கீழிறங்காத ஆண்விதை

Undescended testicle [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

100 குழந்தைகளுள் 3 குழந்தைகளைப் பாதிக்கும் இந்த நிலைமைக்கான காரணங்கள், அறிகுறிகள், ,மற்றும் சிகிச்சைகள் பற்றி இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடிய ஒரு சுருக்கம்

கீழிறங்காத விதை என்றால் என்ன?

கருப்பையில் இருக்கும்போது, உங்கள் மகனின் உடலின் உட்பகுதியில் விதைகள் உருவாகிறது. அவை உடலிலிருந்து கவட்டிலுள்ள ஒரு குழாயினூடாக அசைகின்றன. பின்னர் அவை, பிறப்பதற்கு முன்பே விதைப்பைக்குள் இறங்கிவிடுகின்றன. விதைப்பை என்பது ஆணுறுப்பின் பின்பாக தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு தோற்பை.

கீழிறங்காத ஒரு விதை வயிற்றில் தங்கியிருக்கும். பிறப்புக்கு முன்பாக இந்த விதை விதைப்பைக்குள் தாழ்த்தப்படவில்லை. இது இறங்கா விதை என அழைக்கப்படும்.

குறைமாதப் பிரசவத்தில் பிறந்த ஆண்குழந்தைகள் மத்தியில் இந்த நிலைமை சாதாரணமானது. எல்லா ஆண்குழந்தைகளும், அவர்களது விதைகள் கீழிறங்கிவிட்டனவா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக பிறப்பில் பரிசோதிக்கப்படுவார்கள்.

பெரும்பாலும், விதை வாழ்க்கையின் முதற் சில மாதங்களுக்குள் தானாகவே இறங்கிவிடும். இறங்காவிட்டால், உங்கள் பிள்ளைக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.

சிகிச்சை செய்யப்படாது விடப்பட்டால், ஆண் பிள்ளை பெரியவனாக வளர்ந்ததும் கீழிறங்காத விதை, இனவிருத்தி பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

விதையினால் ஏற்படக்கூடிய வேறு வகையான பிரச்சினைகள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

  • உள்ளிளுக்கப்படக்கூடிய ஒரு விதை, விதைப்பை மற்றும் கவட்டுக்கு இடையே முன்னும் பின்னும் அசையும்.
  • மேலேறும் ஒரு விதை, கவட்டுக்குள் இழுக்கப்படும்

உங்கள் மகனுக்கு டயபர்கள் மாற்றும்போது அல்லது குளிப்பாட்டும்போது அவனது விதைகளை உங்களால் தொட்டுணர முடியும். மூன்று அல்லது நான்கு மாதங்களில் விதைகள் தானாகவே இறங்காவிட்டால், உங்கள் பிள்ளைக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.

ஆபத்துக்கான காரணிகள்

கீழிறங்காத விரைகள்விதைகளின் வழமையான கீழிறக்கப் பாதை மற்றும் கீழிறங்காத விதைகளின் பாதையும் அடிவயிறு மற்றும் விதைப்பைக்கு இடையிலான சாத்தியமான அமைவிடங்களும்
விரைகள்
பொதுவாக வயிற்றுப் பகுதியில் உருவாகி பிறப்பதற்கு முன்பாக விரைப்பையை நோக்கி நகரும்.  சில சமயங்களில் விரைகளில் ஒன்று வயிற்றின் மேற்பகுதி தொடங்கி விரைப்பையின் மேற்பகுதிவரையாக ஏதாவது ஒரு இடத்தில் தங்கிவிடும்.

கரு உருப்பெறுவதில் பிரச்சினைகள் உண்டாவதனால் கீழிறங்காத விதைகள் உருவாகின்றன. கரு உருப்பெறுவதில் பிரச்சினைகளுக்கான ஆபத்தை அதிகரிக்ககூடிய ஆபத்துக்கான காரணிகள் பின்வருமாறு:

  • குறைமாதப் பிரசவம்
  • கீழிறங்கா விதையுள்ள குடும்ப வரலாறு
  • பிறப்பில் எடை குறைந்திருத்தல்

சிக்கல்கள்

விந்தணுவை உருவாக்குவதற்கு விதைகளுக்கு, விதைப்பைப் பகுதியில் குளிர்ச்சியான உடல் வெப்பநிலை தேவைப்படுகிறது. ஆரோக்கியமான விந்தணுவை உருவாக்குவதற்கு இயலாதவாறு கீழிறங்காத விதை, அதிகளவு வெப்பமுள்ளதாக இருக்கலாம். இது இனவிருத்தி பிரச்சினையை அதிகரிக்கும்.

கீழிறங்காத விதையை உடைய உங்கள் பிள்ளைக்கு ஒரு மருத்துவர் எப்படி உதவி செய்யக்கூடும்

விதை விதைப்பைக்குள் இறங்காவிட்டால், உங்கள் மகனின் மருத்துவர், விதையை விதைப் பையினுள் கையினால் இறக்கிவிட முயற்சிப்பார். இது பலனளிக்காவிட்டால், மருத்துவர் ஒரு மருத்துவ நிபுணரிடம் உங்களை பரிந்துரை செய்வார்.

மூன்று அல்லது நான்கு மாதங்களில விதைகள் தானாகவே இறங்காவிட்டால், உங்கள் பிள்ளைக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம். உங்கள் பிள்ளை, ஒன்று அல்லது இரண்டுக்கு இடைப்பட்ட வயதிலிருக்கும் போது அறுவைச் சிகிச்சைக்காக நேரம் குறிக்கப்படும்.

மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்

கீழிறங்காத விதைகளுக்கான ஒரு நிலைமை கண்டுபிடிக்கப்படவில்லை என்று நீங்கள் நினைத்தால், உடனே ஒரு மருத்துவரைச் சந்திக்கவும். உங்கள் பிள்ளையின் கவட்டைச் சுற்றியுள்ள பகுதியைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கவலை இருந்தால் ஒரு மருத்துவரைச் சந்திக்கவும்.

முக்கிய குறிப்புகள்

  • கீழிறங்காத விதை விதைப்பைக்குள் தாழ்த்தப்படவில்லை
  • பெரும்பாலும், வாழ்க்கையின் முதற் சில மாதங்களில் நிலைமை தானாகவே சரியாகிவிடும்.
  • விதை தானாகவே இறங்காவிட்டால் அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.
  • சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இனவிருத்தி செய்வதில் அதிகரிக்கப்பட்ட ஆபத்து இருக்கிறது.
Last updated: மார்ச் 05 2010