மைய நரம்புக்குழாய் (CVL)

Central venous line (CVL) [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

மைய நரம்புக் குழாய் (CVL) என்பது உங்களது பிள்ளையின் இதயத்துக்கு போகும் நரம்புக்குழாய் பாதிப்படையும் போது அவளது உடலில் மருந்து செலுத்துவதற்கான ஒரு நீண்ட

மைய நரம்புக் குழாய் (CVL) என்றால் என்ன?

மத்திய வீனஸ் லைன் வெளிப்புற மற்றும் உட்புற கழுத்து நாளங்கள், வலது தோள்பட்டை நாளங்கள் மற்றும் மேல்பெரு நாளத்தினுள் சிறியதொரு ஒடுங்கிய குழாய்
மத்திய வீனஸ் லைன் என்பது உங்கள் பிள்ளையின் இருதயத்தை நோக்கிச் செல்லும் பாரிய இரத்த நரம்புகளுக்குள் உட்செலுத்தப்படும் ஒரு குழாயாகும். 

CVL என்பது சென்ட்ரல் வீனஸ் லைன் ( மைய நரம்புக்குழாய்) என்பதன் சுருக்கமாகும். ஒரு மையக் குழாய் அல்லது ஒரு மைய நரம்புக் குழாய் என்றும் அழைக்கப்படும். ஒரு மைய நரம்புக்குழாய் என்பது, இதயத்துக்கு போகும் பெரிய நரம்புக் குழாய்கள் ஒன்றினுள் செருகப்படும் ஒரு நீண்ட, மெல்லிய, வளையக்கூடிய குழாய் ஆகும்.

ஒரு மைய நரம்புக்குழாய்(CVL) என்பது, நீண்ட காலங்களுக்கு நரம்பூடாக சிகிச்சை தேவைப்படும் பிள்ளைகளுக்கு உபயோகிக்கப்படும் , நரம்பூடாகச் (IV) செலுத்தப்படும் ஒரு விசேஷ குழாயாகும். IV சிகிச்சை என்பது நரம்புக்குள் செலுத்தப்படும் மருந்து ஆகும். அடிக்கடி வலியுள்ள ஊசியை நரம்புக்குள் செலுத்துவதனால் அவர்களது நரம்புகள் பழுதடையக்கூடும். உங்கள் பிள்ளைக்கு, கீமோத்தெரப்பி, மற்றும் IV நீர்மங்கள், அல்லது இரத்த மாதிரி எடுத்தல் போன்ற சிகிச்சை முறைகளை, மைய நரம்புக்குழாய்(CVL) இலகுவாக்குகிறது மற்றும் மேலும்சௌகரியமாக உணரச் செய்கிறது. டயலிஸிஸ் போன்ற சில சிகிச்சைகளுக்கும் மைய நரம்புக்குழாய்(CVL) தேவைப்படுகிறது.

மைய நரம்புக்குழாய்(CVL) எப்படி உட்செருகப்படுகிறது, அந்த செயல்முறைக்காக நீங்கள் எப்படி தயாராகலாம், உங்கள் பிள்ளையை எப்படி பராமரிக்கலாம் என்பன பற்றி இந்தப் பக்கம் விளக்குகிறது. உங்கள் பிள்ளை எவற்றை எதிர்பார்க்கவேண்டும் என்பதை, அவள் விளங்கிக்கொள்ளக்கூடிய பாஷையில் விளக்கிச் சொல்வதற்கு இந்தத் தகவலைப் பயன்படுத்தவும்.

செயல்முறைக்கு முன்பு

உங்கள் பிள்ளை ஏற்கனவே மருத்துவ மனையிலிருந்தால், வஸ்க்யூலர் அக்ஸஸ் சேவையிலுள்ள தாதியை சந்திக்கவும். அவர் அந்த செயல்பாடு பற்றி விளக்கமளிப்பார்; உங்கள் கேள்விகளுக்கும் பதிலளிப்பார். உங்கள் பிள்ளை வெளி நோயாளியாயிருந்தால், உங்கள் பிள்ளையை கவனிக்கும் மருத்துவக் குழு, அந்த செயல்பாடு பற்றி உங்களுக்கு விளக்கமளிப்பார்கள்.

மைய நரம்புக்குழாய் (CVL) ஐ உட்புகுத்தும் மருத்துவர் செயல்பாடு பற்றி விளக்குவதற்காகவும், உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காகவும் உங்களை சந்தித்து, உங்கள் சம்மதத்தைப் பெற்றுக்கொள்வார்.

செயல்பாட்டுக்குமுன் மயக்க மருந்து கொடுப்பவரையும் நீங்கள் சந்திப்பீர்கள். இந்த மருத்துவர் உங்கள் பிள்ளைக்கு நித்திரை மருந்து (மயக்க மருந்து) கொடுப்பார்.

செயல்பாடு பற்றி உங்கள் பிள்ளையுடன் பேசுங்கள்

எந்த செயல்பாட்டின் முன்பும் என்ன சம்பவிக்கும் என்பது பற்றி உங்கள் பிள்ளையுடன் கலந்து பேசுவது முக்கியம். பிள்ளைகளுக்கு என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று தெரிந்திருக்கும்போது அவர்களுடைய கவலை குறையும். உங்கள் பிள்ளை விளங்கிக்கொள்ளும் முறையில் அவளுடன் கலந்து பேசுங்கள். நேர்மையாக இருக்கவேண்டியது முக்கியம். உங்கள் பிள்ளை செயல்பாட்டின்போது விழித்து எழமாட்டாள், அதன் பின்பு தான் விழித்து எழுவாள் என்பதை அவளுக்குச் சொல்லுங்கள். உங்கள் பிள்ளையின் கேள்விகளுக்கு எப்படி பதிலளிப்பது என்று உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திராவிட்டால், உங்கள் யூனிட்டிலுள்ள சைல்ட் லைஃப் ஸ்பெஷலிஸ்ட்டிடம் உதவி கேளுங்கள்.

இரத்தப் பரிசோதனைகள்

உங்கள் பிள்ளை செயல்பாட்டுக்கு வருவதற்குமுன் இரத்தப் பரிசோதனகள் செய்யப்படவேண்டியிருக்கலாம். இது உங்கள் பிள்ளையின் பாதுகாப்புக்கானது. உங்கள் பிள்ளையின் மருத்துவர் இதற்கான ஏற்பாடிகளைச் செய்வார்.

உணவு மற்றும் நீராகாரங்கள்

செயல்பாட்டு நாளில், உங்கள் பிள்ளைக்கு ஒரு பொதுவான மயக்க மருந்து கொடுக்கப்படும். அறுவை சிகிச்சைக்கு முன்பு செயல்பாடு நடக்கும் நாளில் அவளுக்கு எந்த திடமான உணவும் கொடுக்கப்படக்கூடாது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. உங்கள் பிள்ளை பின்வரும் நீராகாரங்களை உட்கொள்ளலாம்:

நித்திரை மருந்து (தூக்கக் கலக்கம் தரும் அல்லது பொதுவான மயக்க மருந்து) கொடுக்கப்படுவதற்குமுன் உங்கள் பிள்ளை எவற்றை உண்ணலாம் அல்லது பருகலாம்

செயல்பாட்டுக்கு முன்பான நேரம்நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை
செயல்பாட்டுக்கு முந்திய நள்ளிரவுதிடமான உணவு எதுவும் கொடுக்கப்படாது. இது சுவீங்கம் அல்லது கன்டியையும் உட்படுத்தும்.

பால், ஓரேஞ் ஜுஸ், மற்றும் தெளிந்த திரவங்கள் போன்ற பானங்களை உங்கள் பிள்ளை இன்னும் பருகலாம். தெளிந்த திரவங்கள் என்பது, நீங்கள் ஊடாகப் பார்க்கக்கூடிய, அப்பிள் ஜூஸ், ஜிஞ்ஜர் ஏல், அல்லது தண்ணீர் போன்ற திரவங்கள்.

உங்கள் பிள்ளை ஜெல்-ஒ அல்லது பொப்ஸிகிள்ஸ் என்பனவற்றையும் சாப்பிடலாம்.

6 மணி நேரம்பால், ஃபோர்மூலா, அல்லது பால், ஓரேஞ் ஜூஸ், மற்றும் கோலா போன்ற, நீங்கள் ஊடாகப் பார்க்க முடியாத பானங்களைக் கொடுக்கவேண்டாம்.
4 மணி நேரம்உங்கள் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டுவதை நிறுத்துங்கள்
2 மணி நேரம்தெளிவான பானங்கள் கொடுப்பதை நிறுத்தவும். அதாவது அப்பிள் ஜுஸ், தண்ணீர், ஜிஞ்ஜர் ஏல், அல்லது பொப்ஸிக்கிள் கொடுப்பதை நிறுத்தவும்.

உணவு உண்பதையும் பானங்கள் பருகுவதையும் பற்றி உங்களுக்கு மேலுமான அறிவுரைகள் கொடுக்கப்பட்டிருந்தால் அவற்றை இங்கே எழுதவும்:

உங்கள் பிள்ளையின் வயிறு, மயக்க மருந்து கொடுக்கப்படும்போதும் அதன் பின்னரும் வெறுமையாக இருக்கவேண்டியது மிகவும் முக்கியம். வயிறு வெறுமையாயிருப்பது வாந்தியெடுத்தல் மற்றும் மூச்சு திணறலடைப்பு சந்தர்ப்பங்களையும் குறைக்கும்.

செயல்பாட்டின்போது என்ன சம்பவிக்கும்

செயல்பாட்டுக்குமுன்பு உங்கள் பிள்ளைக்கு, ஒரு “விசேஷ நித்திரை மருந்து” என்றழைக்கப்படும் பொதுவான மயக்க மருந்து கொடுக்கப்படும். இது உங்கள் பிள்ளை செயல்பாடு முடியும்வரை நித்திரை செய்வாள் மற்றும் எந்த வலியையும் உணரமாட்டாள் என்பதை நிச்சயப்படுத்தும்.

ஒரு கதிர்வீச்சியல் மருத்துவர் அல்லது அறுவைச் சிகிச்சை மருத்துவர், இமேஜ் கைடட் சிகிச்சை (IGT) பிரிவில் அல்லது அறுவைச் சிகிச்சை அறை (OR) யில் வைத்து, உங்கள் பிள்ளைக்கு, மைய நரம்புக்குழாயை (CVL) இடைச் செருகுவார். IGT செயல்பாட்டிற்காக, விசேஷ கருவிகளை உபயோகிப்பார்கள். கடந்த காலங்களில் இது பாரம்பரிய அறுவை சிகிச்சையாக செய்யப்பட்டிருக்கலாம்.

செயல்பாட்டின்போது மருத்துவர் மைய நரம்புக்குழாய்(CVL) ஐ கழுத்திலுள்ள ஒரு நரம்பினூடாகப் புகுத்தி, இதயத்துக்குப் போகும் ஒரு பெரிய நரம்புக்குள் வைப்பார். அங்கு இரத்தம் விரைவாகப் பாயும். இந்த மைய நரம்புக்குழாய் மருந்துகள் மற்றும் IV நீர்மங்கள் நன்றாகக் கலப்பதற்கு அனுமதிக்கும்.

அல்டிரா சவுன்ட் மற்றும் மின்னணுத் திரை, ஒரு விசேஷ கதிர்வீச்சு இயந்திரம் போன்ற உபகரணங்கள் இந்தச் செயல்பாட்டின்போது உபயோகிக்கப்படலாம். செயல்பாட்டின்பின், மைய நரம்புக்குழாய் (CVL) சரியான நிலைமையில் இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக ஒரு மார்புக் கதிரியக்கப் படம் எடுக்கப்படலாம்.

மைய நரம்புக்குழாய் (CVL) ஐ உட்செருகுவதற்கு 1 மணி நேரம் வரை எடுக்கலாம்.

செயல்பாட்டின்போது, காத்திருக்கும் பகுதியில் காத்திருக்கும்படி நீங்கள் கேட்கப்படலாம். செயல்பாடுமுடிந்தபின் மற்றும் உங்கள் பிள்ளைவிழிப்படையத் தொடங்கும்போது, நீங்கள், உங்கள் பிள்ளையைப் போய்ப் பார்க்கலாம். மைய நரம்புக்குழாய் (CVL) புகுத்தப்பட்டவுடன், உங்கள் மருத்துவர் அல்லது தாதி வெளியே வந்து செயல்பாட்டைப் பற்றி உங்களுடன் பேசுவார்.

மைய நரம்புக்குழாய் (CVL) இடைச் செருகுவதில் உட்பட்டிருக்கும் ஆபத்துக்கள்

எந்த செயல்பாடும் சில ஆபத்துக்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு செயல்பாடும், உங்கள் பிள்ளைக்கு வரக்கூடிய நன்மையையும், வரக்கூடிய ஆபத்தையும் ஒப்பிட்டுப்பார்த்து தீர்ப்பிடப்படுகிறது. செயல்பாடுகள், குறைந்த ஆபத்திலிருந்து அதிக ஆபத்துவரை வித்தியாசப்படுகின்றன.

பெரும்பாலும், ஒரு மைய நரம்புக்குழாய் (CVL) இடைச்செருகல் குறைந்த ஆபத்தாகக் கருதப்படுகிறது. செயல்பாட்டிலுள்ள ஆபத்துக்கள், உங்கள் பிள்ளையின் நிலைமை, வயது மற்றும் அளவு மற்றும் அவளுக்கிருக்கும் வேறு பிரச்சினைகள் என்பனவற்றில் சார்ந்திருக்கிறது.

ஏதாவது ஒரு மைய நரம்புக்குழாய் இடைச்செருகலிலுள்ள ஆபத்துக்கள், ஒரு CVL உட்பட, பின்வருவனவற்றை உட்படுத்தும்:

 • மைய நரம்புக்குழாய் (CVL) ஐ ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நரம்பைக் கண்டுபிடிப்பதில் தோல்வி
 • இரத்தம் வெளியேறுதல் அல்லது நசுக்குக் காயம்
 • தொற்றுநோய்
 • இரத்தம் கட்டிபடுதல்
 • நுரையீரல் அல்லது நரம்புகளில் காற்று
 • இரத்தக் குழாய் உடைதல்
 • அசாதாரண இதயத் துடிப்பு
 • செருகு குழாய் உடைதல்
 • மரணம் (மிக, மிக அரிது)

செயல்பாட்டிற்குப் பின்னர் எதை எதிர்பார்க்க வேன்டும்

செயல்பாட்டுக்குப் பின்னர், கழுத்தில் ஒன்று மற்றும் மார்புப் பகுதியில் ஒன்றுமாக 2 பெரிய பன்டேஜ்களை உங்கள் பிள்ளை கொண்டிருப்பாள். இவை கிருமிகள் அழிக்கப்பட்ட பன்டேஜ்கள் ஆகும். அதாவது, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதியை, முடிந்தளவுக்கு கிருமிகளற்ற பகுதியாக வைத்திருப்பதற்காக, இவை விசேஷித்த முறையில் போடப்பட்டவையாகும்.

கழுத்தில் துணி போன்ற பொருளால் மருந்திடப்பட்டிருக்கும். இது சிலமணிநேரங்களில் அகற்றப்பட்டுவிடும். மார்பின் சுவரில் மைய நரம்புக்குழாய் (CVL) இன் வெளிப்பக்க நுனியிலும் ஒரு பன்டேஜ் காணப்படும். இந்த பன்டேஜ்ஜின் கீழ் சாதாரணமாகக் கொஞ்சம் இரத்தம் காணப்படும். கழுத்திலும் மார்புப் பகுதியிலும் ஒரு சிறிய தையல் இருப்பதைக் காண்பீர்கள். இந்தத் தையல்கள் பெரும்பாலும் சில வாரங்களில் கரைந்து தாமாகவே மறைந்துவிடும்.

மைய நரம்புக்குழாய் (CVL) ஐ உடனேயே உபயோகிக்கலாம்.

செயல்பாட்டின்பின் உங்கள் பிள்ளை கொஞ்சம் வலி அல்லது அசௌகரியத்தை உணரலாம்

செயல்பாட்டின்பின் முதல் நாள் அல்லது இரண்டு நாட்களுக்குப் பின், சில பிள்ளைகள் கழுத்தில் அல்லது மார்பில் இலேசான வலி அல்லது அசௌகரியத்தை உணரலாம். இது சம்பவித்தால், உங்கள் பிள்ளைக்கு வலிக்கு ஏதாவது மருந்து கொடுக்கலாமா என்று உங்கள் தாதி அல்லது மருத்துவரைக் கேளுங்கள்.

பெரும்பாலும், கழுத்திலுள்ள பன்டேஜினால் , பிள்ளைகள், தங்களுக்கு கழுத்து விறைப்பு இருப்பதைப் போல் உணருகிறார்கள். உங்கள் பிள்ளை வழக்கம் போல் தன் கழுத்தை அசைப்பது நல்லது மற்றும் பாதுகாப்பானது.

மைய நரம்புக்குழாய் (CVL) உபயோகிக்கப்படும்போது உங்கள் பிள்ளை எந்த வலியையும் உணரமாட்டான்.

மைய நரம்புக்குழாய் (CVL) ஐ எப்படிப் பராமரிப்பது

மார்பில் மைய நரம்புக்குழாய் (CVL)உள்ள பகுதிக்குமேல் எப்போதும் பன்டேஜ் இடப்பட்டிருக்க வேண்டும். இந்த பன்டேஜ் மைய நரம்புக்குழாய் (CVL) ஐ எப்போதும் சுத்தமாக மற்றும் பாதுகாப்பாக வைக்கும். குழாயின் முடிவுப்பகுதி, ஹப் என்றழைக்கப்படும், ஒரு மூடியால் மூடப்பட்டிருக்கும்.

நீங்கள் மருத்துவமனையில் இருக்கும்போது உங்கள் பிள்ளையின் மைய நரம்புக்குழாய் (CVL) ஐ தாதிமார் பராமரிப்பார்கள். தாதிமார் பன்டேஜ்களை மாற்றி, கிருமியழிக்கப்பட்ட உபகரணங்களை உபயோகித்து மைய நரம்புக்குழாய் (CVL) ஐ பராமரிப்பார்கள். இது CVL இல் தொற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது.

நீங்கள் வீட்டுக்குப் போனபின், ஒரு சமுதாய பராமரிப்பு தாதி உங்கள் பிள்ளையின் மைய நரம்புக்குழாய் (CVL) ஐப் பராமரிபார். மைய நரம்புக்குழாய் (CVL) ஐ பராமரிப்பதில் நீங்கள் மேலும் சௌகரியமாக உணரும்போது, சமுதாய பராமரிப்பு தாதி, நீங்களே அதை எப்படிப் பராமரிக்கமுடியும் என்பதை கற்றுக்கொடுப்பார்.

மைய நரம்புக்குழாய் (CVL) இல் எப்போதும் இன்ஃபியூஷன் அல்லது ஹெப்பரின் லொக் கொடுக்கப்படும். இன்ஃபியூஷன் என்பது குழாயினூடாக மற்றும் பம்பினூடாக திரவங்களைக் கடத்துதல் ஆகும். ஹெப்பரின் என்பது, உங்கள் பிள்ளைக்கு IV மருந்து அல்லது திரவங்கள் தேவைப்படும்போதெல்லாம் மைய நரம்புக்குழாய் (CVL) அடைக்கப்படாமல் தடுக்கும் ஒரு மருந்தாகும். மைய நரம்புக்குழாய் (CVL) ஐ உபயோகித்தபின் ஒவ்வொரு முறையும் புதிய ஹெப்பரின், குழாக்குள் பாய்ச்சப்படும். மைய நரம்புக்குழாய் (CVL) ஒவ்வொரு நாளும் உபயோகிக்கப்படாவிட்டால், 24 மணி நேரங்களுக்கொருமுறை ஹெப்பரின் பாய்ச்சப்படும்.

மைய நரம்புக்குழாய் (CVL)ஐ எப்போதும் உலர்வாக வைத்துக்கொள்வது முக்கியம். மைய நரம்புக்குழாய் (CVL) ஈரமடைந்தால், நோய் தொற்றக்கூடும். உங்கள் பிள்ளை குளிக்கும்போது மைய நரம்புக்குழாய் (CVL) உலர்வாக இருப்பதற்கு அதை எப்படி மூடி வைக்கவேண்டும் என்று உங்கள் தாதி உங்களுக்கு கற்பிப்பார். பன்டேஜ் ஈரமானால். உடனே அது மாற்றப்படவேண்டும்.

மைய நரம்புக் குழாயை(CVL) ப் பாதுகாத்தல்

மைய நரம்புக்குழாய் (CVL) பெருமளவு பாதுகாப்பானதாக இருந்தாலும், இழுக்கப்பட்டால் அது வெளியே வந்துவிடும். மைய நரம்புக்குழாய் (CVL) எப்போதும் வளையம் போல மடக்கி வார்ப்பட்டை இடப்பட்டு பன்டேஜால் மூடப்பட்டிரு ப்பது மிகவும் முக்கியம். ஹப் என்றழைக்கப்படும் கதீற்றரின் முடிவுப்பகுதி, தவறுதலாக வெளியே இழுக்கப்படுவதைத் தடுப்பதற்காக, உங்கள் பிள்ளையின் மார்பு அல்லது வயிற்றுடன் சேர்த்து வார்ப்பட்டையால் ஒட்டப்பட்டிருக்க வேண்டியதும் மிகவும் முக்கியம்.

கதீற்றரின் நுனி சுத்தமாக இருப்பதற்காகவும் உங்கள் பிள்ளையின் தோலில் உரசுவதைத் தடுப்பதற்காகவும் அதன் நுனியில் பொதுவாக சல்லடைத் துணி சுற்றப்படும். மைய நரம்புக்குழாய் (CVL) உடலுடன் சேர்த்து வார்ப்பட்டையிட்டிருப்பது , அது முறுக்கப்படுதல் அல்லது வளைந்து போவதையும் தடை செய்யும். குழாய் சேதப்படுவது அல்லது உடைந்து போவதைத் தடுப்பது மிகவும் முக்கியம்.

மைய நரம்புக் குழாய் (CVL) உட்செருகியபின் எச்சரிக்கையாயிருக்க வேண்டியவை:

உங்கள் பிள்ளையில் பின்வரும் நிலமைகளை நீங்கள் கவனித்தால், உங்கள் சமுதாய பராமரிப்பு தாதி, மருத்துவ மனையிலுள்ள வஸ்க்யூலர் அக்ஸஸ் சேவை, அல்லது உங்கள் மருத்துவர் அல்லது மருத்துவமனை தாதியை தொடர்பு கொள்ளவும்:

 • உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல் அல்லது குளிர்நடுக்கம் இருந்தால்.
 • உங்கள் பிள்ளைக்கு இரத்தக்கசிவு, சிவத்தல், மைய நரம்புக்குழாய்(CVL) யை அல்லது கழுத்தைச் சுற்றி வீக்கம்
 • உங்கள் பிள்ளையின் மைய நரம்புக்குழாய்(CVL)யில் கசிவு அல்லது வடிதல் இருந்தால்
 • உங்கள் பிள்ளையின் மைய நரம்புக்குழாயினால்(CVL) வேகமாக, திரவத்தை பாய்ச்ச அல்லது கொஞ்சம்கூட பாய்ச்ச முடியாமல் இருந்தால்
 • மைய நரம்புக்குழாய்(CVL) யை உபயோகிக்கும்போது உங்கள் பிள்ளைக்கு வலி இருந்தால்
 • உங்கள் பிள்ளையின் மைய நரம்புக்குழாய்(CVL) சற்று விலகியிருந்தால், அல்லது கொஞ்சம் அல்லது முழுவதும் வெளியே வந்திருந்தால்

ஒவ்வொரு பிள்ளையின் நிலைமைகளும் வித்தியாசப்படுவதால், உங்கள் பிள்ளைக்கு எதாவது பிரத்தியேக அறிவுறுத்தல்கள் இருக்கின்றனவா என உங்கள் மருத்துவரிடம் கேட்கவும்.

நடவடிக்கைகள்

உங்கள் பிள்ளைக்கு மைய நரம்புக்குழாய் (CVL) செருகியபின், வலியை உணராவிட்டால், ஒன்று அல்லது இரண்டு நாட்களில் பெரும்பாலான நடவடிக்கைகளில் திரும்பவும் ஈடுபடலாம். இது பாடசாலைக்கோ அல்லது பகல் நேர பராமரிப்பு நிலையத்துக்கு செல்வதையோ உட்படுத்தும். மைய நரம்புக்குழாய் (CVL) ஐப்பற்றி உங்கள் பிள்ளையைப் பராமரிப்பவரிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ சொல்லவும்.

உங்கள் பிள்ளை சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ரென்னிஸ் போன்ற போட்டி விளையாட்டுகளையும் விளையாடமுடியும். உங்கள் பிள்ளை முடிந்தளவு வழக்கமான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவது முக்கியம். தவிர்க்கவேண்டிய சில காரியங்கள் உள்ளன:

 • தண்ணீர் போட்டி விளையாட்டு அல்லது நீச்சலடிப்பதைத் தவிர்க்கவும். ஈரமான பன்டேஜ் தொற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும். பன்டேஜ் ஈரமானால், அது உடனேயே மாற்றப்படவேண்டும்.
 • மைய நரம்புக்குழாய் (CVL) அருகே எங்கேயாவது கத்தரிக்கோல் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒருவரும் (உங்கள் பிள்ளை, தாதி அல்லது மருத்துவர், அல்லது நீங்கள்) மைய நரம்புக்குழாய் (CVL) அருகே கத்தரிக்கோல் உபயோகிப்பதை அனுமதிக்கக்கூடாது.
 • கதீற்றரை வெளியே இழுத்துவிடக்கூடிய , ஹொக்கி, கால் பந்து, உடற்பயிற்சி அல்லது கூடைப்பந்து போன்ற போட்டி விளையாட்டுக்களைத் தவிர்க்கவும்.
 • மைய நரம்புக்குழாய் (CVL) ஐ வேறு பிள்ளைகள் தொட அல்லது தொட்டு விளையாட அனுமதிக்கவேண்டாம்.

மைய நரம்புக்குழாய் (CVL) உடைந்தால் என்ன செய்ய வேண்டும்

நீங்கள் மருத்துவமனையை விட்டுப் போவதற்கு முன், உங்களுக்கு மைய நரம்புக்குழாய் (CVL) அவசரநிலைக்கான கருவிப்பெட்டியொன்று கொடுக்கப்படும். உங்கள் பிள்ளையின் மைய நரம்புக்குழாய் (CVL) உடைந்துவிட்டால், உங்களுக்குத் தேவைப்படும் உபகரணங்கள் அந்தப் பெட்டியில் இருக்கும். நீங்கள் மருத்துவமனையை விட்டுப் போவதற்கு முன் ஒரு தாதி அந்தக் கருவிப்பெட்டியைக் கொடுத்து அதை உபயோகிக்கும் முறையை விளக்குவார். எப்போதாவது மைய நரம்புக்குழாய் (CVL) உடைந்துவிட்டால் அதை சரிசெய்வதற்காக கருவிப்பெட்டியை எப்போதும் உங்கள் பிள்ளையுடன் வைத்திருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.

மைய நரம்புக்குழாய் (CVL) உடைந்துவிட்டால், பின்வருவனவற்றைப் பின்பற்றவும்:

 1. அமைதியாய் இருங்கள். உங்கள் பிள்ளைக்கும் மைய நரம்புக்குழாய் (CVL) இன் முறிவுக்கும் இடையேயுள்ள பகுதியை பிடிகருவியால் இறுக்கவும்.
 2. உடைந்த பகுதியை, ஒரு குளோறெக்ஸிடைன் பஞ்சு ஓற்றியினால் துடைக்கவும்.
 3. உடைந்த பகுதிக்குக் கீழ் சுத்தமான சல்லடைத் துணியை வைத்து மைய நரம்புக்குழாய் (CVL) ஐ சல்லடைத்துணியுடன் சேர்த்து வார்ப்பட்டையிடவும். சல்லடைத் துணியை கதீற்றரை சுற்றிக் கட்டவும். பின்பு இந்த சல்லடைத் துணி சுருளை பிள்ளையின் மார்பில் வைத்து வார்ப்பட்டையிடவும்.
 4. துவாரம் சிறியதாக இருந்தால் , அது அடைபடுவதைத் தவிர்ப்பதற்காக, மைய நரம்புக்குழாய் (CVL) (உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தால்) ஹெப்பரின் செய்ய முயற்சி செய்ய வேண்டும். ஹெப்பரின் செய்வது என்பது ஹெப்பரின் மருந்தை மைய நரம்புக்குழாய் (CVL) மூடிக்குள் ஊசிமூலம் ஏற்றுவது அல்லது வேகமாகப் பாய்ச்சுவதாகும்.
 5. இதை நீங்கள் செய்து முடித்தவுடனேயே மேலுமான தகவல்களுக்காக, வஸ்க்யூலர் அக்ஸஸ் சேவையை அழைக்கவும். மதிப்பீடு செய்யப்படுவதற்காக, நீங்கள் மருத்துவமனைக்கு வரும்படி அழைக்கப்படலாம்.

சில மைய நரம்புக்குழாய் (CVL)கள் வேறு குழாய் மாற்றப்படாமலே சரி செய்யப்படலாம். சில உடைந்த மைய நரம்புக்குழாய்கள் (CVL) அகற்றப்படவேண்டும்.

மூடி விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்

மூடி விழுந்துவிட்டால், மைய நரம்புக்குழாய் (CVL) அவசர நிலை உபகரணப் பெட்டியிலிருந்து உபகரணங்களை எடுத்தபின் பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:

 1. உங்கள் கைகளைக் கழுவவும்.
 2. குளோறெக்ஸிடைன் பஞ்சு ஓற்றியினால், மைய நரம்புக்குழாய் (CVL)இன் நுனியைத் துடைக்கவும்.
 3. உபகரணப் பெட்டியிலிருந்து ஒரு புதிய மூடியை எடுத்து ஹப்பில் வைத்து திருகி மூடவும். சல்லடைத்துணி வார்ப்பட்டையை கதீற்றரைச் சுற்றிக் கட்டிவிடவும்.
 4. சல்லடைத் துணிச் சுருளை உங்கள் பிள்ளையின் மார்பில் கட்டிவிடவும்.
 5. மூடி முடிந்தளவு விரைவில் ,கிருமியழித்தல் தொழில் நுட்பத்தை உபயோகித்து, நீங்கள் பயிற்சி பெற்றிருந்தால் உங்களால் அல்லது உங்கள் சமுதாயப் பராமரிப்பு தாதியால் முடிந்தளவு விரைவாக மாற்றப்படவேண்டும்.

உங்கள் பிள்ளையின் மைய நரம்புக்குழாய் (CVL) பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை

உங்கள் பிள்ளையின் மைய நரம்புக்குழாய் (CVL) பற்றி சில விபரங்களை நீங்கள் தெரிந்திருக்க வேண்டியது முக்கியம். உங்களுக்கு பிரச்சினை இருந்து, நீங்கள் சமுதாயப் பராமரிப்பு தாதியை அல்லது வஸ்க்யூலர் அக்ஸஸ் சேவையை அழைக்க வேண்டியிருந்தால், உங்கள் பிள்ளையின் மைய நரம்புக்குழாய் (CVL) பற்றியும் பிரச்சினை பற்றியும் தெரிந்திருப்பது உதவியாயிருக்கும். பின்வரும் தகவல்களைப் பூர்த்தி செய்யுங்கள்:

உட்செருகப்பட்ட திகதி:

கதீற்றரின் வகை மற்றும் அளவு (பொருந்தக்கூடியன ஒன்றை வட்டமிடவும்)

 • ஒரு துவாரம்
 • இரண்டு துவாரங்கள்
 • மூன்று துவாரங்கள்

கதீற்றரின் பயன்பாடு (பொருந்தக்கூடியன எல்லவற்றையும் வட்டமிடவும்)

 • அன்டிபையோடிக் மருந்துகள்
 • குருதிப் பொருட்கள்
 • கீமோத்தெரப்பி
 • மருந்துகள்
 • இரத்த மாதிரி​
 • டி.பி.என்.
 • மற்றவை

மைய நரம்புக்குழாய் (CVL) பற்றிய குறிப்புகள்:

மைய நரம்புக்குழாய்(CVL) எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்

ஒரு மைய நரம்புக்குழாய் (CVL) எந்தப் பிரச்சினையுமில்லாமல் மற்றும் நன்கு வேலைசெய்துகொண்டிருந்தால், பல மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு நீடிக்கும்.

மைய நரம்புக்குழாய் (CVL) இனிமேல் தேவையில்லை என்று உங்கள் மருத்துவக் குழு நிச்சயமாயிருந்தால், மைய நரம்புக்குழாய் (CVL)ஐ அகற்றிவிடுவதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்வார்கள். மைய நரம்புக்குழாய் (CVL)ஐ தூக்கக்கலக்கம் தரும் அல்லது பொதுவான மயக்கமருந்து (நித்திரை மருந்து) கொடுத்து அகற்றி விடுவார்கள். இந்த செயல்பாடு 30 நிமிடங்கள் வரை நீடிக்கும். அன்று செய்யப்படவேண்டிய உணவு உண்பது மற்றும் பானங்கள் குடிப்பது மற்றும் இரத்தம் சம்பந்த்தப்பட்ட செயல்பாடுகள் எல்லாம் மைய நரம்புக்குழாய் (CVL) உட்புகுத்தப்பட்ட நாளில் செய்யப்பட்டது போலவே செய்யப்படவேண்டும்.

தொடர்பு கொள்ளவேண்டியவர்களின் தகவல்கள்

உங்கள் பிள்ளையின் மைய நரம்புக்குழாய் (CVL) சம்பந்தமாக எதாவது கேள்விகள் அல்லது பிரச்சினைகள் இருந்தால், பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்:

சமூகப் பராமரிப்பு தாதி:

வஸ்க்யூலர் அக்ஸஸ் சேவை:

உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது தாதி:

மற்றவை:

முக்கிய குறிப்புகள்

 • மைய நரம்புக்குழாய் (CVL) என்பது, நீண்ட காலங்களுக்கு IV சிகிச்சை தேவைப்படும் பிள்ளைகளுக்கு உபயோகிக்கப்படும் ஒரு நீண்ட, மெல்லிய, வளையக்கூடிய குழாய் ஆகும்.
 • மைய நரம்புக்குழாய் (CVL) கழுத்திலுள்ள ஒரு நரம்புக்குள் செலுத்தப்பட்டு, இதயத்துக்குப் போகும் பெரிய நரம்புக் குழாய்க்குள் வைக்கப்படும்.
 • உங்கள் பிள்ளை நித்திரை செய்வதற்காக ஒரு பொதுவான மயக்கமருந்து கொடுக்கப்படும். செயற்பாட்டின்போது எதையும் கேட்க முடியாது. அல்லாது எதையும் உணரமுடியாது.
 • மைய நரம்புக்குழாய் (CVL) செருகலானது பெரும்பாலும் மிகவும் குறைந்த அபாயமுள்ள செயல்பாடாகக் கருத்தப்படுகிறது.
Last updated: November 06 2009