். நீங்களும் உங்கள் குழந்தையை மடிப்புள்ள துணிகளால் சுற்றிக் கட்டுவதன் மூலம் அவனைக் கதகதப்பாக வைத்திருக்க முயற்சிக்கலாம்.
 • வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும்: புதிதாகப் பிறந்த குழந்தைகள் அதிகளவு வெப்பம் அல்லது அதிகளவு குளிருள்ள ஒரு அறையை விரும்புவதில்லை. அத்துடன், அறையை அளவுக்கதிகமாகச் சூடாக்குவதும் உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஆபத்தானது.
 • அவனை அசைய வைக்கவும்: அசைவுகள் புதிதாகப் பிறந்த குழந்தைகளை ஆறுதல் படுத்தி, உறங்குவதற்கு உதவி செய்யும். தாலாட்டுதல், தட்டிக்கொடுத்தல், அல்லது இசைக்கேற்ப ஆட்டுதல் என்பனவற்றை முயற்சி செய்யவும்.
 • சில பின்னணி சத்தங்களை முயற்சி செய்யவும்: புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குப் பின்னணிச் சத்தம் ஆறுதல்படுத்துவதாக இருக்கும். மென்மையான இசை அல்லது ஒரு மின்விசிறியிலிருந்து வரும் வையிட் நொயிஸ் மிகவும் சாந்தப்படுத்தும்.
 • பகல்நேர சிறு உறக்கத்தை நிராகரிக்கவேண்டாம்: உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை இரவில் "நன்கு" உறங்குவதற்காக, பகல் நேரத்தில் அவன் உறங்க விரும்பினாலும் கூட, அவனை உறங்கவிடாது விழிப்பாக வைத்திருக்கத் தூண்டப்படுவீர்கள். இந்த அணுகுமுறை பலனளிக்காது; ஏனெனில் அது உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையை அளவுக்கதிகமாகக் களைப்படையச் செய்யும். நன்கு ஓய்வெடுத்த ஒரு குழந்தையைவிட, அளவுக்கதிகமாகக் களைப்படைந்த ஒரு குழந்தைக்கு உறங்குவதில் அதிக பிரச்சினைகள் இருக்கும். ஆயினும், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை தனது பகல் நேரத்தையும் இரவு நேரத்தையும் ஒன்றாகக் கலந்தால், அவனது சிறு உறக்க நேரத்தைக் குறைத்து அவன் விழித்திருக்கும்போது அவனைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க முயற்சி செய்யலாம்.
 • உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை தாய்ப்பாலூட்டப்படுவதற்காக இரவில் விழிக்கும்போது, அவனை ஒரு இருட்டான அறையில் வைத்துப் பாலூட்ட முயற்சிக்கவும். பாலூட்டுதல், ஏப்பம் விடுதல், மற்றும் டயபர் மாற்றும் நேரம் முழுவதும் அவனுடன் பேசுவதையும் கிளர்ச்சியூட்டுவதையும் நன்கு குறைத்துக் கொள்ளவும். உங்கள் குழந்தை பகல் நேரப் பாலூட்டுதலுக்காக விழிக்கும்போது வெளிச்சம், உரையாடல், மற்றும் கிளர்ச்சியூட்டுவதை அதிகரிக்கவும். இது உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை, இரவு நேரம் உறங்கும் நேரம் மற்றும் பகல் நேரம் வேடிக்கைக்குரிய நேரம் என்பதைக் கற்றுக் கொள்ள உதவும்.
குழந்தை உறங்கும் நிலைதொட்டில் ஒன்றில் குழந்தை நிமிர்ந்து படுத்திருத்தல்
முதல் 6 மாதங்களுக்கு குழந்தைகள் மல்லாக்கப் படுப்பதே அவர்களுக்கு சிறந்ததாகும்.

உறக்கம் மற்றும் சிசுக்களின் திடீர் மரண நோய்க்கூட்டறிகுறிகள்

சிசுக்களின் திடீர் மரண நோய்க்கூட்டறிகுறிகள் (SIDS) என்பது ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகள் தீடிரென மற்றும் எதிர்பாராது மரணமடைதலைக் குறிக்கிறது. ஒரு முழுமையான ஆய்வு மற்றும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரும் இது விளக்கமுடியாமலிருக்கிறது. SIDS நோய்க்குப் பலியாகும் குழந்தைகள் தங்கள் உறக்கத்திலேயே மரணமடைகிறார்கள். SIDS நோயைத் தடுப்பதற்கு உதவியாக கனடா குழந்தை மருத்துவ சங்கம், தி அமெரிக்கன் அக்கெடமி ஒஃப் பீடியாட்ரிக்ஸ், மற்றும் வேறு அநேக மருத்துவ சங்கங்கள் பின்வரும் பரிந்துரையைச் செய்திருக்கிறார்கள்:

உங்கள் குழந்தையை நேராகப் படுக்க வைக்கவும். ஒரு பக்கமாக அல்லது குப்புறப் படுக்க வைக்கவேண்டாம்.

 • மிருதுவான மெத்தை, படுக்கை, மற்றும் தலையணைகளைத் தவிர்க்கவும்.
 • கர்ப்பமாக இருக்கும்போது புகை பிடிக்கவேண்டாம். அவன் பிறந்த பின்னர் செக்கன்ட்-ஹான்ட் புகையுடன் தொடர்பு கொள்ள வைக்கவேண்டாம்.
 • உங்கள் குழந்தையை அளவுக்கதிகமாகச் சூடாக்குவதைத் தவிர்க்கவும்.
 • உங்கள் குழந்தையை உங்கள் அறையில் வைக்கவும், ஆனால் ஒரு படுக்கையில் அல்ல. ஒரு தொட்டிலில் தனிமையாகத் தூங்குவதுதான் ஒரு குழந்தைக்கான மிகவும் பாதுகாப்பான இடம்.
 • ஒரு தள்ளு வண்டி , ஊஞ்சல், பவுன்சர், அல்லது மோட்டார் வாகன இருக்கையில் உங்கள் பிள்ளையை நீண்ட நேரம் உறங்க அனுமதிக்கவேண்டாம்.
Last updated: செப்டம்பர் 22 2009