காய்ச்சல்

Fever in babies and children [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பிள்ளையின் அதிக காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் பற்றியும்.

அவ்வபோது நாளொன்றின்போது சற்று வேறுபட்டாலும், சராசரியாக, சாதாரன உடல் வெப்பநிலை 37°C (98.6°F) ஆகும். உங்கள் பிள்ளையின் வெப்பநிலை சாதாரணத்தைவிட அதிகமாக இருந்தால் உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல் இருக்கின்றது.

வழக்கமாக, காய்ச்சலானது உடல் ஒரு தொற்றுநோயோடு போரிடுவதற்கான அறிகுறியாகும். ஒரு கிருமியால் உடலின் நோயெதிர்ப்புத் தொகுதி செயற்படுவதற்கு முடுக்கப்பட்டதும், உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றது. காய்ச்சல் இந்த மாற்றங்களில் ஒரு அடையாளமாகும். காய்ச்சலைப் பொறுத்தவரையில் அது ஒரு நோயோ வருத்தமோ அல்ல.

உடல் வெப்பநிலையை அளத்தல்

காய்ச்சலிருக்கும்போது பிள்ளைகளைத் தொட்டுப்பார்த்தால் அநேகமாக சூடாக இருப்பார்கள். உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல் இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்துவதற்கு ஒரு தேமோமீற்றரை அதாவது வெப்ப மானியை உபயோகித்து உங்கள் பிள்ளையின் உடல் வெப்பநிலையை அளவுங்கள்.

 • குழந்தையின் குதத்தினுள் வெப்பமானி உட்செலுத்திய நிலையில் மடிக்குக் குறுக்கே அவர் குப்புறப் படுத்திருத்தல்

  ஒரு குழந்தையில் வெப்பத்தை மிகத் துல்லியமாக அளப்பதற்கு தேமோமீட்டரை குதத்திற்குள் உள்நுழைப்பதாகும் (ரெக்டல் டெம்பிரேச்சர் அதாவது குத வெப்பம்). குத வெப்பம் 38°C (100.4°F) கும் அதிகமாக இருந்தால் காய்ச்சல் இருக்கின்றதென அர்த்தமாகும்.

 • சிறுமியின் வாயில் வெப்பநிலை எடுக்கப்படும்போது அவர் போர்வை ஒன்றின் கீழ் படுத்திருத்தல்

  வளர்ந்த பிள்ளைகளில், வாய் வழியாக வெப்பத்தை அளவிடலாம் (ஓரள் டெம்பிரேச்சர் அதாவது வாய் வெப்பம்) வாய் வெப்பம் 37.5°C (99.5°F) கும் அதிகமாக இருந்தால் காய்ச்சல் இருக்கின்றதென அர்த்தமாகும்.

வேறு வழிகளில் வெப்பத்தை அளப்பது சில வேளைகளில் உபயோகமாக இருக்கலாம், ஆனால் அளவில் துல்லியம் குறைவாகவே இருக்கும். அவை உட்படுத்துபவையாவன:

 • குழந்தையின் அக்குளில் வெப்பமானி ஒன்று வைக்கப்பட்ட நிலையில் அவர் நிமிர்ந்து படுத்திருத்தல்

  ஒரு வெப்பமானியை கமக்கட்டில் உபயோகிப்பது (ஆக்சிலரி டெம்பிரேச்சர் அதாவது துணை வெப்பம்); வெப்பம் 37.2°C (99.0°F) கும் அதிகமாக இருந்தால் காய்ச்சல் இருக்கின்றதென் அர்த்தமாகும்.

 • ஒரு கையால் காதினை மேலே இழுத்துக்கொண்டு, மற்றக் கையால் வெப்பமானி ஒன்றை அந்தக் காதினுள் வைப்பதன் மூலம் சிறுவனின் வெப்பநிலையைக் காதில் எடுத்தல்

  காது வெப்பமானியை உபயோகிப்பது (டிம்பானிக் டெம்பிரேச்சர்); வெப்பம் 38°C (100.4°F) கும் அதிகமாக இருந்தால் காய்ச்சல் இருக்கின்றதென அர்த்தமாகும்.


காய்ச்சலுக்கான காரணங்கள் யாவை?

பல் வேறுபட்ட கிருமித்தொற்றுகள் காய்ச்சலுக்குக் காரணமாகலாம். உங்கள் பிள்ளைக்கு காய்ச்சலை ஏற்படுத்தியதன் காரணத்தை அறிய மருத்துவர் காய்ச்சலை அல்ல, வேறு அடையாளங்களையும் அறிகுறிகளையுமே பார்ப்பார். ஒரு நோய்த்தொற்று கடுமையானதா கடுமையற்றாதா அல்லது ஒரு நோய்த்தொற்று பக்டீரியாவினால் அல்லது வைரஸினால் ஏற்பட்டதா என்பதை முடிவுசெய்ய மருத்துவருக்கு காய்ச்சல் எவ்வளவு அதிகமாக இருக்கின்றது என்பது உதவி செய்யாது.

வேறு நிலைகளும் காய்ச்சலுக்குக் காரணமாகலாம்:

 • உடற்பயிற்சி அல்லது மிக அதிக உடை அணிவது, சூடான நீரில் குளித்த அல்லது முழுகியபின் அல்லது சூடான காலநிலையின்போது வெப்பநிலை கொஞ்சம் அதிகரிக்கக்கூடும்.
 • ஹீட் ஸ்ட்ரோக் அதாவது வெப்ப அதிர்ச்சி அல்லது சில மருந்துகளின் பாவனை என்பன ஒரு கடுமையான மற்றும் ஆபத்தாக இருக்கக்கூடிய அளவு உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்வது, அரிதாகவே நடைபெறும்.
 • தடுப்புமருந்தேற்றுதல் காய்ச்சலை ஏற்படுத்தலாம்.
 • சில தொற்றும் தன்மையில்லா நோய்களும் வேறு சில தீராத நோய்களும் திருப்பித் திருப்பி வரும் அல்லது விடாத காய்ச்சல்களை ஏற்படுத்தலாம்.

பலர் பல் முளைப்பது காய்ச்சலை ஏற்படுத்தலாம் என நம்புகின்றார்கள். கிடைக்க்க்கூடிய வெளியிடப்பட்ட ஆதாரங்கள், பல் முளைப்பது காய்ச்சலை ஏற்படுத்தாது அல்லது மிகக்குறைந்த அளவு காய்ச்சலோடு சம்பந்தப்பட்டிருக்காலாம் என கூறுகின்றன. பல் முளைத்தல் உறுதியாகவே கடும் காய்ச்சலை ஏற்படுத்துவதில்லை.

உங்கள் பிள்ளையின் மருத்துவர் பிள்ளையின் காய்ச்சலுக்கு எது காரணமாக இருக்காலாம் என்று தான் நினைப்பதாகக் கூறினால் அதை இங்கே எழுதவும்:

உங்கள் பிள்ளைக்கு காய்ச்சலிருக்கும்போது எதை எதிர்பார்க்கலாம்

காய்ச்சலால் பிள்ளைகள் அசெளகரியமாக உணர்வார்கள். பொதுவாக, இந்த அறிகுறிகள் கடுமையற்றவையாகும் மற்றும் பிள்ளை சற்று எரிச்சல் குணமுள்ளதாக அல்லது வலியையும் வேதனையையும் கொண்டதாக இருக்கும். சில பிள்ளைகள் சுறுசுறுப்புக் குறைந்தவர்களாக மற்றும் நித்திரைக்குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். உடல் வெப்பநிலை மாறுவதால், சில காய்ச்சல்கள் நடுக்கத்துடன் (குளிர் அல்லது விறைப்பு) தொடர்புடையதாக இருக்கும். உடல் வெப்பநிலையை சீராக்குவதற்கு இந்த வகையான நடுக்கம், உடலால் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியாகும். இது ஒரு திடீர் வலிப்போ அல்லது வலிப்போ அல்ல, மற்றும் இது பிள்ளையின் சுய நினைவின் அளவு மாறுவதோடு தொடர்புடையதல்ல. 6 மாதத்துக்கும் 6 வயதுக்கும் இடைப்பட்ட, சுமார் 5% ஆன பிள்ளைகளில் சீசர் அல்லது கென்வல்ஷன் (அதாவது வலிப்புகள்) எனப்படும், காய்ச்சலோடு தொடர்புடைய குளிரால் நடுங்கும் நிகழ்வுகள் தோன்றக்கூடும். இவை ஃபெப்ரைல் சீசர் (பிள்ளைக் காய்ச்சல் திடீர் வலிப்பு) அல்லது ஃபெப்ரைல் கன்வல்ஷன் (பிள்ளைக் காய்ச்சல் வலிப்பு) என அழைக்கப்படுகின்றன. பொதுவான பிள்ளைக்காய்ச்சல் வலிப்பொன்றின்பின், ஒரு மருத்துவரை பிள்ளை பார்க்க வேண்டும், ஆனால் பொதுவாக பிள்ளைக் காய்ச்சல் வலிப்புகள் ஆபத்தானவையல்ல. பொதுவாக வரும் பிள்ளைக்காய்ச்சல் வலிப்புகள் மூளையில் சேதத்தை ஏற்படுத்துவதில்லை.

மேலதிக தகவலுக்கு, பிள்ளைக் காய்ச்சல் வலிப்புகள் ஐ தயவுசெய்து பார்க்கவும்.

காய்ச்சல் எத்தனை தடவை மீண்டும் வரும் என்பதும், எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதும் காய்ச்சலைத் தோற்றுவித்த தொற்றுநோயில்தான் தங்கியிருக்கின்றது. வைரஸால் வரும் அநேக காய்ச்சல்கள் 2 இலிருந்து 3 நாட்களுக்கு நீடிக்கும், ஆனால் சிலவேளைகளில் அவை 3 வாரங்கள்வரைகூட நீடிக்கலாம். பக்டீரியா கிருமித்தொற்றால் ஏற்படுத்தப்படும் காய்ச்சல், பிள்ளைக்கு ஒரு அன்டிபையோடிக் மருந்தால் சிகிச்சையளிக்கப்படும்வரை தொடரக்கூடும்.

காய்ச்சலோடிருக்கும் உங்கள் பிள்ளையைப் பராமரித்தல்

உடை

பிள்ளைக்கு மெல்லிய ஆடை அணியுங்கள். பெரும்பான்மையான உடல் வெப்பம் தோலின் வழியாக வெளியேறுவதால், அதிக ஆடை அணிவிப்பது அல்லது பிள்ளையை போர்த்து சுற்றி வைத்திருப்பது காய்ச்சலை இன்னும் அதிகரிக்கலாம் என்பதோடு பிள்ளைக்கு அசெளகரியத்தையும் ஏற்படுத்தலாம். உங்கள் பிள்ளைக்கு குளிர் அல்லது நடுக்கம் ஏற்பட்டால், ஒரு மெல்லிய கம்பளியைக் கொடுங்கள். நீங்கள் மெல்லிய உடை அணிந்திருக்கும்போது உங்களுக்கு செளகரியமாய் இருக்கும் அளவுக்கு அறை வெப்பநிலையை வைத்திருங்கள்.

மேலதிக நீராகாரங்கள்

காய்ச்சல் உங்கள் பிள்ளையின் உடல் சற்று அதிகமாகவே நீரை இழக்கச்செய்யும் என்பதால் பிள்ளை மேலதிக நீராகாராம் உட்கொள்ளும்படி ஊக்கப்படுத்துங்கள். குளிர்ந்த நீர் அல்லது பானம் உதவக்கூடும், ஆனால் பானங்கள் சூடானதாக அல்லது குளிரானதாக இருக்கவேண்டும் என்பது முக்கியமில்லை.

ஸ்பஞ்சால் உடலைக் கழுவுதல்

உடல் வெப்பநிலையைக் குறைக்க , ஸ்பஞ்சால் உடலைக் கழுவுவது வழக்கமாக அவசியப்படுவதில்லை என்பதோடு அது உங்கள் பிள்ளை இன்னும் அசெளகரியமாக உணரச் செய்யலாம். இது உள்ளார்ந்த உடல் வெப்பநிலையை குறைக்காமல் பிள்ளையின் உடலின் வெளிப்புறத்தை மட்டும் குளிராக்கி அவளை நடுங்கச் செய்யும். பின்வரும் நிலைமைகளின்போது மட்டும் ஸ்பஞ்சால் உடலைக் கழுவலாம்:

 • உங்கள் பிள்ளையின் செளகரியத்தை அதிகரிக்க அது உதவக்கூடுமானால்
 • ஹீட் ஸ்ட்ரோக் அதாவது வெப்ப அதிர்ச்சி அல்லது 42°C (108°F) கும் அதிகமான மிகக் கடும் காய்ச்சல் போன்ற அவசரநிலைகளின்போது

மருந்து

காய்ச்சலைக் குறைப்பதற்கு மருந்துகள் உதவலாம். மருந்துகள் காய்ச்சலை 1°C இலிருந்து 2°C (2°F to 3°F) அளவுவரை மட்டும் குறைக்க உதவுமேயன்றி உடல் வெப்பநிலையை சாதாரண நிலைக்கு கொண்டுவராமலிருக்கலாம். காய்ச்சல் தானாகவே கூடிக்குறையும் என்பதால், காய்ச்சல் குறைந்த்து மருந்தினாலா அல்லது காய்ச்சலின் இயற்கை இயல்பினாலா எனக் கூறுவது கடினம். உங்கள் பிள்ளை நித்திரையாக இருந்தால் இந்த மருந்துகளைக் கொடுப்பதற்காக அவளை எழுப்புவது அவசியமாகாது.

காய்ச்சலை சமாளிப்பதற்கு இரண்டு வகையான மருந்துகள் வழக்கமாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. அவையாவன:

 • அஸெட்டமினோஃபென் (டைலெனோல், டெம்ப்ரா அபினோல், மருந்துக்கடை மற்றும் வேறு பிரான்டுகள்)
 • ஐபுப்ரொஃபென் (அட்வில், மோட்ரின், புறூஃபென், மருந்துக்கடை மற்றும் வேறு பிரான்டுகள்)

அவையிரண்டும் வில்லைகளாக, கப்சூல்ஸ்களாக மற்றும் திரவமாக பல்வேறு வீரிய அளவுகளில் கிடைக்கின்றது. அசெட்டமினோஃபென், மலவாசல் உள்வைப்பு (சப்போசிட்டரி) மருந்தாகவும் கிடைக்கின்றது.

உங்கள் பிள்ளைக்கு மிகப் பொருத்தமான ஃபோர்முலா அல்லது மருந்தின் அளவு எது என்பதைத் தீர்மானிக்க உங்கள் மருத்துவர் அல்லது ஃபார்மசிஸ்ட் அதாவது மருந்தாளுநர் உதவலாம். ஒரு பிள்ளைக்கு பொருத்தமான மருந்தின் வேளை அளவு (டோஸ்) அதன் உடல் எடையில் தங்கியுள்ளது. மருந்துப் பொதியில் அல்லது பெட்டியில் மதிப்பீடுசெய்யப்பட்ட டோஸ் அளவு பொதுவாக வழங்கப்பட்டிருக்கும்.

இந்த மருந்துகள் காய்ச்சலைச் சமாளிக்கவும் பிள்ளையை செளகரியமாக வைத்திருப்பதற்குமே உபயோகிக்கப்படுகின்றன, ஆனால் காய்ச்சலுக்கான அடிப்படைக் காரணத்திற்கு இவை சிகிச்சையளிப்பதில்லை.

உங்கள் குழந்தை 3 மாதங்களுக்கும் குறைந்த வயதுடையதானால், மருத்துவர் கூறினாலேயன்றி எந்த காய்ச்சல் மருந்தையும் கொடுக்காதீர்கள்.

அசெட்டமினோஃபென்னும் ஐபியூப்ரொஃபேனும் ஒன்றோடு ஒன்று கலப்பதில்லை. உடல் வெப்பநிலையைக் குறைப்பதற்கு அவை இரண்டுமே சரியான அளவில் பயனளிக்கக்கூடும். வெவ்வேறு நேரங்களில், ஒன்றைவிட மற்றொன்று நன்றாக வேலைசெய்வதாக அல்லது ஏதாவது ஒன்று பயனளிக்காததாக அல்லது இரண்டுமே பயனளிக்காததாக தோன்றலாம்.

உங்கள் பிள்ளைக்கு, ஒரு மருத்துவ நிலைமை ஏற்கெனவே இருக்குமானால் அல்லது வேறு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன என்றால், அசெட்டமினோஃபென் அல்லது ஐபியூப்ரொஃபேன் பிள்ளைக்குப் பாதுகாப்பானதுதான் என்பதை உறுதிசெய்ய உங்கள் மருத்துவருடன் பேசுங்கள்.

உங்கள் பிள்ளையின் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க ASA (ஆஸ்பிரின்) ஐ கொடுக்க வேண்டாம்

மிக அரிதானதாக இருந்தால்கூட, ASA (அசெடில்சாலிசிலிக் அசிட் அல்லது அஸ்பிரின்) மருந்து, ரைஸ் சின்றம் எனப்படும் ஒரு கடுமையான மருத்துவ நிலைமையுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. உங்கள் மருத்துவர் குறிப்பாக கூறியிருந்தாலே தவிர பிள்ளையின் காய்ச்சலை சமாளிக்க ASA கொடுக்கவேண்டாம். ASA நீங்கள் கொடுக்கும் மருந்துகளில் இல்லை என்பதை உறுதிசெய்ய மருந்துகளின் லேபிள்களை வாசியுங்கள் அல்லது உங்கள் ஃபார்மசிஸ்டுடன் பேசுங்கள்.

உங்கள் பிள்ளையின் சுகநலப் பராமரிப்பாளரை எப்போது அழைக்கவேண்டும்

பின் வரும் நிலைமைகளின்போது உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழையுங்கள் அல்லது ஒரு கிளினிக்குக்கு அல்லது அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு உடனடியாகச் செல்லுங்கள்:

 • உங்கள் பிள்ளை 3 மாதங்களுக்கும் குறைந்த வயதுடையது
 • அண்மையில் நீங்கள் வெளிநாட்டுப் பயணமொன்றிலிருந்து திரும்பி வந்திருக்கின்றீர்கள்
 • காய்ச்சல் 40°C (104°F) க்கும் அதிகம்
 • சிறிய நாவல் நிற புள்ளிகள் போன்ற ஒரு சொறி பிள்ளைக்கு எற்பட்டுள்ளது, அது விரலால் அழுத்தம் கொடுத்தபோதும் அகலவில்லை
 • உங்கள் பிள்ளையால் நீராகாரம் எதையும் வயிற்றில் வைத்திருக்க முடியவில்லை என்பதோடு நீர்வறட்சியுள்ளதாகக் காணப்படுகின்றது
 • உங்கள் பிள்ளையின் தோல் வெளுறி அல்லது சாம்பல் நிறமாக, அல்லது குளிராக அல்லது புள்ளிகள் உள்ளதாக காணப்படுகின்றது
 • உங்கள் பிள்ளைக்கு தொடர்ச்சியாக வலியிருக்கின்றது
 • உங்கள் பிள்ளை மிகவும் சோம்பலாக உள்ளது ( மிகவும் பலவீனமாக) அல்லது விழிப்பதற்கு சிரமப்படுகின்றது
 • உங்கள் பிள்ளையின் கழுத்து விறைப்பாக இருக்கின்றாது
 • உங்கள் பிள்ளைக்கு காய்ச்சலோடு தொடர்பான வலிப்பு இருக்கின்றது
 • உங்கள் பிள்ளை மிக சுகவீனமாக காணப்படுகின்றது அல்லது நடந்துகொள்கிறது
 • உங்கள் பிள்ளை தொடர்ச்சியாக குழப்பமடைந்து அல்லது கவனம் சிதறிப்போய் காணப்படுகின்றது
 • உங்கள் பிள்ளை தொடர்ச்சியாக ஒரு கையை அல்லது ஒரு காலை சாதாரணமாக உபயோகிக்கவில்லை அல்லது நிற்கவோ காலில் பாரத்தைப்போடவோ மறுக்கின்றது
 • உங்கள் பிள்ளை சுவாசிக்க சிரமப்படுகின்றது
 • உங்கள் பிள்ளை தொடர்ச்சியாக அழுவதோடு அழுகையை நிறுத்த முடியாமலிருக்கின்றது

பின்வரும் நிலைமைகளில் 24 மணித்தியாளங்களுக்குள் அழையுங்கள்:

 • உங்கள் பிள்ளையின் வயது 3 க்கும் 6 க்கும் இடைப்பட்டது
 • உங்கள் பிள்ளைக்கு காது அல்லது தொண்டை வலி போன்ற மதிப்பீடு செய்ய வேண்டிய ஒரு குறிப்பான வலி இருக்கின்றது
 • உங்கள் பிள்ளைக்கு 3 நாட்களுக்கும் அதிகமாக காய்ச்சலிருக்கின்றது
 • 24 மணித்தியாளங்களுக்கும் அதிகமாக காய்ச்சல் விட்டுப்போய் பின் மீண்டும் வந்திருக்கின்றது
 • அன்டிபையோடிக் மருந்தால் பிள்ளையின் பக்ரீரியா தொற்றுநோய் ஒன்று சிகிச்சையளிக்கப்படுகிறது, ஆனால் அன்டிபையோடிக் மருந்து கொடுத்து 2 தொடங்கி 3 நாட்களின் பின்பும் காய்ச்சல் அகலவில்லை
 • உங்கள் பிள்ளை கழிவறைக்குச் செல்லும்போது அழுகின்றது
 • உங்கள் பிள்ளையின் சிறுநீர் துர்நாற்றம் வீசுகின்றது
 • உங்களுக்கு வேறு கவலைகள் அல்லது கேள்விகள் இருக்கின்றது

காய்ச்சல்: தவறான கருத்துகளும் உண்மைகளும்

காய்ச்சலைப் பற்றி பல தவறான கருத்துக்கள் உள்ளன, அவற்றில் சில உங்களை அவசியமில்லாமல் கவலையடையச் செய்யலாம். உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல் இருக்கின்றதென்றால், பிள்ளை பார்வைக்கு எப்படி இருக்கின்றது என்பதும் அதன் நடவடிக்கைகளும்தான் மிகவும் முக்கியமான விடயம்.

தவறான கருத்து: காய்ச்சலின் துல்லியமான வெப்பநிலை உபயோகமானது

உண்மை: இந்த இலக்கம், மிக இளம் குழந்தைகளிலும் நீடிக்கும் மருத்துவ நிலையொன்றைக் கொண்டிருக்கும் பிள்ளைகளினதும் பராமரிப்பைப் பற்றி முடிவுசெய்வதற்கு உதவியாக இருக்கலாம். ஆனாலும் ஒரு காய்ச்சலுள்ள பிள்ளையின் நிலையை, குறிப்பாக காய்ச்சலுக்கு மருந்துகள் மூலம் சிகிச்சையளித்தபின் பிள்ளையின் நிலையை சீர்தூக்கிப்பார்ப்பதற்கு மிக முக்கியமான பங்களிப்பது, பிள்ளை பார்ப்பதற்கு எவ்வாறு இருக்கின்றது மற்றும் அதன் நடவடிக்கைகள் என்ன என்பவையே. உதாரணத்திற்கு, உயர்ந்த உடல் வெப்பநிலை கொண்ட ஆனால் பார்வைக்கு நலமாகத் தோன்றும் பிள்ளையின் நிலை, உடல் வெப்பநிலை மிக அதிகமாக இல்லாத ஆனால் பார்வைக்கு மிக சுகவீனமாகவும், பிரதிபலிப்பேதுமின்றியும் இருக்கும் பிள்ளையின் நிலையைவிட குறைந்த கவலைக்குரியதானதாகும். சில சிறிய வைரஸ் கிருமித்தொற்றுகள் கடுமையான காய்ச்சலை ஏற்படுத்துபவையாக இருக்கலாம் என்பதோடு சில பக்டீரியா கிருமித்தொற்றுகள் வழக்கத்துக்கு மாறான அளவுக்கு உடல் வெப்பநிலையைக் குறைக்கலாம்.

தவறான கருத்து: காய்ச்சல்கள் மூளைச் சிதைவை ஏற்படுத்தும்

உண்மை: கிருமித்தொற்றோடு தொடர்பான அநேக காய்ச்சல்கள், 42°C (108°F) கும் குறைவானவையே. இந்தக் காய்ச்சல்கள் மூளைச் சிதைவை ஏற்படுத்துவதில்லை. தொடர்ச்சியான 44°C (110°F) கும் அதிகமான உடல் வெப்பநிலைகள் மட்டுமே மூளைச் சிதைவை ஏற்படுத்தக்கூடும். வெப்ப அதிச்சி அல்லது சில போதை மருந்துகள் அல்லது மயக்க மருந்து அல்லது மனநோய் போன்றவற்றிற்கான மருந்துகளின் பாவனை, ஆகியவற்றினால் இவ்வாறான உடல் வெப்பநிலைகள் உருவாகலாம். இவை பிள்ளைகளுக்கு வரும் வழக்கமான நோய்த்தொற்றுகளின் போது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

தவறான கருத்து: பிள்ளைகளுக்கு காய்ச்சல் வருவது கூடாது

உண்மை: காய்ச்சல் என்பது, உடலின் நோயெதிர்ப்புத் தொகுதி செய்ற்படவைக்கப்பட்டதற்கான ஒரு அறிகுறிமட்டுமே. பல கிருமிகள் சற்று உயர்ந்த உடல் வெப்பநிலையின் காரணமாகவே அழிந்துவிடும் என்பதால், காய்ச்சலே தொற்றுநோய்க்கு தீர்வாக அமைகின்றது. பிள்ளை அசெளகரியமானதாக உணர்ந்தால் கூட, தொற்றுநோயை எதிர்த்துப் போரிட உதவுகின்றன என்ற அர்த்தத்தில் அநேகமான காய்ச்சல்கள் ஒரு நன்மையைத்தான் தருகின்றன. பிள்ளை நலமானதாக உணர்வதற்கு உதவுவதே, காய்ச்சலின்போது மருந்து கொடுப்பதற்கான முக்கிய காரணமாகும்.

தவறான கருத்து: காய்ச்சல்கள் எப்போதுமே காய்ச்சலுக்கு எதிரான ஒரு மருந்தை உபயோகித்ததும் சுகமாகிவிட வேண்டும்

உண்மை: காய்ச்சலை எதிர்க்கும் மருந்து வழக்கமாக காய்ச்சலைக் குறைக்க உதவுகின்றது, ஆனால் எப்போதுமே உதவுவதில்லை. சிலவேளைகளில் மருந்து கொடுத்த பின்புகூட காய்ச்சல் தொடரும். காய்ச்சலைக் குறைக்க மருந்து உதவுகின்றதா இல்லையா என்பதற்கும் தொற்றுநோயின் கடுமைத்தன்மைக்கும் தொடர்பேதும் இல்லை.

தவறான கருத்து: அன்டிபையோடிக் மருந்திற்கு காய்ச்சல்கள் விரைவாக குணமாக வேண்டும்.

உண்மை: அன்டிபையோடிக்ஸுகள் பக்டீரியாத் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மட்டுமே உபயோகமானவை. அவை வைரஸ் தொற்றுநோய்களுக்கு எந்த நன்மையையும் அளிக்காது. அநேகமான தொற்றுநோய்கள் வைரஸ்காளால் ஏற்படுத்தப்படுகின்றன என்பதால் அன்டிபையோடிக்ஸுகள் அவற்றிற்குப் பயனளிக்காது. பக்டீரியாத் தொற்றுநோய்களுக்கு, அன்டிபையோடிக்ஸுகள் கொடுக்கப்பட்ட உடனேயே அது கிருமியை எதிர்த்துப் போரிட ஆரம்பிக்கும் ஆனால் காய்ச்சல் போவதற்கு சில நாட்கள் எடுக்கக்கூடும்.

முக்கிய குறிப்புகள்

 • வழக்கமாக காய்ச்சல், ஒரு தொற்றுநோயுடன் உடல் போராடுவதற்கான அடையாளமாகும்
 • உங்கள் பிள்ளையின் துல்லியமான உடல் வெப்பநிலை உங்கள் பிள்ளையின் தோற்றம் மற்றும் செயற்ப்பாடுகள் போன்றவற்றைவிட குறைவான முக்கியத்துவம் கொண்டது
 • உங்கள் பிள்ளையை செளகரியமாக வைத்திருக்க, உங்கள் பிள்ளைக்கு மிக சூடான உடை அணியாதீர்கள், மேலதிக நீராகாரம் கொடுங்கள் மற்றும் அஸெட்டமினோஃபென் அல்லது ஐபியூப்ரொஃபேன் கொடுங்கள்.

Last updated: October 16 2009