சமுதாய மற்றும் உணர்ச்சி சம்பந்தமான வளர்ச்சி: அடுத்த ஆறு மாதங்கள்

Social and emotional development in babies [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

மாதங்களில் சமுதாய மற்றும் உணர்ச்சிப்பூர்வமான வளர்ச்சிகளைப் பற்றி வாசிக்கவும். சுற்றுச் சூழலுக்கான விழிப்புணர்வு மற்றும் பிரதிபலிப்பிற்கு ஒரு ஆழமான விருப்பம் எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாம் மாதம்

உங்கள் குழந்தை புதிதாகப் பிறந்திருக்கும்போது, அவனது நேரத்தில் பெரும்பாலானவற்றை நித்திரையில் கழித்திருப்பான். ஆயினும், இப்போது அதிகளவில் சமுதாயத்துக்குப் பிரதிபலிப்பைக் காண்பிப்பான். நீங்கள் அவனைத் தூக்கி எடுக்கும்போது அதை அவன் விரும்புவான்; அவனை அரவணைக்கும்போது மிகவும் கிளர்ச்சியடைவான்.

குழந்தைகள், விழிப்புணர்வின் அநேக வித்தியாசமான நிலைகளினூடாகச் செல்வார்கள். அமைதியான விழிப்புணர்வு நிலைமை என்பது, உங்கள் குழந்தை கட்டித் தழுவப்படும்போது மற்றும் அமைதியாயிருக்கும்போது, அவன் உங்கள் கண்களினுள் பார்க்கும்போது, உங்கள் குரலைக் கேட்கும்போது, தன் சுற்றுப்புறத்தைக் கிரகிக்கும்போது, மற்றும் அவனது சுற்றுச் சூழலுக்குப் பழக்கப்படும்போது ஏற்படும் நிலைமையாகும். செயற்படும் விழிப்புணர்வு நிலைமை என்பது உங்கள் குழந்தை அடிக்கடி அசையும்போது, சுற்றிப் பார்க்கும்போது, மற்றும் சத்தங்கள் எழுப்பும்போது ஏற்படும் நிலைமையாகும். வேறு விழிப்புணர்வு நிலைமைகள் என்பன அழுதல், சோம்பற்தன்மை, மற்றும் நித்திரை செய்தல் என்பனவாகும். உங்கள் குழந்தை நாள்முழுவதும் இதே நிலைமைகளைத் திரும்ப திரும்பச் சுழற்சியாகச் செய்துகொண்டிருப்பான்.

உங்கள் குழந்தை வளர்ந்து வரும்போது, அவனது விழிப்புணர்வு நிலைமைகளை ஒழுங்கமைக்க உங்களால் உதவி செய்யமுடியும். உதாரணமாக, உங்கள் குழந்தை தனது பகல்கள் மற்றும் இரவுகளை ஒன்றாகக் கலக்கத் தொடங்கும்போது, இரவில் இருட்டான அறையில் வைத்துத் தாய்ப்பாலூட்டி மற்றும் தாய்ப்பாலூட்டியவுடனேயே அவனை நித்திரை செய்ய வைப்பதன் மூலம் அவன் கிளர்ச்சியடைவதைக் குறைக்கலாம். அவனுடன் சேர்ந்து விளையாடுவதன் மூலம் பகல் நேரங்களில் அவனைக் கூடுதலாகக் கிளர்ச்சியடையச் செய்யலாம்.

ஆரம்பத்தில் அழுவதுதான் உங்கள் குழந்தையால் தொடர்புகொள்ளக்கூடிய ஒரே வழியாகும். அவன் இந்த மாதத்தில் ஓரளவுக்கு அழுவான் என்பதை நீங்கள் உணரவேண்டியது முக்கியம். உங்கள் குழந்தையின் வாழ்க்கையின் முதல் வாரத்தில் அழுகை படிப்படியாக அதிகரித்து ஆறு மாதங்களில் உச்சநிலையை அடையும்.

இரண்டாம் மாதம்

இந்த மாதத்தில், குழந்தைகள் சந்தோஷம், அக்கறை, மற்றும் துயரம் என்பனவற்றை முகபாவனைகள் மூலம் காண்பிக்கத் தொடங்குவார்கள். தங்கள் வாய், கண் இமைகள், மற்றும் நெற்றித் தசைகளை வித்தியாசமான வழிகளில் அசைப்பதன் மூலம் இதைச் செய்வார்கள். ஒரு கண நேரத்தில் உங்கள் குழந்தையின் உணர்வுகளை அவனது முகபாவனைகள் பிரதிபலிக்கும். அவை வேண்டுமென்றே செய்யப்பட்டவையல்ல. உணர்ச்சிப்பூர்வமான முகபாவனைகள் தொடர்புகொள்வதற்கான ஒரு சர்வதேச மொழியாகும்.

முதல் இரு மாதங்களின் ஆரம்பத்தில், உங்கள் குழந்தை உங்கள் முகம் மற்றும் மற்றப் பராமரிப்பாளர்களின் முகங்களில் மிகுந்த அக்கறை காண்பிப்பான். உங்களுடன் கண் தொடர்பு வைக்கக்கூடிய அவனது திறமை சீராக அதிகரிக்கும். அவன் உயிரற்ற பொருட்களைப் பார்ப்பதைவிட முகங்களைப் பார்ப்பதில் விசேஷ விருப்பமுடையவனாயிருப்பான்.

உங்கள் குழந்தை தனது பராமரிப்பாளரின் முக பாவனையை, தனது நாக்கை நீட்டுதல் அல்லது தனது வாயை அகலத் திறக்குதல் போன்ற செயல்களை நடித்துக் காண்பிப்பான். ஆனால் பொம்மை போன்ற உயிரற்ற பொருட்கள் செய்வதைப்போல செய்யமாட்டான். அதாவது, உங்கள் குழந்தை தனக்கும் தன்னைச் சுற்றியிருக்கும் மக்களுக்கும் ஒற்றுமையிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்கிறான் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. அவன் வளர்ந்து வரும்போது, புதிய நடவடிக்கைகளைக் கற்றுக்கொள்வதற்கு மற்றவர்களைப்போல நடித்தலை கற்றுக்கொள்வதற்கு ஒரு இன்றியமையாத கருவியாக உபயோகிப்பான். உங்களையும் மற்ற பராமரிப்பாளர்களையும் அவதானித்து, அவர்கள் செய்கைகளைக் கற்றுக்கொள்வான்.

உங்கள் குழந்தை மக்களின் உரையாடல்களைக் கேட்பதில், அக்கறை காண்பிக்கத் தொடங்குவான். எப்படி மக்கள் செவிகொடுப்பதிலும் மற்றும் பேசுவதிலும் சுழற்சி முறை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதில் அக்கறை காண்பிக்கத் தொடங்குவான். நீங்கள் அவனுடன் பேசினால் அவன் சத்தம் எழுப்புவான், மற்றும் உங்கள் பதிலுக்காகக் காத்திருப்பான். உண்மையில், உங்கள் குழந்தை அழுதால், சில வேளைகளில் வெறுமனே அவனுடன் பேசிக்கொண்டிருப்பதால் அவனது கவனத்தை சிதறவைக்கலாம்.

இது, உங்கள் குழந்தையின் சமுதாயக் காட்சியில் கிளர்ச்சியடையக்கூடிய மாதமாகும். ஏனென்றால் அவனது முதலாவது "நிஜமான" சிரிப்பை சிரிக்கும் காலமாக இது இருக்கலாம்! இதற்கு முந்திய காலங்களில் உங்கள் குழந்தை மனம் போன போக்கில் சிரித்திருக்கலாம் மற்றும் மிகவும் அடிக்கடி கனவு காணும்போது அல்லது முழுமையாக விழித்திராதபோது சிரித்திருக்கலாம். இப்போது, உங்கள் குழந்தையின் சிரிப்புக்கு, மேலும் சமூதாய அர்த்தம் இருக்கிறது. உங்கள் சிரிப்புக்குப் பிரதிபலிப்பாக அவன் இப்போது சிரிக்கிறான். இது முக முகமான பேச்சுத் தொடர்புக்கான ஒரு புதிய சகாப்த்தத்தை முன்னறிவிக்கிறது. புன்முறுவல் செய்வதன்மூலம் நீங்கள் ஒருவரை ஒருவர் பலப்படுத்தலாம். இந்தச் சமயத்தில் உங்கள் குழந்தையால், தன்னையும் உங்களையும் சந்தோஷப்படுத்துவதன்மூலம் தன்னைத்தானே மேலுமாகச் சமாதானப்படுத்திக்கொள்ள முடியும்.

உங்கள் குழந்தையுடன் நீங்கள் விளையாடும்போது, ஓரு விளையாட்டுப்பொருள் அல்லது ஒரு விடியோவைவிட ஒரு உயிருள்ள ஆள் ஒருவரின் சமூகத் துணை மிகவும் மேலானது என்பதை நினைவில் வைக்கவும். ஒருவருக்கொருவர் ஒத்த உணர்ச்சியுடன் நடந்து கொள்ளுங்கள். "கல்வி சம்பந்தப்பட்டது" என்று அழைக்கப்படும் வீடியோக்களைப் பார்ப்பதற்கு அவனை விட்டுவிடாதிருக்க முயற்சி செய்யவும்.

மூன்றாவது மாதம்

மூன்று மாத வயதளவில், உங்கள் குழந்தையின் அழுகை குறைந்து போகவேண்டும்.

உங்கள் குழந்தையுடன் புன்முறுவல் செய்யும் நேரங்கள், உயிரோட்டமுள்ளதாயும் சந்தோஷமானதாயும் அதிகரிக்கத் தொடங்கும். காரியங்கள் அதிக தீவிரமான உணர்ச்சியுள்ளதாகும்போது, அவன் உங்களை உற்று நோக்குவதைவிட்டு, ஓரு சில கணநேரங்களுக்கு வெளியே பார்ப்பான். இது உற்று நோக்குதலின் வெறுப்பு என அழைக்கப்படும். இது உங்கள் குழந்தையின் விழிப்புணர்வின் அளவு மிகவும் அதிகம் என்பதைக் காட்டுகிறது. உங்கள் குழந்தையின் தேவைகளை மதிக்கவும் அல்லது வேகத்தைக் குறைக்கவும்.

உங்கள் குழந்தை தன் குரலினால் தொடர்ந்து கவரப்படுவான். அவன் சந்தோஷம் மற்றும் திருப்தியாக இருக்கும்போதெல்லாம் சத்தம் எழுப்பக் கற்றுக் கொள்வான். உங்களைப் போல பாவனை செய்வதிலும் அவனைப்போல உங்களைப் பாவனை செய்ய வைப்பதிலும் சந்தோஷமடைவான்.

நாலாம் மாதம்

உங்கள் குழந்தை தனக்குத் தேவைப்படும்போது பேச்சுத் தொடர்பு கொள்வதில் இப்போது முன்னேறியிருப்பான். உதாரணமாக, அவனைத் தூக்கும்படி தெரிவிப்பதற்காகத் தன் கைகளை மேலே தூக்குவான். நீங்களும், உங்கள் முறைக்கு, அவனது அழுகை எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை இப்போது நன்றாகக் கண்டுபிடிப்பீர்கள். இதனால் நீங்களும் உங்கள் குழந்தையும் மேலும் மகிழ்ச்சியடைந்தவர்களாவீர்கள்.

இந்தச் சமயத்தில், உங்கள் குழந்தை உங்கள் குரலின் தொனி, முக பாவனை, மற்றும் உடல் மொழி போன்ற உங்கள் உணர்ச்சிகளின் வெளிக்காட்டுக்களை அவதானிப்பான். அவன் பார்க்கும் உணர்ச்சிகளின் வெளிக்காட்டுக்களையெல்லாம் நடித்துக் காண்பிப்பான். நீங்கள் எதிர்மறையான உணர்ச்சிகளை வெளிக்காட்டினால், அவன் வேறுபட்ட வழிகளில் பிரதிபலிக்கக்கூடும். உதாரணமாக, நீங்கள் கோபத்தை வெளிக்காட்டினால், அவன் நிலைகுலைந்து போவான்; நீங்கள் துக்கத்தைக் காண்பித்தால், அவன் வெளியே பார்ப்பான் மற்றும் பரஸ்பர உணர்ச்சி குறையும்; மற்றும் நீங்கள் பயத்தைக் காண்பித்தால், அவனும் பயப்படுவான். குழந்தையைச் சுற்றியுள்ளவர்கள் விவாதித்துக்கொண்டு அல்லது சண்டையிட்டுக் கொண்டிருந்தால், அவனைச் சுற்றியுள்ள துன்ப உணர்ச்சியை அவனும் கொண்டிருக்கலாம்.

ஐந்தாம் மாதம்

இன்னொரு அழகான சமுதாய மைல் கல் இந்த மாதத்தில் சம்பவிக்கலாம்: உங்கள் குழந்தையின் முதலாவது சிரிப்பு. இது ஒரு மாயாஜாலம் போன்றது மற்றும் இதைக் கேட்பதற்காக நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்வீர்கள்.

உங்கள் குழந்தை இதுவரை அந்நியர் மீது பயத்தை வளர்த்திருக்காவிட்டாலும், அந்நியரைப் பார்க்கும்போது ஒரு வித்தியாசமான பிரதிபலிப்பைக் காண்பிக்கத் தொடங்குவான். அவன் ஒரு அந்நியரைப் பொறுத்துக் கொள்ளலாம், ஆனால் அவனைச் சுற்றியுள்ள மக்களுடன் சாந்தமாகவும் நிதானமாகவும் பழகுவான். அவனைச் சுற்றியுள்ள, அவனுக்கு அறிமுகமானவர்கள் மத்தியில், விசேஷமாக உங்கள் மத்தியில் இருக்க விரும்புவான்.

ஏறக்குறைய இந்த சமயத்தில், உங்கள் குழந்தை தன் முகபாவனை மூலமாகக் கோபம் மற்றும் வெறுப்பைக் காண்பிக்க முடியும். அவனது கோபம் ஒரு "கண நேரத்துக்கு" உரியது, ஆனால் உங்கள் மேல் அல்ல என்பதை நினைவில் வைக்கவும். அவனது கோபம் உங்கள் மேலுள்ளது அல்லது நீங்கள் தகுதியற்றவர்கள் எனபதாக எடுத்துக்கொள்ள முயற்சிக்கவேண்டாம்.

அவன் தன் விருப்பு மற்றும் வெறுப்புக்களையும் உங்களுக்குத் தெரிவிக்கத் தொடங்குவான். அவன் திட உணவு உட்கொள்பவனாக இருக்கும்போது, அவனுக்குப் பிடிக்காத உணவு எதையாவது நீங்கள் அவனுக்குச் சாப்பிடக் கொடுத்தால் ஒரு அருவருப்பான முக பாவனையுடன் தன் தலையை மறுபக்கமாகத் திருப்புவான். அத்துடன், அவன் இது வரை கற்றுக்கொண்டிருக்காத எதையாவது செய்ய விரும்பினால், எவ்வளவு ஏமாற்றத்தை அடைந்திருக்கிறான் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பான்.

உங்கள் குழந்தை தனது உணர்ச்சிகளை உங்களுக்கு வெளிக்காட்டும்போது அவன் உங்களுடன் பேச்சுத் தொடர்பு கொள்ளுகிறான் என்பதை நினைவில் வைக்கவும். உங்கள் குழந்தையின் உணர்ச்சிகளை மதிப்புடன் நடத்திக்கொள்ளுங்கள். அவற்றை அலட்சியம் செய்யாதீர்கள். உங்கள் குழந்தை அவனது துக்கத்தை அல்லது ஏமாற்றத்தை வெளிக்காட்டினால், அவனுடைய பிரச்சினையைத் தீர்க்க முயற்சி செய்யவும். அவனுடைய துக்கத்தினால் நீங்கள் ஏமாற்றமடைந்திருந்தால், முதலில் உங்களை அமைதிப்படுத்த முயலவும். பின்பு நீங்கள் உங்கள் குழந்தையை ஆறுதல் படுத்தமுடியும். நீங்கள் ஏமாற்றத்தின் உச்சக் கட்டத்தை அடைந்திருந்தால், உங்கள் குழந்தையைக் கண்காணிப்பதற்காக, நம்பிக்கையான ஒரு நண்பன் அல்லது குடும்ப அங்கத்தினரைக் கண்டுபிடிக்கவும். அதனால் நீங்கள் அமைதியாக முடியும். உங்கள் குழந்தையின் உணர்ச்சிகளை நீங்கள் கிரகித்து நடந்தால் காலப்போக்கில் அவன் எதிர்மறையான உணர்வுகளைச் சமாளிக்கக் கூடியவனாயிருப்பான், அதிகமாக ஒத்துழைக்கக்கூடியவனாயிருப்பான், மற்றும் மனரீதியாக ஆரோக்கியமுள்ளவனாயிருப்பான். உங்கள் குழந்தையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவேண்டிய காலம் இது தான் என்பதை நினைவில் வைக்கவும்!

ஆறாவது மாதம்

உங்கள் சிறு குழந்தை உங்கள் செயல்கள் மற்றும் உணர்ச்சிகளைப் பின்பற்றத் தொடங்குவான். நீங்கள் இருமினால் அல்லது ஒரு மேளத்தைத் தட்டினால், அவனும் அதைச் செய்ய முயற்சிப்பான். நீங்கள் புன்முறுவல் செய்தால், அவனும் புன்முறுவல் செய்வான். நீங்கள் முகத்தில் கோபக்குறியைக் காண்பித்தால், அவன் துக்கமடையக்கூடும், அல்லது அவன் அழவும் தொடங்கலாம். அவன் விசேஷமாகச் சந்தோஷப்படக்கூடிய காரியம் என்னவென்றால், நீங்கள் உங்கள் நாக்கைத் தொங்க விடும்போது அவனும் அப்படியே செய்வான்.

ஏறக்குறைய இந்தச் சமயத்தில், உங்கள் குழந்தையைப் பெயர் சொல்லிக் கூப்பிடும்போது அவன் தலையைத் திருப்புவான். நீங்கள் உற்றுப் பார்க்கும் இடத்தை உற்றுப் பார்த்து, நீங்கள் பார்க்கும் பொருளுக்கு அவனும் தன் கவனத்தைச் செலுத்துவான். இது கூட்டுக் கவனிப்பின் ஆரம்பமாகும். இது உங்கள் குழந்தை தன் கவனத்தை உங்களுடன் அல்லது வேறொரு பாராமரிப்பாளர் அல்லது நண்பனின் கவனத்துடன் இணைக்கக்கூடிய அவனது திறமையாகும்.

காரியங்கள் உணர்ச்சிப்பூர்வமாக அதிக கடினமாகும்போது, உங்கள் குழந்தை வேறு பக்கம் பார்ப்பதுடன் அநேக செய்கைகளைச் செய்வான். அவன் தன் தலையைத் திருப்பலாம், தன் முதுகை வில் போல வளைக்கலாம், கண்களை மூடலாம், திடுக்கிடலாம், வேறு எதாவது பொருளை நோக்கலாம், உங்கள் பக்கம் திரும்பலாம், உறிஞ்சலாம், கொட்டாவி விடலாம், சைகைகள் காட்டலாம், அல்லது அழத் தொடங்கலாம். உங்கள் குழந்தை அளவுக்கதிகமாகத் தூண்டப்பட்டுள்ளான் என்பதை இந்த அறிகுறிகள் காண்பிக்கின்றன. உங்கள் குழந்தைக்கு ஒரு இடைவெளி அல்லது ஒரு மெதுவான வேகத்தில் பிரதிபலித்தால், அவனும் ஒட்டு மொத்ததில் குறைவான கவலையைக் காண்பிப்பான்.

ஏழாம் மாதம்

இந்த மாதம், உங்கள் குழந்தை வேறொரு முக்கியமான உணர்ச்சியை வெளிக்காட்டத் தொடங்குவான்; அதாவது பயம். ஒரு அந்நியர் அவனை அணுகி வரும்போது, அவனிடம் ஒரு பயமுறுத்தும் விளையாட்டுப் பொருளைக் கொடுக்கும்போது, அல்லது திடீரென ஒரு, உரத்த சத்தத்தைக் கேட்கும்போது அவன் நிலைகுலைந்து போகக்கூடும். அதற்குப் பதிலாக, உங்கள் குழந்தை பயப்படுவதைப் பார்க்கும்போது நீங்கள் அவனுக்குப் பாதுகாப்பளிப்பவராகவும் அரவணைப்பவராகவும் இருப்பீர்கள். உங்கள் குழந்தையின் பயத்தை அகற்றுபவராகவும் அவனுடைய உணர்ச்சியை மதிப்பவராகவும் தொடந்து பிரதிபலிக்கவும். புதிய காரியங்களை மெதுவாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் அறிமுகம் செய்யவும்.

உங்கள் சிறு குழந்தை கவனிப்பை விரும்புவான், அதைப் பெற்றுக் கொள்வதற்கு வேண்டிய காரியங்களை அவன் செய்வான்! உங்கள் கவனிப்பைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு போலிச் சிரிப்பை அல்லது வேறு ஏதாவது சத்தத்தை எழுப்புவான். உங்கள் குழந்தையுடன் விளையாடுவதற்கு பீக்-ஏ-பூ அதாவது முகத்தைக் காட்டி மறைத்து விளையாடுதல் மற்றும் குழந்தைப் பாட்டொன்றிற்கு தாளத்தோடு கைதட்டுதல் போன்றவை மிகப்பெரிய சமுதாய விளையாட்டுகளாகும். இந்த சமயத்தில் அவன் அதை முழுமையாக மகிழ்ந்தனுபவிப்பான்.

எட்டு முதல் பத்து மாதங்கள்

இந்த கால கட்டத்தில், விருப்பங்கள், சந்தோஷம், ஆச்சரியம், துக்கம், அருவருப்பு, மற்றும் பயம் போன்ற எல்லா அடிப்படை உணர்ச்சிகளுக்கும் ஒத்த முகபாவனையைக் காண்பிப்பான். இந்த உணர்ச்சிகளை ஒரு நேரத்துக்கு ஒன்றாக அனுபவிக்கமுடியும், ஆனால் மிகவும் அடிக்கடி அவை அனேக வித்தியாசமான உணர்ச்சிகள் இணைந்த கலவையாகலாம். உதாரணமாக, ஜக்- இன்-தெ-பொக்ஸ் (பெட்டியின் மூடியைத் திறக்கும்போது ஒரு உருவம் வெளியே பாயும்) விளையாட்டில் உங்கள் பிள்ளை ஆச்சரியம், ஆர்வம், மற்றும் சந்தோஷத்தினால் சிரிப்பு என்பனவற்றைக் காண்பிப்பான். மறுபட்சத்தில், அவன் ஒரு உரத்த மற்றும் திடீர் சத்தத்தைக் கேட்டால், திடுக்கிடுதல் அல்லது பயந்த தோற்றம் மூலம் ஆச்சரியத்தையும் பயத்தையும் காட்டலாம்.

எட்டு மாத வயதுவரும்வரை, உங்கள் குழந்தை கோப உணர்வை வெளிக் காட்டினாலும் அது பொதுவாக “ஒருவர் மீது கோபத்தை” வெளிக்காட்டுவதாக இருக்காது. ஏனென்றால், அவனது குறிக்கோளில் ஒருவர் தலையிடும்போது அவனால் அதை விளங்கிக்கொள்ள முடியாது. ஒன்பது மாதங்களில், மக்களின் செய்கைகளை, அவன் விரும்புவதைச் செய்ய விடாமல் தடுப்பதற்காகச் செய்கிறார்களா என்பதை அவன் தற்போது புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பான்.

உங்கள் குழந்தை மற்றவர்களின் உணர்ச்சிகளுடன் மிகவும்இணக்கமாயிருக்கத் தொடங்கியிருப்பான். அவர்களின் முகபாவனைகளைப் புரிந்துகொள்ளவதிலும் அவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதிலும் நிபுணனாயிருப்பான். மற்றவர்களின் சைகைகள் மற்றும் உணர்ச்சிகளை நடித்துக் காண்பிப்பதில் தொடர்ந்து சந்தோஷமுள்ளவனாயிருப்பான். அவனது கூட்டு அவதானிப்பு தொடர்ந்து முன்னேற்றமடையும். இப்போது அவன் ஒரு பொருளைச் சுட்டிக் காண்பிப்பான் மற்றும் நீங்கள் அல்லது வேறு பராமரிப்பளிப்பவர் அவன் சுட்டிக் காண்பிக்கும் பொருளை நோக்கவேண்டும் என்பதில் நிச்சயமாயிருப்பான். சமுதாய மேம்பாட்டுக்கும் மொழியைக் கற்றுக் கொள்வதற்கும் கூட்டு அவதானிப்பு மிகவும் அவசியமானது.

அவன் அறிமுகமானவர்களுடன் எப்படிப் பிரதிபலிக்கிறான் என்பதனுடன் ஒப்பிடும்போது அந்நியருடன் மேலும் மேலும் அதிக வித்தியாசத்தில் பிரதிபலிக்கத் தொடங்குவான். சில குழந்தைகள் அந்நியருடன் சற்று சுலபமாகப் பழகக்கூடியவர்களாயிருப்பார்கள்; மற்றக் குழந்தைகள் அதற்கு மிகவும் அசௌகரியமான உணர்ச்சியைக் காண்பிக்கக் கூடியவர்களா யிருப்பார்கள். அந்நியர் பயம் மேம்பாடடையும். ஏனென்றால் இப்போது உங்கள் குழந்தையால் அறிமுகமானவர்கள் மற்றும் அறிமுகமற்றவர்களின் வேறுபாட்டைத் தெரிவிக்க முடிவது மாத்திரமல்ல அவனது பய உணர்வும் மேம்பட்டிருக்கும். உங்கள் குழந்தை தனக்கு அறிமுகமானவர்கள் மத்தியில் இருக்கத்தான் பெரிதும் விரும்புவான். அவன் தனது பாசத்தின் பெரும்பகுதியை உங்களுக்காகச் செலவிட விரும்புவான். உங்கள் குழந்தையை அவனுக்கு அறிமுகமற்ற அந்நியருடன் விட்டுச் செல்லவேண்டி நேர்ந்தால் அவருடன் பழகுவதற்குப் போதியளவு நேரம் கொடுப்பதன் மூலம் அவன் சௌகரியமாக உணர உதவி செய்யலாம். நீங்கள் அந்தப் புதியவருடன் சௌகரியமாக உணருகிறீர்கள் என்பதை அவனுக்குத் தெரியப்படுத்துங்கள். இது அவனது பயத்தைக் குறைக்க உதவிசெய்யும்.

பயமானது உங்கள் குழந்தையின், ஆட்களைப் பற்றிக்கொள்ளும் தனமையைத் தூண்டிவிடும். உங்களுடனும் வேறு மிகவும் அறிமுகமான பராமரிப்பாளர்களுடனும் உடல்ரீதியாக நெருக்கமாக இருக்க முயற்சிப்பதன் மூலம் இதை வெளிக்காட்டுவான். உங்கள் குழந்தை பயப்படும்போது, உங்கள் மீதும் வேறு மிகவும் நெருங்கிய பராமரிப்பாளர் மீதும் மிகப் பலமான விருப்பத்தைக் காண்பிப்பான். அவன் துன்பப்படும்போதும், கவலையடையும்போதும், அல்லது வலி ஏற்படும்போதும் அவ்வாறு செய்வான். வேறு எவராலும் இலகுவாகத் தேற்றப்படமாட்டான். இது உங்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், குழந்தை பாசத்திற்கு முன்னுரிமை காண்பிப்பது உங்கள் அவனுடைய சமுதாய மற்றும் உணர்ச்சிப்பூர்வமான மேம்பாட்டிற்கு ஒரு ஆரோக்கியமான அடையாளமாக இருக்கிறது.

இந்தக் காலகட்டம் முழுவதும், சில காரியங்கள் பாதுகாப்பானதா இல்லையா என்பதை அறிந்துகொள்வதற்காக, உங்கள் குழந்தை உங்களின் உணர்ச்சிப் பூர்வமான பிரதிபலிப்புகளின் சைகைகளுக்காக உங்களை மென்மேலும் நோக்கியிருப்பான். அவன் செய்யும் காரியங்களில் அவன் நிச்சயமற்றவனாக இருந்தால், அதை நிச்சயப்படுத்திக்கொள்வதற்காக உங்களை நோக்கியிருப்பான். உதாரணமாக, குறிப்பிட்ட சில உணவுகளில் நீங்கள் வெறுப்புள்ளவர்களாயிருந்துகொண்டு, உங்கள் குழந்தைக்கு அந்த உணவை ஊட்டும்போது அதே வெறுப்பைக் காண்பித்தால், அவனும் அந்த உணவை வெறுக்கத் தொடங்குவான். இன்னும் ஒரு உதாரணம், உங்கள் பிள்ளையை பகல் நேர பராமரிப்பு நிலையத்தில் விடும்போது நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டால், உங்கள் பயத்தை அவனும் பின்பற்றி நிலைகுலைந்தவனாவான். இதைத்தான் மனநிலை ஆராய்ச்சி வல்லுநர்கள் ‘சமுதாயத்தைப் பொறுத்தது’ என அழைக்க விரும்புகிறார்கள்.

பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் மாதங்கள்

உங்கள் குழந்தையின் முதலாவது வருட வயதின் இறுதியில், அவன் மேலும் சுதந்திரமடைந்தவனாவான். அவன் தானாகவே தனது உணவை உட்கொள்ள விரும்புவான். தனது பல்லைத் தேய்ப்பது போன்ற வேறு தன் சொந்தக் காரியங்களைத் தானே செய்துகொள்ளவிரும்புவான். உங்கள் பங்கில் இதற்கு அதிக பொறுமை தேவைப்பட்டாலும், அவன் தானே தனது காரியங்களைச் செய்துகொள்ளும்படி அவனை உற்சாகப்படுத்தவும். பிற்காலங்களில் உங்களுக்கு உணவூட்டும் நேரத்தையும் சுய பராமரிப்பு செய்தலையும் இலகுவாக்கும்.

12 மாதங்களில், உங்கள் குழந்தை உணர்ச்சிகளை முழுமையாகவும் அதி தீவிரமாகவும் இன்னும் அனுபவித்துக்கொண்டிருப்பான். ஆயினும், அவன் பெரியவனாகும்போது, தன் உணர்ச்சிகளை ஒழுங்கமைக்கக் கற்றுக்கொள்வான். அதாவது, தனது உணர்ச்சிகளை மிகவும் கடுமையற்ற விதத்தில் கையாளக் கற்றுக்கொள்ளத் தொடங்குவான். அவனது உணர்ச்சிகளை அர்த்தத்துடன் சமாளிக்க வழிகளைக் கண்டுபிடிப்பான். உதாரணமாக, அவனுக்கு பயம் ஏற்படும்போது அழமாட்டான். சிறுவயதில் இருக்கும்போது செய்ததைப்போல அதை அடக்கிக்கொள்ளமாட்டான். அதற்குப் பதிலாக, நம்பிக்கையூட்டலுக்காக உங்களை அல்லது அறிமுகமுள்ள பராமரிப்பாளரை அணுகுவான்.

உங்கள் குழந்தையின் பேச்சுத்தொடர்பு சைகைகளுக்கு மரியாதைகொடுத்து அவன் துன்பமடையும்போது அவனைத் தேற்றுவது போல பதிலளித்தால் அவன் தனது உணர்ச்சிகளை ஓழுங்கமைத்துக்கொள்ள உதவி செய்யலாம். அவன் அதிகளவு கிளர்ச்சியடையும்போது அதைக் குறைப்பதற்கு முயற்சி செய்யவும்.

இந்தக் கடைசி இரண்டு மாதங்களின் சில நிலைகளில், உங்கள் குழந்தை தனது முதல் வார்த்தைகளைப் பேச முயலலாம். உங்கள் குழந்தை இந்த மைல்கல்லை எட்டும்போது அது உங்களையும் அவனையும் மிகவும் கிளர்ச்சியடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. காலப்போக்கில், அவனது இரண்டாவது மற்றும் அதைத் தொடர்ந்துவரும் வருடங்களில் நீங்கள் ஒரு உரையாடலைத் தொடங்கமுடியும். இது, வார்த்தைகளுடனான ஒரு புதிய விதமான பேச்சுத் தொடர்பு ஆகும். ஆனால், உங்கள் குழந்தையின் வாழ்க்கையின் முதல் வருடம் முழுவதுமாகப் பேச்சுத் தொடர்பு வைத்திருந்தீர்கள் என்பதை நினைவில் வைக்கவும்.

Last updated: செப்டம்பர் 21 2009