இதய முடுக்கி (பேஸ்மேக்கர்): வீட்டில் உங்கள் பிள்ளையைப் பராமரித்தல்

Pacemaker: Caring for your child at home [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

ஒரு இதய முடுக்கி என்பது, உங்கள் பிள்ளையின் இதயத் துடிப்பின் வேகம் மற்றும் சீரைக் கட்டுப்படுத்த மின் தூண்டுதலை உபயோகிக்கும் ஒரு சிறிய உபகரணம் ஆகும்.

இதயமுடுக்கி (பேஸ்மேக்கர்) என்றால் என்ன?

இதய முடுக்கி என்பது உங்கள் பிள்ளையின் இதயத் துடிப்பின் வேகத்தையும் சீரையும் கட்டுப்படுத்துவதற்காக, மின்சார தூண்டுதலை உபயோகிக்கும் ஒரு சிறிய கருவியாகும்.

சாதாரண இதயம் எப்படி வேலை செய்கிறது?

இதயம் என்பது உங்கள் உடலினூடாக இரத்தத்தை இறைக்கும் ஒரு பம்பு ஆகும். வழக்கமாக, இதயத்தின் சொந்த மின்சாரத் தொகுதியினால் இதயத் துடிப்பின் வேகமும் சீரும் கட்டுப்படுத்தப்படுகிறது. இதயத்தின் மேற்பகுதி, சைனஸ் நோடு எனப்படும் தன் சொந்த இதய முடுக்கியைக் கொண்டிருக்கிறது. மின்சாரத் தூண்டுதல்கள் சைனஸ் நொடில் ஆரம்பித்து ஏற்றியா (மேலறைகள்), ஊடாகப் பாய்ந்து அவற்றைச் சுருங்கச் செய்கிறது. மின்சாரத் தூண்டுதல்கள் மேலறைகள், கீழறைகளைத் தொடுக்கும் இடத்தை அடைகின்றன.

இந்த இடம் AV நோடு என்றழைக்கப்படும். AV நோடு தூண்டுதல்களை தசைகளினூடாக கீழறைகளுக்கு அனுப்பி அவற்றைச் சுருங்கச் செய்கிறது. கீழறைகள் சுருங்கும்போது அவை இதயத்திலிருந்து உடலின் மற்றப் பாகங்களுக்கு இரத்தத்தை இறைக்கிறது.

எனது பிள்ளையின் இதயம் சாதாரணமாக வேலை செய்வதற்கு ஏன் அதற்கு இதயமுடுக்கி தேவைப்படுகிறது?

ஒரு பிள்ளைக்கு இதய முடுக்கி தேவைப்படுவதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன. இதய அடைப்பு மற்றும் இரத்த நாளங்களில் நோய்களின் கூட்டறிகுறிகள் ( சிக் சைனஸ் சின்றம்) என்பன முக்கியமான இரு காரணங்கள் ஆகும்.

 • இதய அடைப்பு: இதய அடைப்புடன், AVநோடில் அடைப்பு ஏற்படுவதால் இதய மேலறையிலிருந்து கீழ் அறைகளுக்கு மின்சாரத் தூண்டுதல்கள் சாதாரணமாகக் கடத்தப்படமாட்டாது. இந்த அடைப்பு பிள்ளை பிறப்பதற்கு முன்பே இருந்திருக்கலாம் (பிறப்பிலமைந்த இதய அடைப்பு) அல்லது ஒரு இதயக் குறைபாட்டினை சரி செய்யும் அறுவைச் சிகிச்சையினால் விளைவடைந்ததாக இருக்கலாம். பெற்றுக்கொள்ளப்பட்ட இதய அடைப்பு இதயத் தொற்றுநோயினால் ( இதய உட்சவ்வு அழற்சி அல்லது இதயத் தசை அழற்சி) விளைவடைந்ததாயிருக்கலாம் அல்லது குறிப்பிட்ட சில மருந்துகளினால் ஏற்பட்டிருக்கலாம்.
 • இரத்த நாளங்களில் நோய்களின் கூட்டறிகுறிகள்: இந்த நோயில் சைனஸ் முடிச்சு சரிவர வேலை செய்யாது. இதன் விளைவாக இதயத் துடிப்பு மிகவும் மெதுவானதாக அல்லது அதிக விரைவானதாக இருக்கும்.
இதயமுடுக்கிசெயல்பாடு உணரி, மின்கலம், சுற்றோட்டத்துக்குத் தேவையானவை, இதயமுடுக்கித் தூண்டி
இதயமுடுக்கி அதாவது பேஸ்மேக்கர் சிறியது மற்றும் பாரமற்றது.  பிள்ளையின் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்த தோலுக்கும் தசைக்கும் அடியில் வைக்கப்படும்.

இதய முடுக்கி எப்படி வேலை செய்கிறது?

இதய முடுக்கிக்கு இரு பகுதிகள் இருக்கின்றன: இதய முடுக்கி தாமே மற்றும் நடத்தி (மின் கம்பி)

 1. இதய முடுக்கி: இது மின்கலம் மற்றும் மின் சுற்றைக் கொண்டிருக்கும் ஒரு சிறிய கொள்கலன் ஆகும். இது மிகவும் சிறியது, 2 அவுன்சிலும் குறைவான எடையுள்ளது. இது தோள்ப்பட்டை அல்லது வயிற்றுப் பகுதிக்கு அருகில் தோல் அல்லது தசைக்கு அடியில் வைக்கப்படும். இதய முடுக்கி இதயத்தின் இயற்கையான மின் நடவடிக்கைகளை அவதானித்திருக்கும். தேவைப்படும்போது மாத்திரம் இதயத் துடிப்பை ஏற்படுத்துவதற்காக மின் தூண்டுதல்களை அனுப்பும்.
 2. நடத்திகள்: இதய முடுக்கியிலிருந்து மின் தூண்டுதல்கள், உங்கள் பிள்ளையின் இதயத்துடன் தொடுக்கப்பட்டிருக்கும் நடத்திகள் எனப்படும் உலோக முனைகளைக்கொண்ட, மின்தடை இடப்பட்ட கம்பிகளினூடாகச் செல்லும். இதய முடுக்கியின் வகையைப் பொறுத்து, நடத்திகள் இதயத்தில் மேலறை, அல்லது கீழறை, அல்லது இரண்டிலுமே பொருத்தப்பட்டிருக்கும்.

எந்த வகையான இதய முடுக்கிகள் கிடைக்கக் கூடியனவாயிருக்கின்றன?

இதய முடுக்கிகள் பல வித்தியாசமான உற்பத்தி முறைகள் மற்றும் வித்தியாசமான மாதிரிகளில் கிடைக்கின்றன. உங்கள் பிள்ளைக்கு எந்த வகையான இதய முடுக்கி தேவை என்பதை உங்கள் பிள்ளையின் மருத்துவர் தீர்மானிப்பார். மேலதிக தகவல்களுக்கு நீங்கள் உங்கள் மருத்துவர் அல்லது இதய முடுக்கி மருத்துவ நிலையப் பணியாளரிடம் கேட்கலாம்.

நரம்பு மாற்றல் மற்றும் இதய வெளியுறை இதய முடுக்கி தொகுதிகள்

பிள்ளைகளில், இதய முடுக்கிகள் பின்வரும் இரண்டு வழிகளுள் ஒன்றின் மூலம் வைக்கப்படலாம்:

 • இதய நடத்தியை இதயத்தின் மேற்பரப்பின் உட்பகுதியில் பொருத்தி, இதய முடுக்கி தோள்பட்டைப் பரப்பில் வைக்கலாம். இது நரம்பு மாற்றப் இதய முடுக்கி ஒழுங்கமைப்பு என அழைக்கப்படும்.
 • இதய நடத்தியை இதயத்தின் மேற்பரப்பின் வெளிப்பகுதியில் பொருத்தி, இதய முடுக்கியை அடிவயிற்றில் வைக்கலாம். இது இதய வெளியுறை இதய முடுக்கி ஒழுங்கமைப்பு என அழைக்கப்படும்.
இதய முடுக்கி வகைகள்நாளத்தின் ஊடாக இதயத்துக்குச் செல்லும் இதயமுடுக்கி (Transvenous pacemaker) மற்றும் இதயத்தின் வெளியே இணைக்கப்பட்டிருக்கும் இதயமுடுக்கி (epicardial pacemaker)
நரம்பு மாற்ற இதய முடுக்கி ஈயமானது நரம்பினூடாக இதயத்தின் சரியான பகுதிக்கு செலுத்தப்படுகிறது. இதய வெளியுறை இதய முடுக்கி ஈயமானது இதயத்தின் வெளிப்புறத் தசையில் பொருத்தப்படுகிறது.

ஒற்றை அறைக்கு மாறான இரண்டை அறை இதய முடுக்கி

ஒரு ஒற்றை அறை இதய முடுக்கி ஒழுங்கமைப்பு ஒரு இதய நடத்தியைக் கொண்டிருக்கும் இது இதயத்தின் மேலறை அல்லது கீழறையில் வைக்கப்பட்டிருக்கும். இரட்டை அறை இதய முடுக்கி 2 இதய நடத்திகளைக் கொண்டிருக்கும். ஒரு இதய முடுக்கி இதயத்தின் மேலறையிலும் மற்ற இதய முடுக்கி கீழறையிலும் வைக்கப்பட்டிருக்கும்.

ஒற்றை மற்றும் இரட்டை அறையுள்ள இதயமுடுக்கிகள்ஒரு அறை இதயமுடுக்கி ஒன்று நாளம் ஒன்றினூடாக இதயத்துக்குச் செல்லும் இரு அறை இதயமுடுக்கி ஒன்றுடன் ஒப்பிடப்படுகிறது.
இதயமுடுக்கிகளில் 1 அல்லது 2 ஈயங்கள் இருக்கலாம்.  ஒற்றை அறை இதயமுடுக்கியில் பொதுவாக இருதயத்தின் கீழறையில் 1 ஈயம் இருக்கும்.  இரட்டை அறை இதயமுடுக்கியில் மேலறையில் 1 ஈயமும் கீழறையில் 1 ஈயமும் இருக்கும்.

வேகத்தைப் பிரதிபலிக்கும் இதய முடுக்கிகள்

நோயாளியின் நடவடிக்கையின் அளவுக்குத் தக்கவாறு இதய முடுக்கியால் இதயத் துடிப்பு வேகத்தை சரி செய்ய முடியும். உதாரணமாக, பெரும்பாலான இதய முடுக்கிகளில், நடத்தல் அல்லது ஓடுதல் போன்ற, நோயாளியின் உடல் அசைவுகளைக் ஆராய்ந்து கண்டுபிடித்து, அவரின் நடவடிக்கைக்குத் தகுந்தவாறு இதயத் துடிப்பின் வேகத்தை அதிகரிக்கக்கூடிய உணர் கருவைகள் உட்பொருத்தப்பட்டுள்ளன.

உங்கள் பிள்ளை அதிக வீரியமுள்ள மின் அல்லது காந்தப் புலங்களைத் தவிர்க்கவேண்டும்

இதய நடவடிக்கைகளை உணரும் இதய முடுக்கியின் திறமையை வீரியமுள்ள காந்தப் புலங்கள் குறுக்கிடும். இது சம்பவிக்கும்போது, இதய முடுக்கி ஒரு குறிப்பிட்ட வேகத்தில் மாத்திரமே இதயத்துடிப்பின் வேகத்தை வெளியே அனுப்பும். இது தானாகவே செயற்பாட்டை நிறுத்தாது. உங்கள் பிள்ளை எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கைகள் பின்வருமாறு:

 • உங்கள் பிள்ளை ஒன்ராரியோ சயன்ஸ் சென்டரிலுள்ள, ஹைட்ரோ எக்ஸிபிட்டைப் பார்க்கச் செல்வதானால், அவன் கயிற்றுக்குப் பின்னால் நிற்கவேண்டும். ஏனென்றால், அதிக வீரியமுள்ள காந்தம் இதய முடுக்கி வேலை செய்வதைத் தடை செய்யலாம்.
 • உங்கள் பிள்ளைக்கு பாடசாலையில் கைத்தொழிற்கலை வகுப்புகள் இருந்தால் அல்லது இயந்திரவியல் சம்பந்தப்பட்ட பொழுது போக்குகள் இருந்தால் உலோகத் துண்டு இணைப்புகளுடன் அல்லது மின் மாற்றிகளுடன் வேலை செய்யக்கூடாது.
 • மருத்துவரின் அலுவலகம் அல்லது அறுவைச் சிகிச்சை அறையிலுள்ள மின் உபகரணங்களுடன் சம்பந்தப்பட்ட ஏதாவது செய்கைகள் இதய முடுக்கி செயல்படுவதை தடைசெய்யும் அல்லது அதன் அமைப்பை மாற்றி விடும். அதற்கு ஒரு உதாரணம், திசுக்களை எரிப்பதற்காக மின்சாரத்தை உபயோகிக்கும் மின் தீய்ப்பான் ஆகும்.
 • காந்த அதிர்வலை வரைவு (MRI), அதாவது உடன் நலப் பராமரிப்பு வசதிகளுக்காகச் செய்யப்படும் ஒரு செயற்பாடு, இதய முடுக்கி வைக்கப்பட்டுள்ள எவருக்கும் செய்யப்படக்கூடாது.
 • காந்த ஆபரணங்கள், பெரிய காந்ததைக் கொண்டிருக்கும் விளையாட்டுப் பொருட்கள், மற்றும் சில ஹெட்ஃபோன்கள் போன்ற காந்தத்தைக் கொண்டிருக்கும் பொருட்கள் இதய முடுக்கியிலிருந்து குறைந்தது 6 அங்குல தூரத்திலாவது வைக்கப்படவேண்டும்.
 • சாதாரணமாக, மின்னணுக் கருவிகள், குறிப்பாக மின் சமிக்ஞைகளைக் கடத்தும் அன்டெனா, இதய முடுக்கிக்கு, குறைந்தது 6 அங்குல தூரத்திலாவது வைக்கப்படவேண்டும். ஒரு உதாரணம் கைபேசி ஆகும்.
 • உங்கள் பிள்ளை திருட்டைக் கண்டுபிடிக்கும் கருவியினூடாக சாதாரணமாக நடக்கவேண்டும். கதவுகளுக்கிடையே தயங்கி நிற்கக் கூடாது. இதய முடுக்கி, எச்சரிக்கை மணியை செயற்பட வைக்கலாம். ஆனால் அதனால் பாதிக்கப்படக்கூடாது.

நுண்ணலை அடுப்பு உங்கள் பிள்ளையின் இதய முடுக்கியின் செயற்பாட்டில் குறுக்கிடாது.

செயற்பாடு

இதய முடுக்கி வைக்கப்பட்ட பெரும்பாலான பிள்ளைகள் சாதாரணமாக விளையாடலாம் மற்றும் வேலை செய்யலாம். ஆனால் சில முன்னெச்சரிக்கைகள் இருக்கின்றன. கராத்தே மற்றும் கிக்பொக்ஸிங் போன்ற இதய முடுக்கியில் திரும்பத்திரும்ப, நேரடியாகத் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய போட்டி விளையாட்டுக்களைத் தவிர்க்கவேண்டும். திரும்பத் திரும்ப தாக்குவது இதய நடத்திகளை பலவீனப்படுத்தும் அல்லது சேதப்படுத்தும். இதய முடுக்கி மருத்துவப் பிரிவுப் பணியாட்கள் இந்த முன்னெச்சரிக்கைகள் பற்றி உங்களுடனும் உங்கள் பிள்ளையுடனும் கலந்து பேசுவார்கள்.

ஏதாவது கேள்விகள் அல்லது குறிப்புகள் எழுதுவதற்கு இந்த இடைவெளியை உபயோகிக்கவும்:

 

 

உங்கள் பிள்ளையின் இதயநோய் மருத்துவர் அவனுடைய அடிப்படையான இதய நிலை சம்பந்தமாக ஏதாவது செயற் கட்டுப்பாடுகள் இருக்கிறதா என உங்களுடன் கலந்து பேசுவார்.

இதய முடுக்கி எவ்வளவு அடிக்கடி மாற்றப்படவேண்டும்?

இதயமுடுக்கி மின்கலம் நம்பத்தகுந்தது. அதன் திறன் மிகவும் படிப்படியாகக் குறையும். ஒவ்வொரு இதய முடுக்கி மருத்துவமனைச் சந்திப்பின்போதும் மின்கலம் பற்றிய தகவல் கிடைக்கும். மின்கலத்தின் மாற்றப்படவேண்டிய திறன் அளவை எட்டும்போது இதய முடுக்கி மாற்றப்படும். இந்த அளவு மட்டத்திலும் இதய முடுக்கி 2 முதல் 3 மாதங்களுக்கு நன்றாகத் தொடர்ந்து வேலை செய்யும். இது மருத்துவர்களுக்கு அறுவைச் சிகிச்சையை சமயத்தைத் தேர்ந்தெடுக்க காலத்தை அனுமதிக்கும்.

சாதாரணமாக, ஒரு இதய முடுக்கி எவ்வளவு அடிக்கடி உபயோகிக்கப்படுகிறது மற்றும் இதயத்துக்காக எவ்வளவு சத்தி உபயோகிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து 5 முதல் 8 வருடங்கள் வரை நீடித்து உழைக்கலாம். இதய நடத்தி மின்கம்பி(கள்) அல்லது இதய முடுக்கி ஒழுங்கமைப்பில் ஏதாவது பிரச்சினைகள் உண்டானால் விரைவில் அறுவைச் சிகிச்சை செய்யப்படவேண்டும். இதய முடுக்கி மாற்றீடு செய்வதற்காக உங்கள் பிள்ளை மருத்துவமனையில் 2 நாட்கள் வரை அனுமதிக்கப்படவேண்டியிருக்கலாம்.

இதய முடுக்கி மருந்துவமனையில் என்ன சம்பவிக்கிறது?

மருத்துவமனைப் பணியாளர்கள் ஒரு சிறிய கணனியை உபயோகித்து உங்கள் பிள்ளையின் இதய முடுக்கியை சோதித்துப் பார்க்கலாம். இதயத் துடிப்பு வேகம், போன்ற இதய முடுக்கியின் அமைப்பை இந்தக் கணனியை உபயோகித்து மாற்றலாம். இந்தச் செயற்பாட்டின்போது உங்கள் பிள்ளை எந்த அசௌகரியத்தையோ அல்லது வலியையோ உணரமாட்டான்.

இதய நடத்தியில் பிரச்சினை இருக்கிறது என இதய நோய் மருத்துவர் நினைத்தால் மார்பு ஊடுகதிர்ப் படம் எடுக்கப்படலாம். இதய நடத்தியின் நிலைமை மற்றும் நீளத்தைச் சரிபார்ப்பதற்காகவும் வருடத்துக்கு ஒரு முறை ஊடுகதிர்ப்படம் எடுக்கப்படும்.

மேலதிகமாக, வருடத்துக்கு ஒரு முறை ஒரு ஹோல்டர் மொனிற்றர் உபயோகிக்கப்படும். இது இதய நோய் மருத்துவர் இதய முடுக்கியின் செயற்பாட்டை சோதித்துப் பார்க்க அனுமதிக்கும்.

மருத்துவ சந்திப்புத் திட்டங்கள்

எல்லா மருத்துவ சந்திப்புத் திட்டங்களுக்கும் இதய முடுக்கி மருத்துவமனை (பெரும்பாலும் 6 மாதங்களுக்கு ஒரு முறை) மற்றும் உங்கள் பிள்ளையின் இதய நோய் மருத்துவர் அலுவலத்தில் ஆஜராகவும். ஒழுங்கான மருத்துவமனைச் சந்திப்புத் திட்டம் மிகவும் முக்கியமானது.

மின்கலத்தின் திறன் கீழிறங்கத் தொடங்கும்போது, தொலைபேசி டிரான்மிட்டர் கருவி என்றழைக்கப்படும் ஒரு கண்காணிக்கும் கருவியை உபயோகித்து சில சந்திப்புத் திட்டங்கள் செய்யப்படுகின்றன. இந்த வழிமுறை உபயோகமானதாக இருக்கும், ஆனால் ஒழுங்கான மருத்துவமனைச் சந்திப்புக்கு மாற்றீடாகாது.

உங்களுக்குக் கேள்விகள் இருந்தால் யாரை அழைக்கவேண்டும்

உங்கள் பிள்ளையைப் பற்றி உங்களுக்கு கவலைகள் இருந்தால், தயவு செய்து மருத்துவ கவனிப்பை நாடவும். உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது குழந்தை மருத்துவர், அல்லது தேவைப்பட்டால் 911 ஐ அழைக்கவும். இதய முடுக்கி பற்றி எதாவது தனிப்பட்ட கேள்விகள் இருந்தால் இதய முடுக்கி மருத்துவமனைப் பணியாளர்களையும் நீங்கள் அழைக்கலாம்.

முக்கிய குறிப்புகள்

 • ஒரு இதய முடுக்கி என்பது, உங்கள் பிள்ளையின் இதயத் துடிப்பின் வேகம் மற்றும் சீரைக் கட்டுப்படுத்த மின் தூண்டுதலை உபயோகிக்கும் ஒரு சிறிய உபகரணம் ஆகும்
 • உங்கள் பிள்ளை வீரியமுள்ள மின் மற்றும் காந்தப் புலங்களைத் தவிர்க்கவேண்டும். ஏனென்றால் இவை இதய முடுக்கியின் செயற்பாட்டில் தலையிடும்.
 • இதய முடுக்கி இருக்கும் பகுதியில் திரும்பத் திரும்ப அடிக்கக்கூடிய ஆபத்துள்ள போட்டி விளையாட்டுகளை உங்கள் பிள்ளை விளையாடக்கூடாது.
 • இதய நோய் மருத்துவர் மற்றும் இதய முடுக்கி மருத்துவமனை இரண்டிலும் ஒழுங்கான மருத்துவ சந்திப்புத் திட்டம் வைத்திருப்பது முக்கியம்.
 • உங்கள் பிள்ளையைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டால், தயவு செய்து மருத்துவ கவனிப்பை நாடவும். இதய முடுக்கி பற்றி உங்களுக்கு கேளவிகள் இருந்தால், தயவு செய்து இதய முடுக்கி மருத்துவமனை பணியாளர்களை அழைக்கவும்.
Last updated: December 17 2010