காதிற்குள் குழாய் உட்புகுத்தல் (மிரிங்கோட்டமி) மற்றும் காதுக் குழாய்கள்: செயற்பாட்டின்பின் உங்கள் பிள்ளையை வீட்டில் பராமரித்தல்

Myringotomy and ear tubes: Care at home after the procedure [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

காது மிரிங்கோட்டமி செயல்முறை என்பது ஒரு சின்னஞ்சிறிய, மென்மையான குழாய்கள் பிள்ளையின் காதுகளில் திரவத்தை வடியவைக்கப் பொருத்தப்படும் ஒரு அறுவை சிகிச்சை.

காது –மூக்கு- தொண்டை மருத்துவர் தற்போதுதான் உங்கள் பிள்ளையின் காதுகளிலிருந்து திரவத்தை, காதிற்குள் வடிகுழாய் உட்செலுத்தல் என்ற செயற்பாட்டின் மூலமாக வடித்தெடுத்துள்ளார். இந்தச் செயற்பாடு மிரிங்கோட்டமி என்று அழைக்கப்படும். உங்கள் பிள்ளையின் செவிப்பறைக்குள் மருத்துவர் சின்னஞ்சிறிய, மென்மையான குழாய்களை உட்புகுத்தியுமிருக்கலாம். இந்தக் குழாய்கள் காதிலிருந்து திரவத்தை இலகுவாக வடியச் செய்யும். இந்தக் குழாய்கள் உங்கள் பிள்ளையின் கேட்கும்திறனை முன்னேற்றுவிக்கும் மற்றும் வலியைக் குறைக்கும். இது உங்கள் பிள்ளைக்கு காதில் தொற்றுநோய் ஏற்படுவதையும் குறைக்கும்.

காதின் காற்றோட்டக் குழாய் ஊத்தேக்கியாவின் குழாயிலிருந்து காதுக் கால்வாய்க்குள் வளியை அனுமதிக்கும் காற்றோட்டக்குழாய்
செவிப்பறையின் இரண்டு பக்கங்களிலும் காற்றழுத்தத்தை சீராக்க, செவிப்பறையில் ஒரு காற்றோட்டக்குழாய் வைக்கப்படுகிறது அது காது உலர்வதற்கும் வழி வகுக்கிறது.

ஓற்றோலறிங்கோலோஜிஸ்ற்/தலை மற்றும் கழுத்து அறுவைச் சிகிச்சை மருத்துவர் , காது, மூக்கு, தொண்டையில் ஏற்படும் பிரச்சினையைத் தீர்ப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர் ஆவார்.

பெரும்பாலான பிள்ளைகள் செயற்பாடு நடைபெற்ற அன்றே வீடு திரும்புவார்கள்

வழக்கமாக, அறுவைச் சிகிச்சை 15 முதல் 20 நிமிடங்கள் வரை நடைபெறும்.

உங்கள் பிள்ளை இந்தச் செயற்பாட்டின்போது இலேசான வலியை உணருவான் அல்லது வலியை உணரவே மாட்டான்.

உங்கள் பிள்ளை பகல் நேர அறுவைச் சிகிச்சைக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்தால், பொதுவான மயக்க மருந்து என்றழைக்கப்படும் நித்திரைக்கான மருந்திலிருந்து முழுமையாக விழிப்படைந்தவுடன் அவனால் வீட்டுக்குப் போகமுடியும். உங்கள் பிள்ளை எப்போது வீடு திரும்பலாம் என உங்கள் பிள்ளையின் தாதியால் சொல்லமுடியும். இது பெரும்பாலும் உங்கள் பிள்ளை மருத்துவமனைக்கு வந்தபின் 4 முதல் 5 மணி நேரங்களுக்குள் அவன் வீடு திரும்பலாம்.

உங்கள் பிள்ளையை வீட்டில் வைத்துப் பராமரித்தல்,

உங்கள் பிள்ளையின் காதிலிருந்து திரவம் வடியலாம்

குழாய் உட்புகுத்தப்பட்டு 3 அல்லது 4 நாட்கள் வரை உங்கள் பிள்ளையின் காதிலிருந்து திரவம் வடியலாம். இந்தத் திரவம் சாம்பல் அல்லது கபில நிறத்திலிருக்கலாம். துர்நாற்றமுடையதாயுமிருக்கலாம். இது சாதாரணமானது.

குழாய்கள் உங்கள் பிள்ளையின் காதுகளுக்குள் பல மாதங்களுக்கு இருக்கலாம்.

குழாய்கள் சிறிது காலத்தின்பின் விழுந்துவிடலாம் . ஆனால் அவை மிகவும் சிறியனவாக இருப்பதால் உங்களால் அவற்றைப் பார்க்க முடியாமல் இருக்கும்.

சில சமயங்களில் அவை காது –மூக்கு- தொண்டை மருத்துவரால் வெளியே எடுக்கப்படவேண்டியிருக்கலாம். சில மாதங்களின்பின் உங்கள் பிள்ளையின் கேட்கும்திறன் மோசமாகிக்கொண்டே வந்தால், அது குழாய்கள் வெளியே விழுந்துவிட்டன அல்லது அடைக்கப்பட்டுவிட்டன மற்றும் திரவம் திரும்பவும் அடைத்துவிட்டது என்பதை அர்த்தப்படுத்தும். இது சம்பவித்தால், தயவுசெய்து உங்கள் பிள்ளையின் குடும்ப மருத்துவரை அழைக்கவும்.

உங்கள் பிள்ளையின் காதை சுத்தம் செய்தல்

உங்கள் பிள்ளையின் காதுக்குள் எதையும் போடாதீர்கள்

பஞ்சொற்றி போன்ற எதையும் உங்கள் பிள்ளையின் காதிற்குள் போடுவது, அவனின் செவிப்பறையிலுள்ள துவாரத்தைக் கிழித்துவிடும். உங்கள் பிள்ளையின் காதை சுத்தம் செய்வதற்கு, ஒரு சுத்தமான ஈரலிப்பான துணியினால் அவனது காதின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்யவும்.

உங்கள் பிள்ளை குளிக்கலாம். காதுத் தொற்றுநோயைத் தடுப்பதற்கு, உங்கள் பிள்ளையின் காதுகளுக்குள் சோப்பு கலந்த தண்ணீர் உட்புகுவதைத் தவிர்க்கவும். உங்கள் பிள்ளையின் காதுகளைப் பாதுகாப்பதற்காக குளிக்கும்போது அல்லது ஷம்போ இடும்போது, சிலிக்கன் காதுப் பசை அல்லது காது அடைப்பானை உபயோகிக்கவும். உங்கள் உள்ளூர் மருந்துக்கடைகளில் இவை கிடைக்கும். பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட காது அடைப்பான்கள் ஏதாவது ஹியரிங் எயிட் சென்டரில் கிடைக்கும். இந்த சென்டரின் பெயர்ப் பட்டியலை காது –மூக்கு- தொண்டை மருத்துவமனை பணியாளர்களிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளவும்.

மருந்துகள்

அன்டிபையோடிக் காது சொட்டு மருந்துகள்

காது –மூக்கு- தொண்டை மருத்துவர் அன்டிபையோடிக் காது சொட்டு மருந்துகளை உங்கள் பிள்ளைக்காக வரவழைக்கலாம் அல்லது வரவழைக்காமலிருக்கலாம். உங்கள் பிள்ளையின் காதுக்குள் அன்டிபையோடிக் சொட்டு மருந்தை எப்படி விடவேண்டும் என்பதை உங்கள் தாதி காண்பிப்பார்.

வலி நிவாரண மருந்து

செயல்முறையின்பின் உங்கள் பிள்ளை வீட்டுக்குச் சென்றதும் இவ்வறிவுரைகளை பின்பற்றவும்.

வலிக்கான மருந்தை உங்கள் பிள்ளைக்கு நீங்கள் கொடுக்கலாம்.

நீங்கள் மருத்துவ மனையைவிட்டுச் செல்லுவதற்கு முன்பாக வலிக்கான மருந்தின் மருந்துக் குறிப்பை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். வேளைமருந்து பற்றி மருந்தாளுனர் உங்களுக்குத் தரும் அறிவுரையைப் பின்பற்றுங்கள். இந்த மருந்துக்குறிப்பு வலி மருந்துகள் பயனுள்ளவையாக இருந்தாலும், அவற்றை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் அவை மிகுந்த ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடியவையாகும்.

இந்த மருந்துகளை உபயோகிக்கும்போது, சுவாசிப்பதில் அல்லது தூக்கக் கலக்கத்தின் அளவில் உங்களுக்கு கவலைதரக்கூடிய ஏதாவது மாற்றங்களை அவதானித்தால் மருந்து கொடுப்பதை நிறுத்திவிட்டு மருத்துவ கவனிப்பை நாடவும். உங்கள் பிள்ளை பேச்சுமூச்சின்றியிருந்தால் உடனடியாக 911 ஐ அழைக்கவும்.

வலி மருந்துக்கான மருந்துக் குறிப்பைக் கொடுக்கும்போது மருந்துக்குறிப்பில்லாமல் வாங்கும் மயக்கத்தை (தூக்கக்கலக்கத்தை) ஏற்படுத்தக் கூடியவற்றைக் கொண்டிருக்கும் மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்க வேண்டாம். டிகொன்ஜெஸ்டன்ட்ஸ் அதாவது சளியை இளகச் செய்யும் மருந்து மற்றும் அன்டிஹிஸ்டமின்ஸ் அதாவது ஒவ்வாமை எதிர்ப்பு மருந்து போன்றவை இம் மருந்துகளுக்கான உதாரணங்களாகும். உங்கள் மருந்தாளுனரிடம் இம் மருந்துகள் பற்றி கலந்தாலோசிக்கவும்.

உங்கள் பிள்ளைக்கு வலியிருந்தால் நீங்கள் அவனுக்கு அசெட்டமினோஃபென் (டைலெனோல் அல்லது டெம்ப்ரா போன்றவை) கொடுக்கலாம். மருந்துக்குடுவையில் அச்சிடப்பட்டிருக்கும், உங்கள் பிள்ளையின் வயதிற்கான வேளை மருந்தளவைக் கொடுக்கவும். அறுவைச் சிகிச்சைக்குப் பின்னான இரண்டு வாரங்களுக்கு ஐபியூபுரோஃபென் (மோட்ரின், அட்வில், அல்லது மைடோல்) அல்லது ASA (அஸ்பிரின்) ஐ உங்கள் பிள்ளைக்கு நீங்கள் கொடுக்கவேண்டாம். அறுவைச் சிகிச்சைக்குப் பின் இரத்தக் கசிவை அதிகரிக்கும் ஆபத்தை இந்த மருந்துகள் உங்கள் பிள்ளைக்கு ஏற்படுத்தலாம். இந்த மருந்துகளை உங்கள் பிள்ளைக்கு கொடுப்பதற்கு முன் தாதியிடமோ அல்லது மருத்துவரிடமோ கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

செயற்பாடு நடைபெற்ற அன்றே உங்கள் பிள்ளை தன் வழக்கமான செயல்களில் ஈடுபடலாம்

உங்கள் பிள்ளை நிவாரணமடைந்தது போல் உணர்ந்தால் , மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அன்றே பகல் நேர பராமரிப்பு நிலையத்துக்கோ அல்லது பாடசாலைக்கோ திரும்பலாம்.

நீச்சலடித்தல்

காதினுள் குழாய்கள் இருக்கும்போது, உங்கள் பிள்ளையை நீச்சலடிக்க அனுமதிப்பதற்குமுன் உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் கேட்கவும். மருத்துவர் அனுமதித்தால், உங்கள் பிள்ளை நீச்சலடிக்கச் செல்லலாம். ஆனால் அவன் காதுப்பசை அல்லது காது அடைப்பான் மற்றும் நீச்சல் தொப்பி அல்லது நீச்சல் வார்ப்பட்டையை அணிந்திருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். காதினுள் குழாய் இருக்கும்போது, காதுக்குள் தண்ணீர் பாய்ச்சப்படுவதைத் தடுப்பதற்காக உங்கள் பிள்ளை நீரினுள் மூழ்கி டைவ் அடிப்பதைத் தவிர்க்கவேண்டும்.

உங்கள் காது –மூக்கு- தொண்டை மருத்துவரிடம் ஒரு தொடர் சந்திப்புத் திட்டத்தை முன்பதிவு செய்யுங்கள்

உங்கள் பிள்ளை மருத்துவமனையிலிருந்து வெளியேறும் தினத்தில் அல்லது மறுநாள் காது –மூக்கு- தொண்டை மருத்துவமனையை அழைத்து உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் ஒரு தொடர் சந்திப்புத் திட்டத்தை முன்பதிவு செய்யவும்.

பெரும்பாலும், குழாய் உட்புகுத்தப்பட்டபின் 2 முதல் 4 மாதங்களில் இந்தச் சந்திப்புத் திட்டம் இருக்கும். இந்தச் சந்திப்புத்திட்டதின் பின், குழாய் வெளியே விழுந்துவிடும் வரை, 6 மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் பிள்ளை மருத்துவரைச் சந்திக்கவேண்டியிருக்கும்.

உங்கள் சந்திப்புத் திட்ட நேரம் மற்றும் திகதியைக் கீழே எழுதவும்:

 

காதுத் தொற்றுநோய்

உங்கள் பிள்ளைக்கு காதுத் தொற்றுநோய் இருக்குமென நினைத்தால். உங்கள் குடும்ப மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் பிள்ளையின் காதிலிருந்து திரவம் வடிந்தால் அவனுக்கு அன்டிபையோடிக் காது சொட்டு மருந்து தேவைப்படலாம்.

காது –மூக்கு- தொண்டை மருத்துவரை அழைக்கவேண்டிய காரணங்கள்

காது –மூக்கு- தொண்டை மருத்துவர், காது –மூக்கு- தொண்டை மருத்துவமனை அல்லது உங்கள் குடும்ப மருத்துவரைப் பின்வரும் காரணங்களுக்காக நீங்கள் அழைக்கவேண்டும்:

  • அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர், 4 நாட்களுக்கு மேலாக உங்கள் பிள்ளையின் காதில் திரவம் வடிகிறது .
  • உங்கள் பிள்ளைக்கு 38.5°C (101°F) க்கு மேல் காய்ச்சல் இருக்கிறது.
  • உங்கள் பிள்ளையின் காதுகளிலிருந்து திரவம் வடிதல் நின்றுபோனதன்பின், திரும்பவும் திரவம் வடியத் தொடங்குகிறது, அல்லது வடியும் திரவம், பச்சை நிறமானதாயும், தடிப்பானதாயும் துர்நாற்றம் வீசுவதாகவும் இருக்கிறது.
  • உங்கள் பிள்ளையின் காதில் புண் வலி உண்டாகியிருக்கிறது.

இது அவசர நிலைமையாயிருந்தால், அல்லது நீங்கள் கவலையடைந்தால், தாமதிக்க வேண்டாம். உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு உங்கள் பிள்ளையை அழைத்துச் செல்லுங்கள்.

தொடர்பு கொள்ளவேண்டிய தகவல்களைக் கீழே எழுதவும்

உங்கள் பிள்ளையின் காது –மூக்கு- தொண்டை மருத்துவர்:

தொலைபேசி எண்:

என் குடும்ப மருத்துவர்:

தொலைபேசி எண்:

காது –மூக்கு- தொண்டை மருத்துவமனையின் தொலைபேசி எண்:

முக்கிய குறிப்புகள்

  • ஒரு ஈரமான துணியினால் உங்கள் பிள்ளையின் காதைச் சுத்தம் செய்யவும். உங்கள் பிள்ளையின்
  • காதினுள் எதனையும் போடவேண்டாம்.
  • உங்கள் பிள்ளையை நீச்சலடிக்க அனுமதிப்பதற்குமுன் உங்கள் காது –மூக்கு- தொண்டை மருத்துவருடன் கலந்து பேசவும்.
  • உங்கள் பிள்ளைக்கு அன்டிபையோடிக் காது சொட்டு மருந்து தேவைப்படலாம்.
  • உங்கள் பிள்ளையின் காதில் தொற்றுநோய் ஏற்பட்டால், உங்கள் குடும்ப மருத்துவரை அல்லது காது –மூக்கு- தொண்டை மருத்துவமனையை அழைக்கவும்.
Last updated: நவம்பர் 17 2009