ஈய நஞ்சேறல்

Lead poisoning [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பிள்ளைகளில் இந்த அரிதான, ஆனால் தீங்கு விளைவிக்கும் நிலைமைக்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சைத் தெரிவுகள் மற்றும் தடுத்தல் பற்றி இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடிய ஒரு கண்ணோட்டம்.

முக்கிய குறிப்புகள்

  • உடலில் ஈயம் சேமிக்கப்படும்போது ஈய நஞ்சேறல் சம்பவிக்கும்
  • உடலில் ஈயம் சேமிக்கப்பட மாதங்கள் அல்லது வருடங்கள் செல்லலாம்.
  • ஈயம் பூசப்பட்ட ஒரு பொருளை நக்குதல் அல்லது ஈய வர்ணம் பூச்சிலுள்ள துகள்களை சுவாசித்தல் என்பது பொதுவான காரணம்
  • ஈய நஞ்சேறுதல் பிள்ளைகளின் வளர்ச்சி, கவனம், மற்றும் நடத்தை என்பனவற்றின் தீங்கான பாதிப்புகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது ஈயத்தின் குறைந்த அளவுகள், அறிவாற்றல் குறைவு மற்றும் கேட்கும் திறனில் மந்தம் என்பனவற்றை ஏற்படுத்தும்.
  • பிள்ளையின் சுற்றுச்சூழலிலிருந்து ஈயத்தை அகற்றிவிடுவதுதான் பிரதானமான சிகிச்சை.
  • ஈய நஞ்சேறல் கனடா நாட்டில் மிகவும் அரிதாக சம்பவிக்கும்

ஈய நஞ்சேறுதல் என்றால் என்ன?

ஈயம் காற்று, மண், வீட்டுத் தூசி, உணவு, குடிதண்ணீர், மற்றும் மலிவான ஆபரணங்கள் அல்லது விளையாட்டு​ப்பொருட்களில் சிறிய அளவுகளில் காணப்படுகிறது. உடலில் ஈயம் சேமிக்கப்படும்போது ஈய நஞ்சேறுதல் சம்பவிக்கிறது. உடலில் ஈயம் சேமிக்கப்படுவதற்கு மாதங்கள் அல்லது வருடங்கள் செல்லலாம்.

சிறிய அளவுகளிலான ஈயம் பிள்ளைகளில் அல்லது கர்ப்பத்தில் இருக்கும் பிறவாத குழந்தைகளுகளில்(குழந்தை பிறப்பதற்கு முன்பாக) கடுமையான சேதத்தை ஏற்படுத்தலாம். பிள்ளைகளின் சிறிய உடல்கள் இலகுவாக ஈயத்தை உறிஞ்சும் மற்றும் அதன் தீங்கான பாதிப்புக்கு அதிக ஆபத்திலிருக்கிறார்கள். பெரிய அளவிலான ஈய நஞ்சேறுதல், பிள்ளைகள் மற்றும் பெரியவர்களில் மரணத்தை ஏற்படுத்தலாம்.

ஈய நஞ்சேறுதலுக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

திடீர் ஈய நஞ்சேற்றம் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு பிள்ளைக்கு வலிப்பு நோய் ஏற்படலாம் அல்லது மயக்க நிலையை அடையலாம். குறுகிய காலத்தில் அதிக அளவுகளிலான ஈயத்துடன் தொடர்பு கொள்வது பின்வரும் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளை ஏற்படுத்தலாம்:

  • வாந்தி
  • வயிற்றுப்போக்கு
  • வலிப்பு நோய்
  • நினைவிழத்தல்
  • மரணம்

கனடா நாட்டில் ஈய நஞ்சேற்றத்தின் கடுமையான நிலைமைகள் மிகவும் அரிதாகச் சம்பவிக்கும். ஈயத்துடன் நீண்ட காலத் தொடர்பு மிகவும் சாதாரணமானது. அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

  • பசியின்மை
  • வயிற்றுவலி
  • வலிப்பு நோய்
  • களைப்பு
  • நித்திரையின்மை
  • தலைவலி

காரணங்கள்

ஈய நஞ்சேறுதலுக்கு அநேக காரணங்கள் இருக்கின்றன. சிறு பிள்ளைகளில் ஒரு பொதுவான காரணம் ஈயம் பூசப்பட்ட பொருட்களை விழுங்குதல் அல்லது நக்குதல் ஆகும். குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகள் பெரும்பாலும் உணவுப் பொருட்கள்-அல்லாதவற்றைத் தங்கள் வாய்களில் வைப்பார்கள். வீடு புதிப்பிக்கப்படும்போது அல்லது வசிப்பிடத்தை மாற்றும்போது, பிள்ளைகள் மாசுபட்ட தூசியை சுவாசிக்கலாம் அல்லது ஈய வர்ணச் சிறு துண்டுகளை உண்ணலாம். ஈயம் பூசப்பட்ட தண்ணீர்க் குழாய்களிலிருந்து தண்ணீரைக் குடிக்கும்போதும் ஈய நஞ்சேறுதல் ஏற்படலாம். ஈய நஞ்சேறுதலுக்கான வேறு ஊற்றுமூலங்கள் பின்வருமாறு:

  • மாசுபட்ட காற்று அல்லது மண்
  • சில விளையாட்டுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மற்று அழகு சாதனப் பொருட்கள்
  • கோல் கண் ஒப்பனைப் பொருள்
  • கனடா நாட்டுக்கு வெளியே தயாரிக்கப்பட்ட மெருகுப் பூச்சு இடப்பட்ட பீங்கான்கள்
  • ஈயம் பூசப்பட்ட கண்ணாடி
  • சேமிப்பு மின்கல உறைகள்
  • துப்பாக்கித் தோட்டாக்கள்

சிக்கல்கள்

ஈய நஞ்சேறுதல் பிள்ளைகளின் வளர்ச்சி, கவனம், மற்றும் நடத்தை என்பனவற்றின் தீங்கான பாதிப்புகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. வேறு சிக்கல்கள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

  • இரத்த சோகை
  • மூளை, சிறுநீரகம் மற்றும் நரம்புத் தொகுதியில் சேதம்

ஈயத்தின் குறைந்த அளவுகள், அறிவாற்றல் குறைவு மற்றும் கேட்கும் திறனில் மந்தம் என்பனவற்றை ஏற்படுத்தும்.

ஈய நஞ்சேற்றப்பட்ட உங்கள் பிள்ளைக்கு மருத்துவர் என்ன செய்யலாம்

உங்கள் பிள்ளையின் ஈயத்துடனான தொடர்பைத் தீர்மானிப்பதற்காக உங்கள் பிள்ளையின் மருத்துவர் ஒர் இரத்தப் பரிசோதனை செய்யும்படி கட்டளையிடலாம். ஆயினும், ஈய நஞ்சேறல் கனடா நாட்டில் மிகவும் அரிதானதால், இந்தப் பரிசோதனை பெரும்பாலும் தேவைப்படாது. உங்கள் பிள்ளைக்கு இரத்தப் பரிசோதனை தேவையா என்பதை அறிவதற்கு, உங்கள் பிள்ளையின் ஈயத்துடனான தொடர்புகளை உங்கள் மருத்துவருடன் கலந்து பேசவும். உங்கள் பிள்ளைக்கு ஈயத்துடன் ஒரு உயர் அபாயமான தொடர்பு இருந்தால், இரத்தப் பரிசோதனை செய்வது முக்கியம். ஏனென்றால், ஈயத்துடனான தொடர்பு எப்போதும் பிள்ளைகளில் அறிகுறிகளைக் காண்பிக்காது. அபாயகரமான காரணிகளுள்ள பிள்ளைகளுக்கு மாத்திரம், இரத்தத்தில் ஈய அளவின் பரிசோதனைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன.

சிகிச்சை

ஈய நஞ்சேறலுக்குச் சிகிச்சை செய்வதற்கு, மருத்துவர்கள் பிள்ளையின் குடல்களிலிருந்து ஈயத்தை அலசிக் கழுவ முயற்சிப்பார். சிலெட்டிங் ஏஜென்ட்ஸ் என்றழைக்கப்படும் ஒரு மருந்தையும் உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பார்கள். இவை, ஈயத்தை இரத்தோட்டத்திலிருந்து வெளியே இழுத்து சிறுநீரகத்தினுள் விடும் வேதிப்பொருட்கள். அதன்மூலம் ஈயம் உடலை விட்டு வெளியேறிவிடும்.

பிள்ளையின் சுற்றுச்சூழலிலிருந்து ஈயத்தை அகற்றிவிடுவதுதான் பிரதானமான சிகிச்சை.

தடுத்தல்

உங்கள் வீட்டில் ஈயத்துடனான தொடர்பைக் குறைக்க நீங்கள் எடுக்கக்கூடிய படிகள் இருக்கின்றன.

உங்கள் தண்ணீர்க் குழாய்களை வேகமாக நீரைப்பாய்ச்சிக் கழுவவும்

ஒரு சில மணிநேரங்கள் உங்கள் தண்ணீர் உபயோகப்படுத்தப்படவில்லை எனின் குறைந்த பட்சம் 1 நிமிடத்துக்கு தண்ணீரை ஓட விடவும்.

குளிர்ந்த தண்ணீரை உபயோகிக்கவும்

குளிர்ந்த நீரைவிட வெந்நீர் அதிக ஈயத்தைக் கடத்தும். தண்ணீர்க் குழாயிலிருந்து குளிர்ந்த தண்ணீரை மாத்திரம் சமயல் செய்யவும் குடிக்கவும் உபயோகப்படுத்தவும்.

உங்கள் பிள்ளைக்குத் தாய்ப்பாலூட்டவும்

குழாய்த் தண்ணீரை விட தாய்ப்பால் மிகவும் குறைந்தளவு ஈயத்தைக் கொண்டிருக்கிறது.

கைகளைக் கழுவவும்

அடிக்கடி கைகளைக் கழுவும்படி உங்கள் பிள்ளைகளுக்கு கட்டளையிடவும். நன்கு கைகளைக் கழுவினால் மிகக்குறைந்தளவு ஈயத் தூள்கள்தான் உட்செல்லும்.

உங்கள் காலணிகளைக் கழற்றவும்

வெளியே அணியும் காலணிகளை உங்கள் வீட்டுக்கு வெளியே வைக்கவும். காலணிகளின் அடிப்பகுதியிலுள்ள அழுக்கு, மண்ணிலுள்ள ஈயத்தைக் கொண்டிருக்கலாம்.

பெயின்ட்களுக்கு கவனமாயிருக்கவும்.

பழைய வீடுகள் ஈயம் சேர்க்கப்பட்ட பெயின்ட்களைக் கொண்டிருக்கலாம். பெயின்டைச் சுரண்டவேண்டாம். ஏனெனில், அது ஈயத் தூசுகளை அதிகரிக்கும்.

அடிக்கடி வீட்டைச் சுத்தம் செய்யவும்

ஈயத்தைக் கொண்டிருக்கும் தூசுத் துகள்களை அகற்றுவதற்காக உங்கள் வீட்டை ஒழுங்காக தூசி தட்டிச் சுத்தம் செய்யவும்.

ஈயப் படிகத்தை அகற்றிவிடவும்

உணவு அல்லது பானங்கள் வைப்பதற்காக ஈயப் படிகக் கொள்கலன்களை (lead crystal containers) உபயோகிப்பதைத் தவிர்க்கவும். விசேஷமாக, கர்பிணிப் பெண்கள் அல்லது பிள்ளைகளுக்கு படிக கிளாஸ்களில் பரிமாறவேண்டாம்.

எப்போது மருத்துவ உதவியை நாடவேண்டும்

பின்வரும் நிலைமைகளின் கீழ் உங்கள் பிள்ளையின் வழக்கமான மருத்துவரைச் சந்திக்கவும்:

  • உங்கள் பிள்ளை சிறிதளவு ஈயத்துடன் தொடர்பு வைத்திருந்தான் என நீங்கள் கருதுகிறீர்கள்

பின்வரும் நிலைமைகளின் கீழ் உங்கள் பிள்ளையை உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும் அல்லது தேவைப்பட்டால் 911ஐ அழைக்கவும்.

  • ஈயம் பூசப்பட்ட ஒரு விளையாட்டுச் சாமான் அல்லது ஒரு பொருளை விழுங்கிவிட்டால் அல்லது நக்கிவிட்டான்
  • வலிப்பு நோய், தீடிர் வலிப்பு அல்லது மயக்க நிலையை அனுபவிக்கிறான்
Last updated: மே 07 2010