உங்களுடைய பிள்ளைக்கு மூக்கு –இரைப்பைக் குழாயின் மூலமாக உணவூட்டும்போது ஏற்படும் பொதுவான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பது பற்றிக் கற்றுக்கொள்ளவும்.
உங்களுடைய பிள்ளையின் மூக்கு –இரைப்பைக் (NG) குழாயை உபயோகித்து உணவூட்டும்போது நீங்கள் எதிர்ப்படக்கூடிய பொதுவான பிரச்சினைகளைப் பின்வரும் அட்டவணை சுருக்கமாக விபரிக்கிறது:
பிரச்சினை | இது காரணமாகலாம் | எப்படி கையாளுவது | எப்படித் தடுப்பது |
---|
நீங்கள் மூக்கு –இரைப்பைக் குழாயை உட்சொருகும்போது உங்களுடைய பிள்ளைக்கு மூச்சு அடைத்தல், இருமல்,சுவாசிப்பதில் சிரமம் அல்லது உடல் வெளுறுதல் ஏற்படுகிறது | மூக்கு –இரைப்பைக் குழாய் | - உடனடியாக மூக்கு –இரைப்பைக் குழாயை அகற்றிவிடவும்.
- உங்களுடைய பிள்ளையை அல்லது குழந்தையை சற்று ஓய்வெடுத்து சுதாகரிக்க விடவும்
- குழாயின் நீளத்தைத் திரும்பவும் அளக்கவும்.
- அறிவுரைகளைப் பின்பற்றித் திரும்பவும் உட்செரு முயலவும்.
- உங்களுடைய பிள்ளை நிவாரணமடையாவிட்டால் மருத்துவரை அல்லது 911ஐ உடனே அழைக்கவும்.
| - நீளத்தை அளந்து குழாயில் அடையாளமிடவும்.
- குழாயை மென்மையாகவும் மெதுவாகவும் வைக்கவும்.
- மூக்கு –இரைப்பைக் குழாய் கீழிறங்கும் போது விழுங்கும்படி உங்களுடைய பிள்ளையை உற்சாகப்படுத்தவும்.
- நீங்கள் குழாயை உட்செருகும்போது உங்களுடைய குழந்தைக்கு ஒரு சூப்பானை சூப்பும்படி கொடுக்கவும்.
|
உணவூட்டுதலின்போது உங்களுடைய பிள்ளை வாந்தியெடுக்கிறான் அல்லது அவனின் வயிறு வீங்குகிறது | குழாய்க்குள் அளவுக்கதிகமான ஃபோர்மூலா இருக்கிறது. | - உணவூட்டுவதை 10 முதல் 15 நிமிடங்கள் வரை நிறுத்திவைத்துவிட்டு, திரும்பவும் மெதுவாக ஆரம்பிக்கவும்.
- உங்களுடைய பிள்ளைக்கு தொடர்ந்து பிரச்சினைகள் இருந்தால், உங்களுடைய நல் உணவு வல்லுனரை அல்லது மருத்துவரை அழைக்கவும்
| - அறிவுறுத்தப்பட்ட வேகவீதத்தில் உணவூட்டலைக் கொடுப்பதற்காக உணவூட்டியைச் சரி செய்யவும்.
- சரியான அளவு உணவுதான் கொடுக்கிறீர்கள் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவும்.
|
நீங்கள் குழாயில் இட்ட அடையாளம் இனிமேலும் மூக்குத்துவார இடத்தில் இல்லை | குழாய் உங்களுடைய பிள்ளைக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ அதிக தூரத்துக்குக் தள்ளப்பட்டிருக்கலாம். | - குழாயில் இடப்பட்ட அடையாளத்தை உங்களால் பார்க்கமுடியாவிட்டால், குழாயை வெளியே இழுத்து திரும்பவும் வார்ப்பட்டை இடவும்
- இரண்டு வழிமுறைகளை (மேலேயுள்ள பிரிவு C ஐப் பார்க்கவும்) உபயோகித்து குழாய் வைக்கப்பட்டிருக்கும் நிலையைச் சரிபார்க்கவும்.
- இடப்பட்ட அடையாளம் பிள்ளையிலிருந்து அதிக தூரத்திலிருந்தால், குழாயை அகற்றிவிட்டு, திரும்பவும் அளந்து உட்செருகவும்.
- அதை வார்ப்பட்டையிட்டு நன்கு பாதுகாப்பாக வைக்கவும்
| - குழாய் அசையாதபடி பாதுகாப்பாக வார்ப்பட்டையிடுவதற்கு நிச்சயமாக இருக்கவும்.
- குழாய் வெளியே இழுக்கப்படுவதைத் தடுப்பதற்காக, அதன் வெளிப்பகுதியை பிள்ளையின் சட்டையின் உள்ளே வைக்கவும்.
|
உங்களுடைய பிள்ளைக்கு வயிற்றுப்போக்கு இருக்கிறது | - உணவூட்டுதல் அதிக விரைவாக நடக்கிறது.
- உங்களுடைய பிள்ளைக்கு ஒரு வயிற்றுத் தொற்றுநோய் இருகக்கூடும்.
| - சிகிச்சையைப் பற்றி உங்களுடைய பிள்ளையின் மருத்துவரிடம் கலந்து பேசவும்.
- அந்த உபகரணங்களைத் தூக்கி எறிந்துவிட்டுப் புதிய உபகரணத்துடன் திரும்பவும் ஆரம்பிக்கவும்.
- உபகரணங்களைக் கையாளுவதற்கு முன்பும் பின்பும் உங்களுடைய கைகளைக் கழுவவும்.
| - அறிவுரையின்படியே உணவூட்டப்படுவதை நிச்சயப்படுத்திக் கொள்ளவும்.
- ஃபோர்மூலா சுத்தமான முறையில் தயாரிக்கப்படுவதிலும், உபகரணங்கள் ஒவ்வொரு முறை உபயோகித்த பின்னரும் நன்கு கழுவப்பட்டிருக்கவும் நிச்சயமாக இருக்கவும்.
|
வார்ப்பட்டையினால் உங்களுடைய பிள்ளையின் முகத்திலுள்ள தோலில் அரிப்பு ஏற்படுகிறது. | - வார்ப்பட்டை அளவுக்கதிகமாக இருக்கிறது
- வியர்வையும் எச்சிலும் வார்ப்பட்டையை ஈரமாக்குகின்றன.
- உங்களுடைய பிள்ளை வார்ப்பட்டைக்குக்குக் கூருணர்வுள்ளவனாக இருக்கிறான்.
| - உதவக்கூடிய வேறு வகையான வார்ப்பட்டையை பற்றி உங்களுடைய மருத்துவர் அல்லது தாதியுடன் கலந்து பேசவும்.
- தோலை நிவாரணமடைய அனுமதிப்பதற்காக, முகத்தின் வேறு பகுதிகளில் வார்ப்பட்டையை ஒட்டவும்.
| - குழாயை அதனிடத்தில் வைப்பதற்குத் தேவையான வார்ப்பட்டையை மாத்திரம் உபயோகிக்கவும்
- மிகக் குறைந்தளவு ஒவ்வாமையுள்ள வார்ப்பட்டையை மாத்திரம் உபயோகிக்கவும்.
- வார்ப்பட்டையைப் போடுவதற்கு முன்பாக, உங்களுடைய பிள்ளையின் தோலை வீரியமற்ற சோப்பினாலும் தண்ணீரினாலும் சுத்தம் செய்து நன்கு உலரவிடவும்.
- ஈரமான அல்லது அழுக்கடைந்த வார்ப்பட்டையை உடனேயே அகற்றிவிடவும்.
|
மேலதிக தகவல்களுக்குத் தயவு செய்து மூக்கு –இரைப்பைக் (NG) குழாய்: உங்களுடைய பிள்ளையின் மூக்கு –இரைப்பைக் (NG) குழாயை எப்படி உட்செருகுவது மற்றும் மூக்கு –இரைப்பைக் (NG) குழாய்: உங்களுடைய பிள்ளைக்கு உணவூட்டுதல் ஐ ப் பார்க்கவும்