நித்திரை செய்வதில் பிரச்சினைகள்

Sleep problems in children [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

நித்திரை செய்வதில் பிரச்சினைகள் என்றால் என்ன?

உங்கள் பிள்ளை நித்திரை கொள்ளமுன்பு அமைதியடைவதில் சிரமப்பட்டால், நித்திரை செய்வதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இது குறுகிய நித்திரை அல்லது நித்திரை சம்பந்தமான குறுக்கீடுகள் என்பனவற்றையும் உட்படுத்தலாம். இரவில் தொடர்ச்சியான குறுக்கீடுகள், குழந்தைக்கு எரிச்சல் மற்றும் பெற்றோருக்கு சோர்வு என்பனவற்றையும் ஏற்படுத்தலாம். உங்கள் குழந்தைக்கு நித்திரை செய்வதில் பிரச்சினை இருக்கும்போது, அது முழுக்குடும்பத்துக்குமே ஒரு கஷ்டமான சமயமாக இருக்கும். சில ஆரோக்கியமான நித்திரைக்கான குறிப்புகளைக் கற்றுக்கொள்வதன்மூலம், படுக்கை நேரங்களைப் பிரச்சினகள் குறைவானதாகவும் அதிக மகிழ்ச்சியுள்ளதாகவும் வைத்துக்கொள்ள முடியும்.

ஆரோக்கியமான நித்திரைக்கான மாதிரிகள்

உங்கள் பிள்ளைக்குத் தேவையான நித்திரைக்கான சராசரி மணி நேரங்களின் எண்ணிக்கையைப்பற்றி உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஆலோசனை சொல்வார். ஆயினும், ஒவ்வொரு பிள்ளையின் நித்திரையின் மாதிரிகளும் வித்தியாசமானவை. சராசரியாக, புதிதாகப் பிறந்த குழந்தைகள் 6 மாதங்கள் வரை ஒரு நாளில் 16 மணி நேரங்கள் நித்திரை செய்வார்கள். சில குழந்தைகள் குறைவான நேரம் அதாவது,11 மணி நேரம் வரையாகவும் சில குழந்தைகள் அதிகமான நேரம், அதாவது 20 மணி நேரம் வரையாகவும் நித்திரை செய்வார்கள். சிறிது வளர்ந்த குழந்தைகள் ( 6 மாதங்கள் முதல் 1 வயது வரை) ஏறக்குறைய 14 மணி நேரம் வரை நித்திரை செய்வார்கள். நடை குழந்தைகள் 10 முதல் 13 மணி நேரம் நித்திரை செய்வார்கள். ப்ரீ ஸ்கூல் பாடசாலைக்குப் போகும் குழந்தைகள் 10 முதல் 12 மணி நேரங்கள் வரை நித்திரை செய்வார்கள்.

நித்திரை செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளின் வகைகள்

நித்திரை செய்வதற்கு முன் அமைதியடைவதில் பிரச்சினை

குழந்தைகள், நடை குழந்தைகள், மற்றும் இளம் பிள்ளைகள் நித்திரை செய்வது மிகவும் சாதாரணமானது. 3 பிள்ளைகளில் 1 பிள்ளை நித்திரை செய்வதற்கு விருப்பமின்மையைக் காண்பிக்கும்.

வெவ்வேறாகப் பிரிந்திருக்கும் பிரச்சினகள் மற்றும் சேர்ந்து படுத்திருத்தல்

அநேக குடும்பங்களில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகளுடன் சேர்ந்து, ஒரே படுக்கையில் படுப்பதைத் தெரிவு செய்கிறார்கள். கனடாக் குழந்தை மருத்துவ சங்கம் சேர்ந்து படுப்பதைச் சிபாரிசு செய்வதில்லை. சேர்ந்து படுத்திருப்பது ஒழுங்கான தாய்ப்பாலூட்டுவதைப் பேணுவதற்கு உதவி செய்வதாகச் சில பெற்றோர் சொல்கிறார்கள். ஆனால், அது பெற்றோரின் நித்திரையை குழப்பி பெற்றோரின் நெருக்கமான உறவில் அழுத்தத்தை ஏற்படுத்தும் அல்லது உங்கள் குழந்தை நித்திரை செய்வதற்கு உங்களையே சார்ந்திருக்கும் நிலை ஏற்படும். ஒரே படுக்கையில் சேர்ந்து படுப்பதற்கும் தொட்டில் மரணத்து (திடீர் குழந்தை மரணக் கூட்டறிகுறிகள்) க்கும் தொடர்பு இருக்கிறது.

இரவில் விழித்தெழுதல்

ஒரு பிள்ளை நடு இரவில் விழிந்தெழுந்து, பின்னர் திரும்பவும் நித்திரைகொள்ளாமலிருக்கும்போது ‘இரவில் விழித்தெழுதல்’ நடைபெறுகிறது. பெரும்பாலும் பிள்ளைகள் அழுவார்கள் அல்லது பெற்றோர்களை அழைப்பார்கள், அல்லது படுக்கையை விட்டு எழுந்திருப்பார்கள். இது சாதாரணமானது. அநேகமான பெற்றோர்கள் மிகுதி இரவு முழுவதும் தங்கள் படுக்கையிலேயே பிள்ளையை நித்திரை கொள்ள அனுமதிப்பார்கள். இது பிள்ளைகள் நித்திரையைத் தொடருவதற்குப் பெற்றோரில் தங்கியிருப்பதற்கு வழிநடத்தும். பிள்ளைக்கு திரும்பவும் நம்பிக்கையளித்து படுக்கைக்குத் திருப்பி அனுப்பிவிடவேண்டும். பிள்ளை படிப்படியாக தன்னைத் தானே ஆறுதல் படுத்திக்கொள்ளும் தந்திரங்களைக் கற்றுக்கொள்வான்.

பயங்கரக்கனவுகள்

பயங்கரக் கனவுகள் என்பது பயம் அல்லது கவலையைக் கொண்டுவரக்கூடிய கனவுகள். பயங்கரக் கனவுகள் மிகவும் சாதாரணமானவை. இவை 2 பிள்ளைக்கு 1 பிள்ளை என்பதைப்போல அநேகரில் சம்பவிக்கின்றன.

இரவில் பீதியுணர்வு

இரவில் பீதியுணர்வுகள் என்பன பயங்கரக் கனவுகளை விட வித்தியாசமானது. இரவில் பீதியுணர்வுகள் என்பது பிள்ளை பயத்தில் விழித்தெழுவதைக் குறிக்கிறது. பெரும்பாலும் பிள்ளை பயத்தினால் சப்தமிட்டு அலறும். பயத்துக்கான காரணம் என்ன என்பதைப் பிள்ளை பெரும்பாலும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டான்.

நித்திரையில் நடத்தல்

நித்திரையில் நடப்பது என்பது 15 சத வீதமான பிள்ளைகளில் சம்பவிக்கிறது. இது 4 க்கும் 12 க்கும் இடைப்பட்ட வயதுப் பிள்ளைகளில் மிகவும் அடிக்கடி சம்பவிக்கிறது. நித்திரையில் நடக்கும் பிள்ளைகள் வழக்கமாக வீட்டிற்குள் நோக்கமில்லாமல் நடப்பார்கள். அவர்கள் ஒருமுகப்படுத்தப்படாதவர்களாக, உணர்ச்சியற்றவர்களாக, அல்லது கழிவறையில்லாது வேறு இடங்களில் சிறுநீர் கழிக்கத்தொடங்குவார்களாக இருப்பார்கள். பிள்ளையின் அறைக் கதவில் அல்லது முன் கதவில் தொங்கவிடப்பட்டிருக்கும் மணி, உங்கள் பிள்ளை நித்திரையில் நடப்பதை நீங்கள் அறிந்துகொள்வதற்கு உங்களுக்கு உதவும்.

ஆரோக்கியமான நித்திரைப் பழக்கங்கள்

புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் இளம் பிள்ளைகள், அவர்கள் தூக்கிவைக்கப்பட்டிருக்கும்போது அல்லது தாலாட்டப்படும்போது இலகுவாக நித்திரை அடைவார்கள். ஒரு முலைக்காம்பை அல்லது ஒரு சூப்பானைச் சூப்பும்போது மிகவும் இலகுவாக நித்திரை அடைவார்கள்.

குட்டித்தூக்கம் மற்றும் படுக்கை நேரம் என்பனவற்றிற்கு ஒரு சீரான வழக்கத்தை உருவாக்கவும்

பிள்ளைகள் வழக்கமான மார்க்கத்துக்கு நன்கு பிரதிபலிப்பார்கள். ஒரு குறிப்பிட்ட சமய குட்டித்தூக்கம் மற்றும் படுக்கை நேர மார்க்கத்துக்கு உங்கள் பிள்ளை நன்கு பிரதிபலிக்கக்கூடும். நடை குழந்தைகளுக்கு குட்டித்தூக்கம் 2 மணி நேரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. அது மாலை 4 மணிக்கு முன்பாக முடிவடையவேண்டும்.

உங்கள் பிள்ளையின் படுக்கை நேரம் அவனது வயது மற்றும் சக்தியின் அளவைப் பொறுத்திருக்கும். படுக்கை நேர மார்க்கம் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

  • குளிப்பாட்டுதல்
  • பிஜாமாக்களை அணிவித்தல்
  • தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலூட்டுதல்
  • மின் விளக்குகளை மங்கச்செய்தல்
  • இரவில் கட்டித் தழுவுதல், தடவிக்கொடுத்தல், பாடுதல்
  • கதை சொல்லுதல்

அதற்குப் பின்பாக உங்கள் குழந்தையைத் தொட்டிலில் போடலாம் அல்லது இளம் பிள்ளைகளை படுக்கையில் படுக்கவைக்கலாம். நீங்கள் உங்கள் பிள்ளையை முத்தமிட்டு நல் இரவு என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறலாம். ஒரு சீரான படுக்கை நேர மார்க்கத்தைக் கடைப்பிடிப்பது உங்கள் பிள்ளை அமைதியடைவதை இலகுவாக்கும்.

வரவேற்பளிக்கக்கூடிய ஒரு நித்திரை செய்யும் சூழலை அமைக்கவும்

அறையை இருட்டானதாகவும் அமைதியானதாகவும் வைத்துக்கொள்ளவும். இரவு மின் விளக்குகள் பரிந்துரை செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக, மின் விளக்குகளை, வாசலைக் கொஞ்சம் திறந்த நிலையில், பொதுக்கூடத்தில் எரியவிடவும். இது உங்கள் பிள்ளை இருட்டுப் பயமில்லாமல் கழிப்பறைக்குச் சென்றுவர உதவும்; மற்றும் பிள்ளை இரவில் திரும்பவும் படுக்கைக்குச் செல்வதைத் தாமதப்படுத்துவதற்காகச் சூழ்ச்சிமுறைகளை உபயோக்கிக்கத் தொடங்கும்போது, அவன் படுக்கைக்கு திரும்புவதை உந்துவிப்பதற்கு கதவை மூடிவிடுவேன் என்று செல்வது உபயோகமாக இருக்கலாம்.

உங்கள் குழந்தை, தொட்டிலின் அடிப்பாகத்தில், நிமிர்ந்து படுக்கவேண்டும். அவர்களுக்கு முன்பக்கத்திலிருந்து பின்பக்கமாக உருளக்கூடிய வயது வந்ததும் அவர்களைப் பழைய நிலைக்குத் திருப்பிவிடவேண்டிய அவசியமில்லை. அங்கு குழந்தையில் சுவாசத்தை அடைத்துவிடக்கூடிய கம்பளிப் போர்வைகள் அல்லது தொட்டிற்புடைப்புகள் அல்லது மென்மையான பொருட்களை வைக்கவேண்டாம். ஒரு கம்பளிப் போர்வை தேவைப்படாதபடி, அவர்களை சூடாக வைத்துக்கொள்ளக்கூடிய ஒரு ஸ்லீப்பரை அவர்கள் அணிந்து கொள்ளவேண்டும்.

படுக்கை நேரங்களில் உங்கள் பிள்ளை தான் பிரித்துவைக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தால், ஒரு ஆதரவான உணர்வைக் கொடுப்பதற்காக, பஞ்சடைக்கப்பட்ட ஒரு மிருகம் அல்லது ஒரு கம்பளிப் போர்வையை அவனுக்குக் கொடுக்கலாம். இப்படிப்பட்ட பொருட்களைக் குழந்தைப் பருவத்தின் தொடக்கத்தில் கொடுக்கவேண்டாம். ஏனெனில் அவை தொட்டில் மரணத்துக்கான ஆபத்தை விளைவிக்கும் காரணிகலாம்.

உங்கள் குழந்தை தானாகவே நித்திரை செய்யப் பழகிக்கொள்ள வேண்டும். அவன் விழித்தெழும்பி நீங்கள் போய்விட்டதைக் கண்டு பிடித்தால், நித்திரை செய்வதற்காக அவனை அமைதிப்படுத்தும் முழுச் செயற்பாட்டையும் ஒரு இரவில் பல முறைகள் நீங்கள் செய்யவேண்டியிருக்கும்.

பொருத்தமான சமயங்களில் குழந்தை அழுவதற்குப் பிரதிபலிப்பைக் காட்டவும்

புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளின் வாழ்க்கையின் முதற் சில மாதங்களுக்கு, அவர்களின் அழுகைக்குப் பிரதிபலிப்பைக் காட்டவும். தேவைகளை வெளிக்காட்டுவதற்கான ஒரு வழி அழுவதாகும்.

7 அல்லது 8 மாதக் குழந்தைகள், நித்திரை செய்வதற்கு முன்பாக அழுவது முற்றிலும் சாதாரணமானது.

உங்கள் குழந்தை அமைதியடைவதற்கு முன்பாக அவனைச் சிறிது நேரம் அழவிடுவதில் தவறொன்றுமில்லை. ஆயினும், உங்கள் பிள்ளை நித்திரை செய்யும்போது உங்களைத் தன் பக்கமாக வைத்துக்கொள்ளும் வழக்கத்தை வளர்த்துக் கொண்டால், நீங்கள் அவனுடன் படுக்கை அறையிலிருக்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் இந்தச் சார்ந்திருக்கும் நிலையை குறைக்க முயற்சி செய்யலாம். உங்கள் பிள்ளையை தனியே விட்டு விடுவதற்கு ஒரு அணுகுமுறை, ஓரு சில நிமிடங்களுக்குத் தனியே விட்டுவிட்டு, பின் திரும்பவும் வந்து அவன் நித்திரை செய்யும்வரை அவனுடன் இருப்பதாகும். ஒவ்வொரு இரவும், கொஞ்சம் அதிக நேரம் அறைக்கு வெளியே இருக்கவும். 5 முதல் 7 நாட்களின் பின்னர் உங்கள் குழந்தை தனியே நித்திரை செய்யப் பழகிவிடுவான்.

உங்கள் பிள்ளையின் தாமதிக்கும் யுக்திகளை அடையாளம் கண்டுகொள்ளல்

உங்கள் பிள்ளை படுக்கை நேர மார்க்கத்தை விளங்கிக் கொண்டால், அவன் அந்தச் சூழ்நிலையை மாற்ற முயலக்கூடும் . நடை குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகள் குறிப்பாக, படுக்கை நேர மார்க்கத்தின் காலத்தைக் கடத்துவதில் திறமைவாய்ந்தவர்கள். அவர்கள் தண்ணீர், வேறொரு கதை, அல்லது ஒரு கட்டித்தழுவுதலைக் கேட்பார்கள். பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பளிப்பவர்கள் உடனேயே பிள்ளையைப் படுக்கைக்குத் திரும்ப அனுப்பவேண்டும். இந்த நடவடிக்கையைத் திரும்பவும் செய்தால் தண்டனைகள் கிடைக்கும் என எச்சரிக்கவும். தண்டனைகள், கதவை மூடிவிடுதல், அல்லது அடுத்த நாள் படுக்கைநேரத்தில் கதைகள் சொல்லாமலிருத்தல் என்பனவற்றை உட்படுத்தலாம்.

முக்கிய குறிப்புகள்

  • நித்திரைக்கான பிரச்சினைகள், குழந்தை எரிச்சலடைதல் மற்றும் பெற்றோர் சோர்வடைதல் என்பதில் விளைவடையும்.
  • சராசரியாக, புதிதாகப் பிறந்த குழந்தைகள் தினமும் மொத்தமாக 16 மணிநேரங்கள் நித்திரை செய்வார்கள்.
  • 3 பிள்ளைகளுள் 1 பிள்ளை படுக்கைக்குச் செல்வதில் விருப்பமின்மையைக் காண்பிக்கும்.
  • ஒரு சீரான குட்டித்தூக்கம் மற்றும் படுக்கை நேர மார்க்கத்தை ஏற்படுத்தவும்.
  • ஒரு வரவேற்பளிக்கக்கூடிய மற்றும் தகுதியான படுக்கையறையை உருவாக்கவும்.
  • உங்கள் பிள்ளை நித்திரை செய்வதற்கு முன்பாக அவளுடன் செலவுசெய்யும் நேரத்தின் அளவைப் படிபடியாகக் குறைத்துக் கொள்ளவும்.
Last updated: மார்ச் 05 2010