"கரைத்தல் மற்றும் வேளைமருந்து"க் கொள்கலன்களின் உபயோகம்

Use of dissolve and dose containers [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

மருந்தைத் தண்ணீரில் கரைப்பதற்கு, ஒரு கரைத்தல் மற்றும் வேளைமருந்துக் கொள்கலனை எப்படி உபயோகிப்பது மற்றும் அதை உங்கள் பிள்ளைக்கு எப்படிக் கொடுப்பது என்பது பற்றி இந்தத் தகவல் விபரிக்கிறது

 1. மாத்திரையை(களை) கரைத்தல் மற்றும் வேளைமருந்துக் கொள்கலனில் வைக்கவும்.
  *நீங்கள் _______ இன் ________மாத்திரையை(களை) உபயோகிக்கவேண்டும்.
 2. கொள்கலனில் இருக்கும் கறுப்புக் கோடு வரை தண்ணீர் சேர்க்கவும்.
  *உங்கள் கரைத்தல் மற்றும் வேளைமருந்துக் கொள்கலனில், கோடு _____ மிலி ஐக் குறிக்கும். நீல நிற மூடியால் மூடவும்.
 3. கையுறை அணிந்த கை மூடப்பட்டிருக்கும் திரவம் உள்ள மருந்தளவு கரைக்கும் கருவியைக் குலுக்குகிறது
 4. மாத்திரையை 5 நிமிடங்கள் வரை கரைய விடவும். இந்தச் சமயத்தில் கொள்கலனை ஒரு சில முறைகள் குலுக்கவும்.
 5. கொள்கலனில் மாத்திரையின் துகள்கள் எதுவும் மீந்திருக்கவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவும். துகள்கள் ஏதாவது தென்பட்டால், அவை மறையும் வரை தொடர்ந்து குலுக்கவும். மென்மையான தூள்கள் தண்ணீரில் மிதந்துகொண்டிருக்கும். இது தான் நிலைமை எனில், நீங்கள் இப்போது மருந்தைக் கொடுக்கலாம்.
 6. உட்செலுத்தியின் கைப்பிடியை இழுப்பதைக் காட்டும் கீழ்நோக்கிய அம்புக்குறி உள்ள மருந்தளவு கரைக்கும் கருவிக்கு உட்செலுத்தி இணைக்கப்பட்டுள்ளது
 7. கொள்கலனை நன்கு குலுக்கவும். கீழே அறிவுறுத்தப்பட்டபடி, கொடுக்கப்பட்ட வாய்மூலமான பீச்சாங்குழாயை (ஓரல் ஸ்ரிஞ்) உபயோகித்துத் திரவத்தை கறுப்புக் கோடு வரை இழுக்கவும்.
  *பீச்சாங்குழாயில் ________ மிலி வரை அளக்கவேண்டும். இந்த அளவு மருந்தைக் கொடுக்கவும்.
 8. கொள்கலனில் எஞ்சியிருக்கும் ஏதாவது திரவத்தை எறிந்துவிடவும். ஒவ்வொரு வேளைமருந்தும் புதிதாகத் தயாரிக்கப்படவேண்டும் மற்றும் அவை சேமித்து வைக்கப்படக்கூடாது. "கரைத்தல் மற்றும் வேளைமருந்துக் கொள்கலனை" இளஞ் சூடான சோப்புத் தண்ணீரினால் கழுவிக் காற்றில் உலரவிடவும்.

எல்லா மருந்துகளையும் உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு வைக்கவும்.

உங்கள் பிள்ளை ஏதாவது மருந்தை அளவுக்கதிகமாக உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:

 • நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
 • நீங்கள் ஒன்டாரியோவில் வெறெங்கேயாவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
 • நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.

பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது "கரைத்தல் மற்றும் வேளைமருந்து" பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. "கரைத்தல் மற்றும் வேளைமருந்து" பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.

Last updated: மார்ச் 11 2010