உணவுக் குழாய், இரைப்பை மற்றும் முன் சிறுகுடல் (ESD) மற்றும் உணவுக் குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடல் (ESSB) பரிசோதனைகள்

ESD and ESSB tests [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

ESD மற்றும்ESSB என்பது உங்கள் பிள்ளையின் சமிப்பாட்டுத் தொகுதியின் பாகங்களை பார்ப்பதற்காக.

கான்டிராஸ்ட் ஊடகம்களத்தின் கதிரியக்கப்படம் (X-ray
கான்டிராஸ்ட் ஊடகமானது, உணவுக்குழாயினூடாகச் சென்று பின்பு இரப்பையைச் சென்றடைவதை எக்ஸ்-ரே காண்பிக்கும்.

ESD மற்றும் ESSB பரிசோதனைகள் என்றால் என்ன?

ESD மற்றும் ESSB என்பது, எக்ஸ்–ரே ஊடுகதிர்கள் மற்றும் வித்தியாசத்தைக் காட்டி ஒப்பிடும் ஒரு ஊடகத்தின் மூலமாக உங்கள் பிள்ளையின் சமிபாட்டுத்தொகுதியில் என்ன நடைபெறுகிறது என்பதை மருத்துவர்களுக்குக் காண்பிக்கும் பரிசோதனைகளாகும். வித்தியாசத்தைக் காட்டி ஒப்பிடும் ஒரு ஊடகம் என்பது உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கப்படும் ஒரு திரவமாகும். அது சமிபாட்டுத் தொகுதியை எக்ஸ்–ரே ஊடுகதிர்ப் படத்தில் தெளிவாக எடுத்துக் காட்ட உதவி செய்யும்.

 • ESD என்பது உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் என்பனவற்றின் சுருக்கமாகும். இவைதான் உங்கள் உடலில் சமிபாட்டுத்தொகுதியின் முதல் மூன்று பாகங்களாகும். நீங்கள் உணவு உண்ணும்போது, உணவு உங்கள் உணவுக்குழாயிலிருந்து இரைப்பைக்கும், பின்பு இரப்பையிலிருந்து உங்கள் முன்சிறுகுடலுக்கும் செல்லும். ஒரு ESD பரிசோதனை, உங்கள் பிள்ளை உணவு உண்ணும்போது மற்றும் பானம் பருகும்போதும் எப்படி இந்த மூன்று உடற் பாகங்களும் வேலை செய்கிறது என்று மருத்துவருக்குக் காண்பிக்கிறது.
 • ESSB என்பது உணவுக்குழாய், இரைப்பை, மற்றும் சிறுகுடல் என்பனவற்றின் சுருக்கமாகும். சிறுகுடல் தான் உங்கள் உடலின் சமிபாட்டுத்தொகுதியின் மிக நீண்ட பகுதியாகும். முன்சிறுகுடல்தான் சிறுகுடலின் முதற் பகுதியாகும். நடுச் சிறுகுடல் மற்றும் பின் சிறுகுடல் என்றழைக்கப்படும் வேறு இரு பகுதிகளும் உள்ளன. இந்தப் பரிசோதனையும் ESD போன்றதுதான். ஆனால், உங்கள் பிள்ளையின் சமிபாட்டுத்தொகுதியில் மேற்கொண்டு என்ன நடக்கிறது என்பதையும் மருத்துவருக்குக் காண்பிக்கிறது.

ESD மற்றும் ESSB பரிசோதனைகள் பெரும்பாலும் மருத்துவமனைகளிலேயே செய்யப்படுகின்றன

மருத்துவமனையில், வழக்கமாக இந்த பரிசோதனகள் டையக்னோஸ்டிக் இம்மேஜிங் பிரிவில், இரையக குடலியல் பிரிவு மற்றும் சிறுநீர் இனப்பெருக்க உறுப்புப் பிரிவு (GI/GU) பகுதியில் செய்யப்படும்.

 • ESD பரிசோதனை பெரும்பாலும் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும். ஆயினும், எக்ஸ்–ரே ஊடுகதிர்ப் படங்கள் தயாரிப்பதற்கும், அதை செயல்முறைப்படுத்துவதற்கும் கதிர்வீச்சியல் மருத்துவரால் சோதனை செய்வதற்கும் நேரம் கொடுப்பதற்காக 45 முதல் 60 நிமிடங்கள் வரை இந்தப் பிரிவில் அமர்ந்திருக்க வேண்டிவரலாம்.
 • ESSB பரிசோதனைக்கு 3 முதல் 6 மணி நேரங்கள் எடுக்கலாம். அது உங்கள் பிள்ளையின் சமிபாட்டுத் தொகுதியைச் சார்ந்துள்ளது.

பரிசோதனைக்கு முன் உங்கள் பிள்ளை உணவு உண்பது மற்றும் பானங்கள் குடிப்பதை நிறுத்தவேண்டும்

2 வயது மற்றும் அதற்கும் குறைவான வயதுள்ள பிள்ளைகள், பரிசோதனைக்கு முன்பு 4 மணி நேரம் வரை எந்த உணவோ அல்லது பானமோ உட்கொள்ளக்கூடாது.

2 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள், பரிசோதனைக்கு முந்திய நாள் நள்ளிரவு முதல் எந்த உணவோ அல்லது பானமோ உட்கொள்ளக்கூடாது.

பரிசோதனையில் மூன்று நபர்கள் உட்படுவார்கள்

ஒரு மருத்துவர், ஒரு எக்ஸ்–ரே ஊடுகதிர் தொழில் நுட்ப வல்லுனர், மற்றும் ஒரு தாதி, பரிசோதனை செய்வதிலும் உங்கள் பிள்ளையைப் பராமரிப்பதிலும் உதவி செய்வார் மற்றும் பரிசோதனை நடைபெறும் சமயத்தில் என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பார்கள்.

 • மருத்துவர், கதிரியக்கவியல் வல்லுனராவார். இவர் எக்ஸ் –ரே ஊடுகதிர் செயல்முறையிலும் அதற்கு மேல் விளக்கம் கொடுப்பதிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்றவராவார்.
 • எக்ஸ்–ரே ஊடுகதிர் தொழில் நுட்ப வல்லுனர் உபகரணங்களை இயக்குவதில் உதவி செய்வார்.
 • தாதி பரிசோதனை சமயம் முழுவதும் உங்கள் பிள்ளைக்கு உதவி செய்வார்.

உங்கள் பிள்ளைக்கு பரிசோதனையைப் பற்றி விளக்கமளித்தல்

இந்தத் தகவல்களை கவனமாக வாசித்துப் பார்ப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். பரிசோதனையைப் பற்றி உங்கள் பிள்ளை புரிந்துகொள்ளும் வார்த்தைகளில் விளக்கமளியுங்கள். உங்கள் பிள்ளை அதை விளங்கிக் கொள்வான். உங்கள் உடல் எப்படி வேலை செய்கிறது என்பதை விளக்க உங்கள் குடும்பத்தினர் உபயோகிக்கும் வார்த்தைகளை உபயோகியுங்கள். எதை எதிர்பார்க்கவேண்டும் என அறிந்திருக்கும் பிள்ளைகள் குறைந்தளவு மனக்கலக்கம் உள்ளவர்களாயிருப்பார்கள். பிள்ளைகள் ஒத்துழைக்கும்போது பரிசோதனை இலகுவாகவும் விரைவாகவும் நடைபெறும்.

சிறு பிள்ளைகள் பரிசோதனையின்போது சௌகரியமான எதையாவது பற்றிப் பிடித்துக் கொண்டிருக்க விரும்புவார்கள். உங்கள் பிள்ளை வீட்டிலிருந்து, ஒரு பஞ்சு திணிக்கப்பட்ட விளையாட்டுப் பொருள் அல்லது ஒரு கம்பளிப் போர்வையைக் கொண்டுவர விரும்பலாம்.

பரிசோதனை நடைபெறும் நேரம் முழுவதும் பெற்றோரில் ஒருவர் பிள்ளையுடன் இருக்கலாம். நீங்கள் கருவுற்றிருந்தால், உங்கள் பிள்ளைக்கு எக்ஸ்–ரே ஊடுகதிர்ப்படம் எடுக்கும்போது அந்த அறையை விட்டு வெளியேற வேண்டும்.

பரிசோதனை நடைபெறும்போது

டையக்னோஸ்டிக் இம்மேஜிங் பிரிவின் GI/GU பகுதியில் சோதனை செய்யப்பட்டபின், உங்கள் பிள்ளை, அங்குள்ள உடை மாற்றும் அறையை உபயோகித்து, மருத்துவமனை மேலாடை அணிய வேண்டும். காத்திருப்போர் அறையிலுள்ள எக்ஸ்–ரே ஊடுகதிர் தொழில் நுட்ப வல்லுனர் அல்லது தாதி உங்களை வரவேற்பார் மற்றும் எக்ஸ்–ரே ஊடுகதிர் படம் எடுக்கும் அறைக்கு வரும்படி அழைப்பார். வழக்கமாக, பெற்றோரில் ஒருவர் பிள்ளையுடன் எக்ஸ்–ரே ஊடுகதிர் படம் எடுக்கும் அறைக்குள் செல்லலாம்.

எக்ஸ்– ரே ஊடுகதிர்ப் படம் எடுக்கும் அறைக்குள்

இந்த அறை, எக்ஸ்–ரே ஊடுகதிர்ப்படம் எடுக்கும் ஒரு மேசை, எக்ஸ்–ரே ஊடுகதிர்ப்படங்கள் எடுக்கும் ஒரு பெரிய கமரா மற்றும் ஒரு தொலைக்காட்சித் திரை என்பனவற்றைக் கொண்டிருக்கும். உங்கள் பிள்ளை தொலைக்காட்சி கமரா கீழ் படுத்திருப்பான்.

வயிறு மற்றும் சிறுகுடலின் கதிரியக்கப்படம் X-ray
30 நிமிடங்களுக்குப் பின், இரைப்பையில், சிறு குடலில் மற்றும் பெரும் குடலில் கான்டிராஸ்ட் ஊடகத்தைப் பார்க்கலாம். 

உங்கள் பிள்ளைக்கு “பேரியம் பால்” குடிக்கக் கொடுக்கப்படும். பேரியம் என்பது உணவுக் குழாய், இரைப்பை மற்றும் முன் சிறுகுடல் என்பனவற்றின் உட்பகுதியில் மேற்பூச்சாகப் பூசப்படும் தடிப்பான வெள்ளைத் திரவமாகும். இந்த மேற்பூச்சு ஒரு “முரண்பாட்”டைக் கொடுக்கும். அதன் மூலம் சமிபாட்டுத்தொகுதியின் இந்தப் பாகங்களை எக்ஸ்-ரே ஊடுகதிர்ப்படத்தில் காணலாம். அதனால்தான் இந்தப் பானம் முரண்பாடான ஊடகம் என அழைக்கப்படுகிறது. இந்தப் பாலுக்கு சுவைமணம் கொடுக்கப்படும் அதனால் உங்கள் பிள்ளை பல சுவைமணங்களுக்குள் அவன்(ள்) விரும்பியதைத் தேர்ந்திடுக்கலாம். பேரியம் பால் தாம் விரும்புவதைப்போன்ற சுவையற்றிருப்பதால், சில பிள்ளைகள் அதைக் குடிப்பதற்குக் கஷ்டப்படுவார்கள். படுத்திருந்தவாறு குடிப்பதும் கஷ்டம். சில பிள்ளைகள் இந்த இரண்டு காரணங்களாலும் கஷ்டப்படுவார்கள்.

உங்கள் பிள்ளை பேரியம் பால் குடிக்கும்போது மருத்துவர் தொலைக்காட்சிப் புகைப்படப் பெட்டியில் அதனை அவதானிப்பார். பேரியம் பால் குடிக்கும்போதும் குடித்தபின்பும் எக்ஸ்–ரே ஊடுகதிர்ப்படங்கள் எடுக்கப்படும்.

எக்ஸ்–ரே ஊடுகதிர்ப்படங்கள் எடுக்கும்போது கமரா சத்தங்களை ஏற்படுத்தினாலும் அது உங்கள் பிள்ளையைத் தொடாது. எக்ஸ்–ரே ஊடுகதிர்கள் வலியை ஏற்படுத்தாது.

பேரியம் பால் குடிக்கும்போது என்ன நடக்கிறது என்பதைப் பற்றி சிறப்பான முறையில் அவதனிப்பதற்காக மருத்துவர் உங்கள் பிள்ளையை வித்தியாசமான நிலைகளில் படுக்க வைப்பார். உங்கள் பிள்ளை பேரியம் பால் குடித்துமுடித்தவுடன் மற்றும் மருத்துவர் எக்ஸ்–ரே ஊடுகதிர்ப்படங்களை எடுத்து முடித்தவுடன், தொழில் நுட்ப வல்லுனர் அல்லது தாதி உங்கள் பிள்ளை படுக்கையிலிருந்து எழுந்திருக்க உதவி செய்வார்.

பரிசோதனைகளின் பின்

ESSB

நீங்களும் உங்கள் பிள்ளையும் காத்திருப்போர் பகுதிக்கு அனுப்பப்படுவீர்கள். பேரியம் பால் சிறு குடலில் காணப்படும்வரை 30 நிமிடங்களுக்கு ஒருமுறை மேலும் எக்ஸ்–ரே ஊடுகதிர்ப்படங்கள் எடுக்கப்படும்.

ESD

தொழில் நுட்ப வல்லுனர் அல்லது தாதி உங்களை உடைமாற்றும் அறை மற்றும் காத்திருப்போர் அறைக்கு வழிநடத்திச் செல்வார்கள். உங்கள் பிள்ளை அங்கு தன் உடைகளை மாற்றிக்கொள்ளலாம். எக்ஸ்–ரே ஊடுகதிர்ப்படங்கள் பதப்படுத்தப்பட்டு மருத்துவரால் சோதிக்கப்படும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

வரவேற்பாளர் அல்லது தொழில் நுட்ப வல்லுனர், எப்போது நீங்கள் செல்லலாம் என்று சொல்லுவார்.

வெளி நோயாளர்கள் மருத்துவமனையில் வேறு சந்திப்புத் திட்டத்துக்குப் போகலாம் அல்லது வீட்டுக்குத் திரும்பிப் போகலாம். கதிர்வீச்சியல் மருத்துவர் ESD/ESSB முடிவுகளை மறுபார்வை செய்து அறிக்கையை உங்கள் மருத்துவருக்கு அனுப்பிவைப்பார். அறிக்கையைப் பற்றி, தொடர்-சிகிச்சையின்போது உங்கள் மருத்துவர் உங்களுடன் கலந்து பேசுவார்.

பரிசோதனைகளின் தொடர்-விளைவுகள்

பேரியம் பாலின் விளைவாக, அடுத்த சில தடவைகள் உங்கள் பிள்ளை மலம் கழிக்கும்போது வெள்ளை நிறமாக இருக்கலாம். இது சாதாரணமானது. அடுத்த சில நாட்களுக்கு, உங்கள் பிள்ளை அதிகளவு தண்ணீர் குடிப்பதனால் பேரியம் பால் இலகுவாக வெளியேறும்.

முக்கிய குறிப்புகள்

 • ESD மற்றும்ESSB என்பது சமிப்பாட்டுத் தொகுதியின் பாகங்களை பார்ப்பதற்காக , எக்ஸ்–ரே ஊடுகதிர்ப்படங்கள் மற்றும் ஒரு முரண்பாட்டு ஊடகம் மூலமாகச் செய்யபடும் பரிசோதனைகள் ஆகும்.
 • ஒரு ESD பரிசோதனை செய்ய சுமார் ஒரு மணி நேரம் செலவிடப்படும். ஒரு ESSB பரிசோதனை மூன்று முதல் ஆறு மணி நேரம் வரை எடுக்கலாம்.
 • பரிசோதனை உங்கள் பிள்ளைக்கு வலியேற்படுத்தாது மற்றும் தீங்கு செய்யாது.
 • பரிசோதனைக்குப்பின் சில நாட்களுக்கு உங்கள் பிள்ளையின் மலம் சிறிது வெள்ளை நிறத்தில் காணப்படலாம்.
 • பரிசோதனைக்கு பின் முதல் சில நாட்களுக்கு உங்கள் பிள்ளை அதிகளவு தண்ணீர் குடிக்கவேண்டும்.
Last updated: நவம்பர் 06 2009