தொற்றுநோயைத் தடுத்தல் மற்றும் சமாளித்தல்

G/GJ tubes: Preventing and managing infection [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் குழந்தையின் ஸ்டோமாவை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பதையும், ஸ்டோமாவில் அல்லது அதனைச் சுற்றியுள்ள பகுதியில் தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது என்பதனையும் அறிந்து கொள்ளவும்.

முக்கிய குறிப்புகள்

 • நோய்த்தொற்றின் அறிகுறிகளில் பின்வருவன அடங்கும்: சிவத்தல், துர்நாற்றம் வீசும் வெளிப்போக்கு, தடித்த பச்சை அல்லது வெள்ளை நிற வெளிப்போக்கு, உணவூட்டல் குழாயைச் சுற்றி வீக்கம், புண் உருவாக்கம், சொறி அரிப்பு, வலி மற்றும் காய்ச்சல்.
 • உணவூட்டல் குழாய் மற்றும் ஸ்டோமாவைக் கையாளுவதற்கு முன்னர் எப்போதும் உங்கள் கைகளைக் கழுவ வேண்டும்.
 • லேசான நோய்த்தொற்றுகளுக்கு மருந்துச்சீட்டு-இல்லாது பாவிக்கக்கூடிய நுண்ணுயிர் கொல்லிகள் மூலம் சிகிச்சையளிக்கப்படலாம், அதே நேரத்தில் மிகவும் கடுமையான நோய்த்தொற்றுகளுக்குப் பரிந்துரைக்கப்படும் ஒரு மருந்து தேவைப்படலாம்.

காஸ்ட்ரோஸ்டமி குழாய்கள் (G குழாய்கள்) என்பவை திரவ ஊட்டச்சத்து, மருந்துகள் மற்றும் பிற திரவங்களை நேரடியாக வயிற்றுக்குள் வழங்கும் சாதனங்கள் ஆகும். G குழாய்கள் உங்கள் குழந்தையின் வயிற்றில் (வயிறு) ஸ்டோமா எனப்படும் ஒரு அறுவைச் சிகிச்சைத் துளை மூலம் வைக்கப்படுகின்றன.

ஸ்டோமாவை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி

healthy stoma with feeding tube

உங்கள் குழந்தையின் ஸ்டோமாவை ஆரோக்கியமாக வைத்திருக்க, நீங்கள் செய்ய வேண்டியது:

 • சோப்பு மற்றும் நீர் கொண்டு தினமும் ஸ்டோமாவை கழுவ வேண்டும்
 • ஸ்டோமா காற்றில் திறந்திருக்க அனுமதிக்கவும் (அதை ஒரு காயக் கட்டு அல்லது சல்லடைத்துணி கொண்டு மூட வேண்டாம்).
 • அடிவயிற்றுடன் இணைத்துக் குழாயைக் கட்டவும்.
 • உணவுப்பாதையில் குழாயின் அதிகப்படியான அசைவுகளைத் தவிர்க்கவும்.
 • ஸ்டோமா கசிவைக் கூடிய விரைவில் சீர்ப்படுத்தவும்.
 • குறுகிய முனையுள்ள குழாய்க்கு:
  • உங்கள் குழந்தையின் குழாய் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • குழாயுடைய பலூனிலுள்ள அளவை வாராந்தம் பரிசோதிக்கவும்.

உங்கள் குழந்தையின் ஸ்டோமா மற்றும் அதைச் சுற்றியுள்ள சருமத்தை உலர்ந்ததாகவும் மற்றும் சுத்தமாகவும் வைத்திருக்க நீங்கள் சிறந்த முயற்சிகள் எடுக்கும் போதிலும், நோய்த் தொற்று உள்ளிட்ட சில ஸ்டோமா பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

நோய்த்தொற்றின் அறிகுறிகள்

சீழ்க்கட்டி உருவாக்கம் abscess caused by g tube

இந்த அறிகுறிகளில் ஏதாவது ஒன்றை நீங்கள் கண்டால் உங்கள் பிள்ளைக்கு ஸ்டோமாவில் நோய்த் தொற்று ஒன்று ஏற்பட்டிருக்கலாம்:

 • உணவூட்டல் குழாயைச் சுற்றியுள்ள சருமத்தில் அதிகரித்துச் செல்லும் மற்றும்/அல்லது பரவும் சிவந்த நிறம்
 • தடிப்பான பச்சை அல்லது வெள்ளை நிற வெளிப்போக்கு ஸ்டோமாவிலிருந்தும் உணவூட்டல் குழாயைச் சுற்றியும் வெளிவருதல்
 • ஸ்டோமாவிலிருந்து துர்நாற்றம் வீசும் திரவம் வெளியேறுதல்
 • உங்கள் பிள்ளையின் உணவூட்டல் குழாயைச் சுற்றி வீக்கம்
 • உங்கள் பிள்ளையின் ஸ்டோமாவைச் சுற்றியுள்ள சருமம் அவரின் ஏனைய சருமங்களை விட அதிக வெப்பமாக இருத்தல்
 • சீழ்க்கட்டி உருவாக்கம் (தோலின் கீழ் சீழ் சேகரிப்பு)
 • சொறி அரிப்பு (ஒரு பூஞ்சணத் தொற்று காரணமாக இருக்கலாம்)
 • வலி
 • காய்ச்சல்

நோய்த் தொற்று ஏற்பட்ட ஸ்டோமாக்கள் ஹைப்பர் கிரானுலேஷன் திசுக்களை (ஆறிவரும் புண்கள் மீது அளவுக்கதிகமாக உருவாகும் குருமணித் திசுக்கள்) உருவாக்கலாம். இருப்பினும், ஹைப்பர் கிரானுலேஷன் திசு நோய்த்தொற்றுக்கு சமமானதல்ல என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

அனைத்து ஹைப்பர் கிரானுலேஷன் திசுக்களும் நோய்த் தொற்றுக்கு உட்படுவதில்லை.

நோய்த் தொற்றுக்குரிய மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இல்லாதிருப்பின், ஹைப்பர் கிரானுலேஷன் திசு தோன்றும்போது, அதற்கு நுண்ணுயிர் கொல்லி மருந்துச் சிகிச்சை தேவையில்லை. ஹைப்பர் கிரானுலேஷன் திசு (ஆறிவரும் புண்கள் மீது அளவுக்கதிகமாக உருவாகும் குருமணித் திசு) பற்றி மேலும் அறிக.

நோய்த் தொற்றுக்கான சிகிச்சை

சிவந்திருத்தல் மற்றும் வெளிப்போக்கு சிறிது கூடுதலாக இருக்கும் லேசான தொற்றுநோய்களுக்கு, மருந்துச்சீட்டு-இல்லாது பாவிக்கக்கூடிய லிஸ்போரின் போன்ற நுண்ணுயிர் கொல்லிக் களிம்பு அல்லது கிரீம் என்பவற்றை நீங்கள் ஸ்டோமாவுக்குப் பயன்படுத்தலாம்.

உங்கள் பிள்ளைக்கு நோய்த்தொற்றின் வேறு ஏதாவது அறிகுறிகள் இருந்தால் (சிவப்புநிறம் பரவுதல், காய்ச்சல் மற்றும் வலி), உங்கள் பிள்ளைக்கு மிகவும் கடுமையான நோய்த் தொற்றுக்குரிய மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

உங்கள் குழந்தையின் உடல்நலப் பராமரிப்பாளர் சக்தி கூடிய நுண்ணுயிர் கொல்லி மருந்து ஒன்றினைப் பரிந்துரைக்கக் கூடும்.

மிகவும் பொதுவான ஸ்டோமா நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள்:

 1. ஃபியூசிடிக் அமிலம் போன்ற ஒரு வழமையான நுண்ணுயிர் கொல்லி மருந்து. இது நேரடியாக ஸ்டோமாவுக்கு நீங்கள் பூசும் ஒரு கிரீம்.
 2. செபலெக்சின் போன்ற வாய்வழியாக எடுக்கும் நுண்ணுயிர் கொல்லி மருந்து.

  இது உங்கள் பிள்ளை வாய் மூலமாகவோ அல்லது குழாய் வழியாகவோ எடுக்கும் ஒரு மருந்து.

நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் வேலை செய்யாவிட்டால், உங்கள் பிள்ளையின் ஸ்டோமாவிலிருந்து சல்லடைத்

துணியால் எடுக்கும் ஒரு சிறிய மாதிரி (swab) பரிசோதிப்பதற்காக அனுப்பப்பட வேண்டியிருக்கும், மேலும் அவர் எடுக்கும் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை மாற்ற வேண்டியிருக்கும். சீழ்க்கட்டி ஒன்றைக் கண்டறிவதற்கு அல்ட்ராசவுண்ட் ஒன்று அவசியமாக இருக்கலாம்.

நோய்த் தொற்றினைத் தவிர்த்தல்

 • குழாய் மற்றும் ஸ்டோமாவைக் கையாளும் முன்னர் எப்பொழுதும் உங்கள் கைகளைக் கழுவவும்.
 • G/GJ குழாய் வைத்திருக்கும் இடத்தை சோப்பு மற்றும் நீர் கொண்டு தினமும் சுத்தம் செய்யவும்.
 • G/GJ குழாய் வைத்திருக்கும் இடத்தை உலர்வாகக் காற்றுப் படுமாறு திறந்து வைக்கவும்.
 • கசிவு அல்லது அதிகப்படியான வெளிப்போக்கை உறிஞ்சுவதற்குத் தேவைப்படாவிட்டால் எதுவிதக் காயக் கட்டுகளையும் பயன்படுத்த வேண்டாம்.

ஸ்டோமாவிலிருந்து அதிகப்படியாக வெளியேறும் இரைப்பை உள்ளடக்கத்தினால் ஏற்படும் சருமத்தின் அரிப்பைத் தடுக்கவும்.

Last updated: September 17 2019